OurUmmah.org

One World One Ummah

OurUmmah.org இன் சிறப்பு பதிவுகள்

நைஜீரியா அரசப் படை  படுகொலைகள் -Execution-style killing

Written by poralikall

January 30, 2010 at 8:18 pm

யெமனுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு அப்துல்லாஹ் ஸாலிஹிக்கு முடிவு

leave a comment »

OurUmmah: நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. இடம்பெற்ற இத்தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளரான உப ஜனாதிபதி அப்துர் ரப் மன்ஸூர் ஹாதி மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்று உத்தியோகபூர்மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது .  உத்தியோகபூர் முடிவு வெளியாக சில நாட்கள் ஆகும் என்று யெமன் செய்திகள் தெரிவித்துள்ளது. யெமன் முன்னால் சர்வாதிகாரி ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்காவின் வழிநடத்தலில் கண்டுகொண்ட உடன்பாட்டுக்கு அமைவாக நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

February 22, 2012 at 10:20 am

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமில் அத்னானின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

leave a comment »

OurUmmah: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமில் -administrative detention-விசாரணை இல்லாமல் சிறையில் வதைக்கப்பட்டு வந்த பலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார் என்று பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றன.ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் Special Rapporteur on the situation of human rights in the Palestinian territories occupied since 1967. என்ற விசேட அறிக்கை Read the rest of this entry »

Written by poralikall

February 22, 2012 at 9:52 am

கிலாபத் அழிக்கப்பட்டு 88 ஆண்டுகள்

leave a comment »

OurUmmah: துருக்கியில் பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி முஸ்லிம் உலகின் புதிய அரசியல் ஒழுங்கு ஒன்றின் முன்னோடியாக பார்க்கப்படுகின்றது. துனூசியாவிலும், எகிப்திலும் தேர்தல் மூலம் வெற்றிபெற்றுள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மற்றும் மொரோகோவிலும் , குவைத்திலும் , வெற்றி பெற்றுள்ள இஸ்லாமிய அரசியல் சக்திகளும் ,இன்னும் லிபியாவிலும் , யெமனிலும் வெற்றிநோக்கி நகரும் மக்களும் துருக்கியின் மாதிரி அரசியலை தமது முன்மாதிரி அரசியலாக கைகொள்ள விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர் . Read the rest of this entry »

Written by poralikall

February 21, 2012 at 9:59 pm

எகிப்தில் மே மாதம் ஜனாதிபதித் தேர்தல்

leave a comment »

OurUmmah: எகிப்து ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் பதிவு எதிர்வரும் மார்ச் 10ம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதை தொடர்ந்து அனைத்து உள்ளூராச்சி மன்றங்களுக்கான தேர்தல் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் இடைக்கால ஆளும் இராணுவ கவுன்சிலுடனான சந்திப்பைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் முஹமட் அத்தியா தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

February 19, 2012 at 7:48 pm

ஷஹீத் ஹஸன்-அல்-பன்னாஹ் – மறக்கமுடியாத இஸ்லாமிய ஆளுமை

leave a comment »

யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்
OurUmmah: நபி(ஸல்) கூறினார்கள்; “அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்” (அபூதாவூத்) – ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் இஸ்லாத்தை புனர்நிர்மாணிக்க ஒருவரை அனுப்பி வைக்கிறான் என்ற நபிமொழியின் அடிப்படையில், 20-வது நூற்றாண்டின் துவக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட முஸ்லிம்களை காப்பாற்றவும், Read the rest of this entry »

Written by poralikall

February 17, 2012 at 9:42 am

எகிப்து பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது அதான் கூறிய ஸலபி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

leave a comment »

OurUmmah: எகிப்து பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதான் தொழுகைகான அழைப்பு விட்டுள்ளார் . கடந்த செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகை வேளையில் ஸலபி கட்சியான அந்நூர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மம்தூஹ் இஸ்மாயீல் எழுந்து அதான் கூற துவங்கினார். உடனே சபாநாயகர் ஸஅத் அல் கதாதனி பாராளுமன்றம் அதான் கூறும் இடமல்ல அதற்கு பாராளுமன்ற அவைக்கு அருகில் மஸ்ஜித் இருக்கிறது அமைதியாக அமருமாறு கூறியுள்ளார் . Read the rest of this entry »

