OurUmmah.org

One World One Ummah

Archive for December 2009

ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள்…

leave a comment »

2008 டிசம்பர் மாதத்தின் அந்தக் கடைசி நாட்கள்…  உங்கள் ஞாபகத் தை மெல்லத் தட்டி திறந்து பாருங்கள். உலகின் மனசாட்சி செத்துப்போய்விட்ட ஒரு தருணத்தில்… எதேச்சதிகார ஆதிக்கச் சக்திகளின் கொடூரமான மறுபக்கத்தைத் தோலுரித்துக் காட்டிய அந்தப் இருபத்தி இரண்டு நாட்கள்… இன்றுவரை கடலெனப் பெருகி ஓடும் எம் சொந்தங்களின் ரத்தம்…

இந்தப் புகைப்படங்களை நினைவிருக்கிறதா? இவை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவோ ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காகவோ பற்பல வர்ணங்களில் வெடித்துச் சிதறும் வானவெடிகளா? இல்லை.

CORRECTION-MIDEAST-ISRAEL-GAZA-CONFLICT-UN

சர்வதேசரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ள நாசகார வெண்பொஸ்பரஸ் குண்டுகள் அடுக்கடுக்காகப் பொழியப்படும் கோரக்காட்சிதான் இது. வெடிக்கும் போதே பற்பல துண்டங்களாகச் சிதறிவெடித்து மனிதத் தோலையும் சதையையும் அப்படியே உருக்கிவிடும் கொடூரமான குண்டுகள் அவை. ‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’  என்றான், பாரதி. உலகத்துக்கே பொலீஸ்காரனாய் கூவிக்கூவித் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் பலஸ்தீன் ஆண்களும் பெண்களும் பச்சிளம் பாலகரும் தள்ளாத முதியோரும் உயிரோடு பொசுங்கிப் போவதைக் கண்டும் காணாதது போல, இதயமற்ற இஸ்ரேலின் அரக்கத்தனத்தை ‘ இஸ்ரேலின் தற்காப்பு யுத்தம்’ என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்ற அந்தக் கறுப்பு நாட்களை மீண்டும் ஒருதரம் உங்கள் நினைவுப் புத்தகத்திலிருந்து திருப்பிப் பாருங்கள்…  .

gazaslide_1__585x43_464431a

தங்கள் சொந்த நிலத்திலேயே அடிமைகளைப் போல உரிமைகள் அற்று வாழும் பரிதாப நிலை எங்கள் மக்களுக்கு. ஐரோப்பாவில் அடியும் உதையும் பட்டு, அண்டிப் பிழைக்கவந்த பிடாரிகள், இன்முகத்தோடு இருப்பிடமளித்த இஸ்லாமிய பூமியை சூழ்ச்சிகளாலும் அடாவடித்தனத்தாலும் அபகரித்துக்கொண்டு அந்த அப்பாவி முஸ்லிம்களுக்கு இதுகாலம் வரை செய்துவரும் அட்டூழியங்கள் ஒன்றா இரண்டா? எண்ணிக் கணக்கிட்டுப் பார்க்கத்தான் முடியுமா?

captive-children1

தேடுதல் வேட்டை, சுற்றி வளைப்பு என்ற போர்வையில் தினந்தினம் எத்தனை அப்பாவிகளைக் கைதுசெய்து இழுத்துப் போய்த் தமது சித்திரவதைக்கூடங்களில் அடைத்து வைத்துத் துன்புறுத்துகின்றனர்?

அப்படிக் கடத்திக்கொண்டு செல்லப்படுவோரில் எத்தனை எத்தனை பேர் பெண்களும் குழந்தைகளும் உள்ளனர்? அந்த சீருடை மிருகங்கள் எமது பெண்களைக் கடித்துக் குதறுவதைக் கண்டும் கேட்டும் எமது உள்ளங்கள் உருகவில்லையா?

prisoners_big_woman

தமக்குரிய குழந்தைப்பருவத்தின் இயல்பான வசந்தத்தை நுகர முடியாமல் சிறைக்கூடங்களிலும் அகதிமுகாம்களிலும் அல்லலுறும் பச்சிளம் பாலகர்களைப் பார்த்துத்தான் மனங்கலங்கவில்லையா?