Written by poralikall

February 12, 2012 at 8:20 pm

மோடியின் குஜராத் வளர்ச்சிப் பாதையில்.. உண்மை என்ன ?

with one comment

மு.குலாம் முஹம்மது
OurUmmah: “இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத்.” அதுவும் மோடியின் தலைமையில். மோடியை அப்படியே தூக்கி மன்மோகன் சிங் இருக்கும் ஆசனத்தில் வைத்துவிட்டால் (பிரதமர் பதவியில்) இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் குஜராத்தில் நடக்கும் யதார்த்தங்கள் வேறு விதமாக இருக்கின்றன. இதனை அறிந்த ஆய்வாளர்கள் Read the rest of this entry »

Written by poralikall

February 10, 2012 at 10:16 am

ஹமாஸ் வேண்டுமா இஸ்ரேல் வேண்டுமா அப்பாஸ் தீர்மானிக்க வேண்டும்

leave a comment »

OurUmmah: பலஸ்தீனில் ஹமாஸும், பதாஹும் இணைந்து ஐக்கிய அரசை உருவாக்கியதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸுடன் சேர்ந்து ஐக்கிய அரசை உருவாக்குவதா இஸ்ரேலுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதா? என்பதை பலஸ்தீன் அரசு தீர்மானிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குமுறியுள்ளார். ஹமாஸுடன் ஐக்கியமும், இஸ்ரேலுடன் சமாதான பேச்சுவார்த்தையும் இணைந்து செல்ல முடியாது என நெதன்யாகு கொக்கரிக்கிறார். Read the rest of this entry »

Written by poralikall

February 7, 2012 at 8:55 pm

குவைத் பாராளுமன்றத்தை இஸ்லாமிய அரசியல் கட்சி கைப்பற்றியுள்ளது

with one comment

OurUmmah: குவைத்தில் நேற்று இடம்பற்ற பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது , கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தை தொடர்ந்து அதன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற்றது . இதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது மொத்தமாக 50 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 34 ஆசனங்களை இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது Read the rest of this entry »

Written by poralikall

February 3, 2012 at 9:50 pm

Posted in Uncategorized

ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூனின் துரோகம்

with one comment

OurUmmah: அமெரிக்காவின் கைப்பாவை என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன், காஸா பகுதிக்கு சென்றபோதும் அங்கு இஸ்ரேலிய வதை முகாம்களில் வைக்கபட்டுள்ள கைதிகளின் உறவினர்களையும் ,இஸ்ரேலிய சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களையும் சந்திக்க மறுத்துள்ளதுடன் அந்த வதையுறும் மக்களின் எந்த பிரதிநிதியையும் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதியையும் மறுத்துள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

February 3, 2012 at 8:00 pm

எகி்ப்து மக்கள் எழுச்சி ஏற்படுத்தாத இழப்பை விளையாட்டு ஏற்படுத்தியுள்ளது

leave a comment »

OurUmmah: எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்க தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் காரணமாக   74 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எகிப்துப்த்தின் உள்ள போர்ட் நகரில் உதைபந்தாட்ட அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய அணிகள் மோதும் போட்டிக்கு ஏற்பாடாகியது அதன் ரசிகர்கள் மத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு மோதல் பெருந்திரளான மக்கள் மத்தில் பாரிய மக்கள் நெருசலை Read the rest of this entry »

Written by poralikall

February 2, 2012 at 8:49 pm

உஸாமாவை காட்டி கொடுத்தவர் மீது தேசதுரோக குற்றமும் அமெரிக்காவின் கவலையும்

leave a comment »

OurUmmah: அஷ்-ஷஹீத் உஸாமா பின்லாதின் இரகசிய இருப்பிடம் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கு தகவல் வழங்கியதற்காக பாகிஸ்தான் நிர்வாகம் கைது செய்துள்ள மருத்துவரான ஷகீல் அப்ரிடி கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகர் மீது அத்துமீறி நுழைந்த அமெரிக்க சிப்பாயிகள்  உஸாமா பின்லாதின் உட்பட நாள்வரை கொலைசெய்தனர். உஸாமாவின் இரகசிய இடம் தொடர்பான முக்கிய தகவலை அமெரிக்க CIA முகவராக செயல்பட்டு ஒரு குழுவை இயக்கி வந்த அப்ரிடி என்பவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் Read the rest of this entry »

Written by poralikall

January 28, 2012 at 10:22 pm

மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்: மீள்பதிவு

leave a comment »

அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம்
OurUmmah: பிரான்ஸில்  கிண்டல், நையாண்டி ஆகியவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் சஞ்சிகையான ‘ஷார்லி எப்தோ’ Charlie Hebdo என்ற பிரான்ஸ் மொழி பத்திரிகை மனிதர்களுக்கான இறுதித் தூதர் முஹமத் (ஸல்) அவர்களை மீண்டும் நையாண்டி செய்து தனது சஞ்சிகையின் முகப்பு பக்கதில் காட்டூன் மற்றும் செய்திகளை வெளியிட்டு வன்முறையை தூண்டியுள்ளது. இதனால் கோபம் கொண்ட இனம் தெரியாதவர்களினால் அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்டுள்ளது. விரிவாக…

Written by poralikall

January 28, 2012 at 9:02 pm

எகிப்தின் புதிய பாராளுமன்றம் பதவியேற்பு

leave a comment »

OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபை நேற்று பதவி ஏற்றுள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்றுள்ள எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான உத்தியோகபூர்வமாக  நேற்று பதவியேற்றுள்ளது. இது எகிப்திலும் ஏணைய நாடுகளிலும்  மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபை மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 498 உறுப்பினர்களையும் இராணுவ நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களையும் கொண்ட 508 மொத்த உறுப்பினர்களுடன் Video விரிவாக…

Written by poralikall

January 24, 2012 at 11:54 pm

எகிப்தின் பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி

with 3 comments

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று மிகப் பாரிய வெற்றி பெற்றுள்ளது. இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி 47 வீதமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 235 ஆசனங்களை கைப்பற்றி முதல் தரத்தில்  வெற்றி பெற்றுள்ளது. ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான அன் நூர் கட்சி  25 வீததிற்கு நெருக்கமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 125 ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

January 22, 2012 at 8:25 pm

இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா ?

leave a comment »

OurUmmah: ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்றதாக தெரிவித்து சில உயர் இராணுவ அதிகாரிகளை ஷேக் ஹஸீனா அரசு கைது செய்துள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் தீவிர சிந்தனையை கொண்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்துள்ளார். இதனை எதிர் தரப்பினர் ஆளும் தரப்பின் நாடகம் என்று தெரிவித்துள்ளனர் .

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு இராணுவப்புரட்சி முயற்சிக்கு பிறகு இராணுவத்திற்கும், ஷேக் ஹஸீனா அரசுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு தீவிரமடைந்துள்ளதை Read the rest of this entry »

Written by poralikall

January 20, 2012 at 8:20 pm

அடுத்து ஈரானை தாக்க அமெரிக்கா சந்தர்பம் தேடுகிறதா ?

leave a comment »

OurUmmah: “ஈராக் , ஆப்கானிஸ்தான் அடுத்து அமெரிக்கா கால் வைக்க தீர்மானித்துள்ள நாடு ஈரானாக இருக்கலாம்” என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தொடராக கருத்துரைத்து வருகின்றனர். இதேவேளை அமெரிக்கா ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க சட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமுதாயத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஈரான் அணு குண்டு தயாரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டது. ஈரானும் அணு ஆயுதம் தயாரிப்பதாக யுரேனியம் செரிவாக்களை தான் செய்வதாக தெரிவித்துள்ளது, அமெரிக்காவின் பொருளாதார தடையை தொடர்ந்து Read the rest of this entry »

Written by poralikall

January 15, 2012 at 8:53 pm

எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஹிஜாபுடன் தொலைகாட்சி நிகழ்சி நடத்த அனுமதி

leave a comment »

OurUmmah:  எகிப்து அரச தொலைகாட்சிகளில் பெண்கள் ஊடகவியலாளர்கள்  நிகழ்சிகளை நடத்தும்போது ஹிஜாப் அணிய பல ஆண்டுகளாக இருந்து வந்த தடைக்கு எதிராக எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்கள் ஹிஜாப்புடன் தொலைகாட்சிகளில் நிகழ்சிகளை நடத்த உரிமை பெற்றவர்கள் என்று  எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

எகிப்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தாலும் எந்த பெண்ணும் ஹிஜாபுடன் நிகழ்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது இதனால் பல பெண்கள் தமது வேலைகளை தூக்கி எறிந்துள்ளனர். Read the rest of this entry »

Written by poralikall

January 12, 2012 at 9:56 pm

ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை

leave a comment »