இஸ்ரேலியச் சிறைகளிலே முஸ்லிம் நோயாளிகளுக்கு மருந்தில்லை…மருத்துவப் பராமரிப்பில்லை… அடித்தடித்தே குற்றுயிராய்க்கிடக்கும் எமது சகோதர சகோதரிகளின் உடல் உள் உறுப்புகளை வெட்டியெடுத்து தமது கூலிப்பட்டாளத்துக்குப் பொருத்திக்கொள்ளும் ஈனத்தனமான உறுப்புத் திருட்டைக் கேள்விப்பட்டுத்தான் நெஞ்சம் கொதிக்கவில்லையா?

images_news_2009_08_20_organ-harvesting_300_01

நான்கு புறமும் முற்றுகை, பொருளாதாரத் தடை என்று கொஞ்சங்கொஞ்சமாக அந்தப் பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொல்வதில் திருப்தி காணாமல்தான் காஸாமீது நெஞ்சை நடுங்கச் செய்யும் கொடூரமான ஆக்கிரமிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்டது இஸ்ரேல்.

அந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் எத்தனை எத்தனை  பிஞ்சுப்பூக்கள் பூத்துக் குலுங்கு முன்னரே பொசுங்கிப்போயின! பூக்களுக்குத் தீவைத்த கொடுங்கோலர்களைப் பாருங்கள்!

burnt-alive-2

நெஞ்சில் ஈரம்வற்றிப்போன அந்த நீசர்களுக்கு ஓன்றுமறியாத இந்தப் பாலகர்கள் என்ன தீமை செய்துவிட்டார்கள்?

burnt-alive

இதையும் சற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்… உயிருடன் கருகிப்போன சின்னஞ்சிறு கைக்குழந்தை…

baby_khan_younis

பஞ்சுப் போன்ற அந்தப் பிஞ்சு உடல் கொடூரமான வெண்பொஸ்பரஸ் அமிலத்தில் வெந்து கருகியபோது எப்படியெல்லாம் கதறித் துடித்திருக்கும்? இந்தக் காட்டுமிராண்டித் தனமான தண்டனைக்கு ஆளாவதற்கு அந்தச் சின்னஞ்சிறு சிசு என்ன அநீதிசெய்தது?

கண்ணுக்கு முன்னால் தம் குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு இவர்களைப் போலவே பரிதவிக்கும் அன்னையர், தந்தையர் எத்தனைபேர் அங்கே….

balousha-family LEBANON ISRAEL MIDEAST FIGHTING

குண்டுத் தாக்குதலால் இடிந்துபோன வீட்டுக்குள் உயிரிழந்த ஒரே குடும்பத்தின் ஐந்து மலர்கள் இவர்கள்…

images_news_2008_12_31_gaza-children-killed291208_300_01

56428211

இந்தப் பாலகர்களைப் பாருங்கள்…  கல்லுக்குள்ளும் ஈரமிருப்பதைக் கண்டிருக்கிறோம் நீர்த்துளிகள் கசிவதைக் கண்டு…ஆனால், இஸ்ரேலியக் கொடியவர்களுக்கு இதயமே கல்லாகி இருப்பதை நேரில் பார்க்கிறோம் பச்சிளம் பாலகரின் ரத்தத்தை இப்படி சிந்தக்கண்டு…

உயிரோடு மண்ணுக்குள் புதையுண்டுபோன எத்தனை எத்தனை சிறார்கள் இவர்களைப்போல… புதையுண்டு போனவை இந்த உயிர்கள் மட்டும்தானா? முழு உலகத்தினதும் நீதியும் நியாயமும் தான்!

148175
falluja2-1-10-2004_jpg

இதோ உள்ளத்தைக் கசக்கிப் பிழியும் மற்றொரு காட்சி…

உயிரோடு மண்ணுக்குள் புதையுண்டுபோன இன்னமும்எத்தனை சிறார்கள் இவர்களைப்போல… புதையுண்டு போனவை இந்த உயிர்கள் மட்டும்தானா? இல்லை… இவ்வுலகின் மனிதாபிமானமும் மனித விழுமியங்களும்தாம்..