OurUmmah: ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணு விஞ்ஞானிகள் படுகொலை வரிசையில் மற்றுமொரு அணுத்துறை விஞ்ஞானி கார் குண்டின் மூலம் கொல்லப்பட்டுள்ளார். ஈரான் நதான்ஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள யுரேனிய செறிவாக்கல் மையத்தில் பணியாற்றிய அணு விஞ்ஞானி முஸ்தபா அஹ்மதி ரோஷன் இன்று படுகொலைச் செய்யப்பட்துள்ளார் இவரது கொலையின் பின்னணியில் மொசாத், இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

January 11, 2012 at 10:57 pm

எகிப்தில் மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி

leave a comment »

OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் இஹ்வானுல் முஸ்லிமீன் மற்றும் அன் நூர் கட்சி ஆகியன 62.2.வீதமான வாக்குகளை பெற்றுள்ளது என்று எகிப்தின்  தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது . இது தவிர மற்றுமொரு இஸ்லாமிய கட்சியான அல் வசத் என்ற கட்சி 2 வீதமான வாக்குகளை கைப்பற்றியுள்ளது.

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகளின் படி Read the rest of this entry »

Written by poralikall

January 8, 2012 at 9:00 pm

பிரதமர் அர்துகானின் அரசை கவிழ்க்க சதி செய்த துருக்கி முன்னாள் இராணுவ தளபதி கைது

leave a comment »

OurUmmah: துருக்கி முன்னாள் இராணுவ தளபதி இன்று வெள்ளிகிழமை கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான இஸ்லாமிய பின்னணியை கொண்ட அரசாங்கதை கவிழ்க்க பயங்கரவாத அமைப்பு ஒன்றை வழிநடத்தி வந்தார் என்ற குற்றசாட்டின் கீழ் ஜெனரல் இல்கர் பாஸ்புக் என்ற முன்னாள் இராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ள அதி உயர் இராணுவ அதிகாரியாக இவர் உள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

January 6, 2012 at 9:26 pm

எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான இறுதி சுற்று தேர்தல் நடைபெறுகிறது

leave a comment »

OurUmmah: எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் 498 ஆசனங்களுக்கான மூன்றாம் சுற்று தேர்தல்  நேற்று செவ்வாய் கிழமை ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு சுற்று தேர்தல்கள் முடிவுற்றுள்ளது. இடம்பெற்ற இரண்டு சுற்றுத் தேர்தல்களிலும் இஸ்லாமிய கட்சிகள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது. நீதிக்கும் சுதந்திரதிற்குமான கட்சி- கூட்டணியாக- 160 வரையான ஆசனங்களையும் அன் நூர் 83 வரையான ஆசனங்களையும் கைப்பற்றி உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது . Read the rest of this entry »

Written by poralikall

January 4, 2012 at 9:34 am

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவுக்கு துருக்கியிலும் அமோக வரவேற்பு

leave a comment »

OurUmmah: பலஸ்தீன காஸா பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா நேற்று துருக்கி சென்றுள்ளார் துருக்கி சென்றுள்ள அவருக்கு துருக்கி மக்கள் அமோக வரவேற்பு வழங்கியுள்ளனர் , துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் அவருக்கு விசேட வரவேற்பு வழங்கியுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையில் பல விடயங்கள் கலந்தாலோசிக்ப்பட்டுள்ளது. இதன்போது காஸாவுக்கான விசேட உதவி திட்டம் ஒன்றை துருக்கி பிரதமர் அறிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

January 2, 2012 at 10:51 pm

இஹ்வான்களின் மேரி கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

with 14 comments

OurUmmah: புத்தாண்டில் கிறிஸ்தவ மக்களை வாழ்த்துவதற்காக இஹ்வான் அமைப்பு பிரதித்தலைவர் டாக்டர் மெஹ்மூத் இஸ்ஸத் தலைமையில் உயர் மட்ட உறுபினர்களை கொண்ட குழுவை தேவாலயங்களுக்கு அனுப்புயுள்ளது. புத்தாண்டு தினத்தில் தேவாலயங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உயர் மட்ட குழுவினர் கிஸ்தவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேவேளை கடந்த கிரிஸ்மஸ் பண்டிகையின் போது இஹ்வான் FJP தேவாலயங்களுக்கு சென்று தமது மேரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .படங்கள் Read the rest of this entry »

Written by poralikall

January 1, 2012 at 8:56 pm

ஆப்கான் தாலிபான் அமெரிக்காவின் எதிரியல்ல: அமெரிக்கா

leave a comment »

OurUmmah: தலிபான் இயக்கத்துடன் பேசப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமெரிக்கா அரசாங்க அறிக்கை ஒன்று ஆப்கான் தாலிபான் இயக்கம் அமெரிக்காவின் எதிரியல்ல என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேச்சுக்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக தகவகள் தெரிவிக்கின்றது.

இதேவளை தாலிபான் அமைப்பு கட்டாரில் ஒரு அலுவலகத்தை திறப்பதற்கு தான் எதிர்ப்பை தெரிவிக்க மாட்டேன் என்று ஆப்கான் கர்சாய் தெரிவித்துள்ளார் , கட்டாரில் துறக்கப்படவுள்ள தாலிபான் அலுவலகம் பேச்சுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

Written by poralikall

January 1, 2012 at 8:00 pm

Posted in Uncategorized

இமாம் யூசுப் அல் கர்ழாவியின் கண்டனம்

with one comment

OurUmmah: நைஜீரியாவில் கிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச சர்வதேச ஜம்இயதுல் உலமா சபையின் தலைவரான கலாநிதி யூசுப் அல் கர்ழாவி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் யார் நடத்தினார்கள் என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றது இதற்கு முன்னரும் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது அவை சில இஸ்லாமிய அமைப்புகள் அதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டபோதும் நாட்டின் இராணுவ உளவு அமைப்புதான் இதற்கு காரணம் என்று ஆதாரங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

Written by poralikall

December 31, 2011 at 9:27 pm

ஹமாஸ், இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவுதான்: ஹனியா

with 4 comments

OurUmmah: பலஸ்தீன பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா எகிப்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள தகவலில் ஹமாஸ் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவு என்று தெரிவிதுள்ளார். -أن حركة حماس لا تخفى انتماءها للإخوان، وأنها تمثل الحركة الجهادية للجماعة.-இப்படி கூறியதன் மூலம் பலஸ்தீன விடுதலை போரில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் காசாவில் ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை ஹமாஸ் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புடன் உள்ள இணைப்பை மறைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார் .Video Read the rest of this entry »

Written by poralikall

December 28, 2011 at 10:35 am

எகிப்தை ஆளத் தயாராகும் இஸ்லாமிய கட்சிகள்

with 8 comments

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி அரசியல் யாப்பை வரைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்ற சில ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. யாப்பை வரைய முன்னர் இராணுவ நிர்வாகம் தனது அதிகாரத்தை துறந்து அதனை பொது மக்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் அவர் இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபடும் சிறிய அமைப்புக்கள் கூறிவருகின்றது. இதற்கு பதில்வழங்கியுள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு யாப்பை வரைய முன்னர் ஒருவரை ஜனாதிபதியாக நியமித்தால் அவர் ஹுஸ்னி முபாரக்கை விடவும் சர்வாதிகாரதன்மையுடன் செயல்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

December 27, 2011 at 8:56 pm

கடும்போக்காளர் பூட்டினுக்கு எதிரான மீண்டும் ஆர்பாட்டம்

leave a comment »

OurUmmah: ரஷ்யாவில் மீண்டும் ஆர்பாட்டம் வெடித்துள்ளது அந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிர கணக்கானவர்கள்  கலந்து கொண்துள்ளனர். அதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பூடின் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மிஹாலி கோபர்சேவ் தெரிவித்துள்ளார். தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல்களைக் கண்டித்து ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில், நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

December 25, 2011 at 5:54 pm

அமைதியான தேர்தலும் ஆர்பாட்டமும்

leave a comment »

OurUmmah: எகிப்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் நூற்றுக் கணக்கானவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்துள்ளனர். எகிப்தில் தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகிறபோதும் தேர்தலில் முதல் கட்டம் ஆரம்பம்  முதல் சிலர் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் எகிப்தில் பாராளுமன்ற தேர்தலின் இரண்டு கட்டங்கள் அமைதியான முறையில் அதி கூடிய மக்களின் வாக்களிப்புடன் இடம்பெற்று இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பெரும்தொகை வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

December 22, 2011 at 8:29 pm

Posted in Uncategorized

Follow

Get every new post delivered to your Inbox.

Join 35 other followers