ஒரு தாயும் அவளின் நான்கு குழந்தைகளும் ஒன்றாகவே இவ்வுலகை நீத்த இந்த உள்ளம் உருக்கும் காட்சியைப் பாருங்கள்…

4-childrenmother

பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த மாணவமணிகள் இரத்த வெள்ளத்தில் மிதந்த காட்சியைக் கண்கொண்டு பார்க்கத்தான் முடிகிறதா?

MIDEAST-PALESTINIAN-ISRAEL-GAZA MIDEAST-ISRAEL-GAZA-CONFLICT-UN
ஐ.நா. அலுவலகமாவது தப்பியதா?

பதினாறு நாட்கள் இஸ்ரேல் மேற்கொண்ட அட்டகாசங்களினால் எத்தனைபேர் இன்னமும் அங்கவீனர்களாய்… நடைபிணங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி எண்ணிப் பார்க்கிறோமா?

s0-rap00

இந்த நிமிஷம் வரை உடலாலும் உள்ளத்தாலும் எத்தனையோ இன்னல்களை அனுபவித்துவரும் இவர்களுக்காக நாம் என்னதான் செய்துவிட்டோம்!

injuredboy

இனி இந்த உலகத்தின் வர்ணங்களை.. அழகிய காட்சிகளைக் … ஏன் தன் தாயின் முகத்தைக்கூடக் காணமுடியாமல் விழிகளை இழந்துவிட்ட இந்த சிறுவனைப் பாருங்கள்…

இன்றுவரை எத்தனையோ கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் சொல்லொணாச் சித்திரவதைகளையும் அனுபவித்துவரும் இவர்களின் பொருட்டு நாம் என்னதான் செய்துவிட்டோம்!

shifa-hospital-icu-6-year-with-brain-trouma

பைத்துல் அக்ஸாவையும் அல்குத்ஸையும் மீட்பதற்காக எம் சார்பாகப் போராடிக் கொண்டிருக்கும் இவர்களுக்காக நாம் என்ன உதவி செய்திருக்கிறோம்?

images_news_2009_12_08_aqsa-attacked-0_300_01

இஸ்ரேலியர்களின் எதேச்சதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அந்த விஷப் பாம்புகளின் பல்லைப் பிடுங்கி, அவர்களை ஒடுக்குவதற்காக அவர்களின் பொருளாதாரத்தை ஆட்டங்காணச் செய்வதற்காக எமது ஒருசில அசௌகரியங்களை சகித்துக் கொள்ளத்தான் தயாராக இருக்கிறோமா?

இரத்தக்காட்டேறிகளாய் அப்பாவிகளின் இரத்தத்தை உறிஞ்சும் இஸ்ரேலுக்கு எதிரான எமது பகிஷ்கரிப்புப் போராட்டத்தை உடனே தொடங்குவோம்… குடிநீரில் இருந்து ஆரம்பிப்போம்… நாம் பருகுவது தண்ணீரா இல்லை எமதே சகோதரர்களின் செந்நீரா என்பதைப் பற்றி கலந்துரையாடுவோம்…

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்!

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்!

புகைப்படங்கள் உபயம்: PIC , Freepalastine

Written by poralikall

December 28, 2009 at 1:35 pm

இஸ்ரேல் பயங்கரவாத ஆக்கிரமிப்பு இராணுவம் தாக்குதல் ஒரு வருட பூர்த்தி

leave a comment »

பலஸ்தீன   காஸா பகுதி மீது இஸ்ரேல் பயங்கரவாதிகள் கண்முடித்தனமான, போர் விதிமுறைகளுக்கு எதிரான பயங்கர வாத ஆக்கிரமிப்பு  இராணுவத் தாக்குதல் நடத்தி.  ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி கொன்று குவித்து   கொல்லபட்டவர்களின்   உறுப்புகளை திருடி அமெரிக்காவுகும் ஐரோப்பிய நாடுகளுக்கு இலவசமாக விநியோகம்  செய்து     கொலை தாண்டவம் ஆடி  ஒரு வருடம்  பூர்த்தி அடைகின்றது தற்போதைய நிலையில், பாலஸ்தீன நிலப்பரப்புகளில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம்  தொடர்ந்து கடைபிடித்துவரும் கொலைகள் , உடல் உறுப்பு திருட்டு , மற்றும் பொருளாதார தடைகள் என்பன தொடர்கிறது அங்கே உடல் உறுப்பு திருட்டுகளை தான் செய்வதை வேறு வழி இல்லாமல் ஒத்து கொண்டுள்ளது     ஆனால் அதை பற்றி பெரிதாக கருதாத  ஐ.நா   பொது சுகாதார சேவைகள் அழிந்துபோகும் ஓர் அபாய நிலையை உருவாக்கியுள்ளதாக .மட்டும்  ஐ.நா மன்றத்தின்  கூறுகிறது.

இஸ்ரேல் பயங்கரவாத ஆக்கிரமிப்பு படையை   தொடர்ந்தும்  தாக்கும் ஹமாஸ் காஸா வில்  மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பாக நிர்வாகம்  புரிந்து வருகிறது. இந்த அமைப்பு காஸாவை 2007ளில் தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அன்று முதல் அங்கே இஸ்ரேல் தனது தடைகளை விதித்து மனித வேட்டை யாடிவருகிறது

இஸ்ரேலியத் தடைகள் காரணமாக அசுத்தமான தண்ணீர் மூலமாக பரவும் நோய்களால் குழந்தைகள் உயிரிழக்கும் என்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறும்  ஐ.நா நிறுவனம் தினமும் கொல்லபடும் குழந்தைகள் பற்றி வாய் திறக்கவும் இல்லை

காஸா தாக்குதலை நினைவுகூறும் விதமாக தாக்குதல் நடந்த 22 நாட்களுக்கும் அங்கு நினைவுக் கூட்டங்களை ஹமாஸ் நடத்தவுள்ளது. இதில் ஆக்கிரமிப்புபடையான இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன மக்களை ஓரனியில் திரட்டும் முகமாக பிரச்சாரங்கள் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Written by poralikall

December 28, 2009 at 11:51 am

சுனாமி ஒரு பாடம்

leave a comment »

Written by poralikall

December 26, 2009 at 4:06 pm

வந்தேமதரம் பாடலை தொடர்ந்து பாடுவேன் என்று அடம் பிடிக்கும் ஏ.ஆர். ரஹ்மான்

with one comment

இசை மதங்களை, வேறுபாடுகளை, வெறுப்புகளை கடந்த ஒன்று என்று கூறுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.வந்தேமாதரம் பாடலை இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த ரஹ்மான் பாடியது தவறு என்றும்  முஸ்லிம்கள் இந்த பாடலை பாடுவது ஷிர்க் என்றும்      பல  இஸ்லாமிய அமைப்புகள்  கண்டித்தது குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இந்தியாவின் தேசிய பாடலான வந்தேமாதரம் பாடலை இந்திய சுதந்திரப் பொன்விழாவின் போது வெளியிடப்பட்ட ஒரு இசைத் தொகுப்பில் உணர்சிகரமாக பாடியிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலை தான் தொடர்ந்து பாடிவருவதாகவும்  தெரிவித்தார்.

இந்தப் பாடலின் சில வரிகள் இஸ்லாமிய கோட்பாடுக்கு எதிராக இருப்பதாகவும் இதை முஸ்லிம்கள் பாடக் கூடாது என்றும் இந்திய உலமாக்கள் சபை  என்ற இஸ்லாமிய  அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தமை சர்ச்சையை கிளப்பியிருந்தது.வந்தேமாதரம் பாடலை பாடுமாறு யாரும் தன்னை அப்போது நிர்பந்திக்கவில்லை என்றும், அதே போன்ற நிலை தொடர வேண்டும் என்றும் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், ஒவ்வொருவரின் மத நம்பிக்கைகளும் அது தொடர்பிலான புரிதல்களும் மாறுபட்டவை என்றும் அவை மதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார் .தான் இப்போதும் தனது இசை நிகழ்சிகளை நிறைவு செய்யும் முன்பாக இந்தப் பாடலை பாடுவதாகவும் அவர் கூறினார்.

ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் பிரபல்யமான ஆங்கில  பாடகர் லூன்னிடம் பாடம்  படிக்கட்டும்

லூன் ( AKA LOON) என்ற மிகவும் பிரபல்யமான பாடகர் இசையின் ஹராமான பகுதிகளை முழுமையாக ஒதுக்கி விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு கிறித்தவ வாலிபர் இவரிடம்  ஏ.ஆர். ரஹ்மான் படிப்பினை பெறவேண்டும்

Written by poralikall

December 24, 2009 at 8:44 pm

இஸ்ரேல் துருக்கிய வான்பரப்பில் அத்துமீறினால் ஒரு பூகம்பத்தை எதிர்கொள்ளவேண்டும்

leave a comment »

துருக்கியப் பிரதமர் அர்தூகான் :

ஃபஹ்மி ஹுவைதி (இடது), துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் (வலது)

இஸ்தான்புல் – இஸ்ரேல் துருக்கியின் வான்பரப்பைத் துஷ்பிரயோகம் செய்ய முற்படுமாயின் தமது

நாடு எடுக்கும் எதிர்நடவடிக்கை ஒரு பெரும் பூகம்பமாய் வெடிக்கும் என்று துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் கடுமையாக எச்சரித்துள்ளார்.

துருக்கியுடனான கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, அண்மையில் ஈரானை உளவுபார்க்கும் பொருட்டு இஸ்ரேலிய உளவு விமானங்கள் துருக்கிய வான்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்தமை தான் காரணம் என்று சொல்லப்படும் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி எகிப்திய ஊடகவியலாளர் ஃபஹ்மி ஹுவைதி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்குமுகமாகவே அர்தூகான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அர்தூகான் தொடர்ந்து பேசுகையில், அந்தத் தகவலில் எவ்வித உண்மையுமில்லை. ஆனால், இஸ்ரேல் அவ்வாறு செய்ய முற்படுமாயின், அதற்கான எதிர்வினை ஒரு பூகம்பத்தை எதிர்கொள்வதை ஒத்ததாக இருக்கும் என்று கருத்துரைத்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் காஸாவுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, அங்குள்ள மக்களை அழித்தொழித்தமையை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. காஸாவில் செய்யக்கூடிய அட்டூழியங்களையெல்லாம் செய்ததற்குப் பின்பும், தன்னுடனான இராணுவப் பயிற்சிக்காகத் துருக்கி இஸ்ரேலை அனுமதிக்கும் என்று எதிர்பார்ப்பது நகைப்புக்கிடமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

காஸாவில் இடம்பெற்ற இஸ்ரேலின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தம்

”தமது விருப்பங்களுக்கு மதிப்பளித்து ஆட்சிசெய்வதற்காகவே மக்கள் எமது அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். காஸாவில் இடம்பெற்ற அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் எமது மக்கள் உணர்வுரீதியாக மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, எம்மால் துருக்கிய மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டு செயற்பட  முடியாது. பொதுவாக நாம் எடுக்கும் தீர்மானங்களைப் பொறுத்தவரையில், அவை துருக்கிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதைப் பிரதானமாகக் கொண்டே அமைவதால், துருக்கியுடனான இராணுவப் பயிற்சிக்கு இஸ்ரேலை அனுமதிப்பதில்லை என்ற தீர்மானமும் அந்த அடிப்படையில்தான் எடுக்கப்பட்டுள்ளது” என்பதை துருக்கியின் பிரதமர் வலியுறுத்திக் கூறினார்.

”அத்துடன், இஸ்ரேல் எம்முடன் கொண்டுள்ள அரசியல் தொடர்பினை மற்றோர் தரப்பினர் மீது அத்துமீறிய ஆக்கிரமிப்பினை நடத்துவதற்கான அனுமதிச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. மேலும், அவர்களின் விடயத்தில் நாம் தலையிடாமலோ அல்லது அவர்களுக்குப் பக்கசார்பாகவோ இருப்போம் என்று இஸ்ரேல் எதிர்பார்ப்பதும் தவறானது” என்றும் அர்தூகான் விளக்கினார்.

நன்றி: PIC : freepalestin

Written by poralikall

December 23, 2009 at 8:38 am

பலஸ்தீன் பெண்கைதி தொடந்து 100 நாட்களுக்கும் மேலாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

leave a comment »

ரமல்லா – இஸ்ரேலிய ரமேல் சிறையில் தமது இளைய மகள் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாகத்

தொடர்ந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பெண் கைதி வஃபா அல் பெஸ்ஸின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமான அமைப்புகள் தலையிட்டு, தமது மகள் மீது இஸ்ரேலிய சிறை நிர்வாகம் மேற்கொண்டுவரும் நியாயமற்ற வதைச்செயல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண் கைதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்ப அங்கத்தவர்கள் சென்று கைதியைச் சந்திப்பது, கைதி தன் வழக்கறிஞரைச் சந்திப்பது முதலான அனைத்தையும் தடுத்துள்ளதன் மூலம் வெளி உலகத்துடன் எவ்வகையிலும் தொடர்புகொள்ளவே முடியாமல் இஸ்ரேலிய சிறை நிர்வாகம் தமது மகளைத் துன்புறுத்துவதாக அப் பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பெய்ட் ஹனூன் கடவையருகில் வைத்து 2005 ஜூன் மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட வஃபா, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட்டினால் 12 ஆண்டுகள்- 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,  தனது தண்டனைக் காலத்தில் நான்கரை ஆண்டுகளைத் தற்போது அவர் நிறைவு செய்துள்ளார்.

நன்றி: PIC

free palestine

Written by poralikall

December 19, 2009 at 7:18 pm

முஹர்ரம் முஸ்லிம் உம்மாஹ்வின் புது வருடம் பிறந்துள்ளது.

leave a comment »

முஹர்ரம் முஸ்லிம் உம்மாஹ்வின் புது வருடம்  பிறந்துள்ளது. ஹிஜ்ரி 1430 கழிந்து 1431 துவங்கியுள்ளது. முஸ்லிம் உம்மத்தின் அவலங்களின் பட்டியல் நீண்டு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் புத்தாண்டு வருகை தந்துள்ளது.

முஸ்லிம்  உம்மாஹ்வின் மீது அதன் எதிரிகள் மேற்கொண்ட சிந்தனா ரீதியான கலாசாரப் படையெடுப்பின் விளைவு அது முஸ்லிம் உம்மாஹ் இத்தகைய உணர்ச்சியற்ற- உயிரோட்டமில்லாத நிலையை அடைந்துள்ளது. முஹர்ரம் புதுவருடத்தை விட ஜனவரி முதல் திகதியை அலட்டிக்கொள்ளும் அளவுக்கு,  முஸ்லிம்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றனர்.

முஹர்ரம் எமக்கு ஹிஜ்ரத்தை நினைவுபடுத்துகிறது. நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகள் இடம்பெற்றிருக்க கலீபா உமர் (றழி) அவர்கள் ஹிஜ்ரத் சம்பவத்தை வைத்தே இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்படல் வேண்டும் எனத் தீர்மானித்து, முஹர்ரமை வருடத்தின் முதல் மாதமாக அமைத்தார்கள்.

ஹிஜ்ரத், நபி (ஸல்) அவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் ஒரு திருப்புமுனை என்பதை அன்னார் கண்டமையே இதற்குக் காரணம். ஹிஜ்ரத்தின் பின்பே இஸ்லாத்திற்கென்று ஒரு பூமி, நாடு, சமூகம் என்பன தோன்றின. இஸ்லாம் உலகில் ஒரு சக்தியாக உருவெடுத்தது. நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணி முழுமை பெற்று வெற்றி பெறுவதற்கு ஹிஜ்ரத் ஒரு பீடிகையாக அமைந்தது.

ஹிஜ்ரத் நிகழ்ச்சி நமக்குப் புகட்டிநிற்கும் பாடங்கள் பல. இஸ்லாத்தை உலகில் ஸ்தாபிப்பதற்கு அல்லாஹ்வின் உதவியுடன் அதனை ஏற்றவர்களின் தியாகம், அர்ப்பணம் அவசியம். இவற்றோடு பௌதீக காரணிகளைக் கருத்திற் கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் கருமமாற்ற வேண்டும். அப்போதுதான் இஸ்லாம் உலகில் வாழும், வலுப்பெறும். ஹிஜ்ரத் சொல்லித் தரும் சில பாடங்கள் இவை.

நபி (ஸல்) அவர்களின் இத்தகைய வழிகாட்டல்களை முஸ்லிம் உம்மாஹ் மறந்ததனாலேயே அது இன்றைய இழி நிலையை அடைந்துள்ளது. எனவே, முஸ்லிம்கள் அவர்களின் இஸ்லாத்தை நோக்கித் திரும்பினால் அன்றி வாழ்வில்லை, மறுமைக்கு முன்னால் இம்மை வாழ்வுகூட வளம்பெறப் போவதில்லை. கடந்த பல தசாப்தங்களாக முஸ்லிம்  உலகம் இஸ்லாம் அல்லாத கொள்கைகளை பரீட்சித்துப் பார்த்து படுதோல்வி கண்டுள்ளது. தியாகத்தின் உச்சத்தை நினைவூட்டுகிறது ஒவ்வொரு  புது வருட தொடக்கத்திலும் தியாகங்கள் நினைவூட்டபடுகிறது  மீண்டும் மிக வேகமாக இஸ்லாத்தை நோக்கி அது மீளுதல் வேண்டும். இதுவே முஸ்லிம் உலகின் நலனில் அக்கறையுள்ளவர்கள் விடுக்கக்கூடிய புத்தாண்டுச் செய்தியாக முடியும்.

Written by poralikall

December 16, 2009 at 1:50 pm

ஐரோப்பிய யூனியனின் அறிக்கை பலஸ்தீன் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை

leave a comment »

ஹமாஸ் பேச்சாளர் கலாநிதி ஸமீ அபூ ஸுஹ்ரி

ஹமாஸ் பேச்சாளர் கலாநிதி ஸமீ அபூ ஸுஹ்ரி:

காஸா – பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஓர் அரசியல் தீர்வு,  ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் எதிர்காலம் என்பன தொடர்பில் ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கை பலஸ்தீன் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (08.12.2009) இரவு ஹமாஸ் பேச்சாளர் கலாநிதி ஸமீ அபூ ஸுஹ்ரி பலஸ்தீன் தகவல் மையத்துடனான (PIC) சந்திப்பின்போது, பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் நடுநிலையான சர்வதேச நிலைப்பாட்டை மேற்கொள்வதில் ஐரோப்பிய யூனியன் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பலஸ்தீன் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆதரவான எத்தகைய முன்னெடுப்பையும் ஹமாஸ் வரவேற்கும். அதேவேளை, 1967 ஆண்டுக்குரிய எல்லைகளுடன் பலஸ்தீன் தேசம் ஸ்தாபிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும். ஆனால், பலஸ்தீன் நிலப்பரப்பிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட எந்தவோர் இடத்திலும் இஸ்ரேல் நிலைகொள்வதை அது அங்கீகரிக்கப் போவதில்லை என்று ஸமீ அபூ ஸுஹ்ரி விளக்கமளித்தார்.

கடந்த வியாழக்கிழமை  இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை ‘அமைதியாகத் தீர்க்கும்’ வகையில் இஸ்ரேல் – எதிர்கால பலஸ்தீன் ஆகிய இருநாடுகளுக்கும் ஜெரூசலம் தலைநகராக இருக்கும் என்று ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: PIC

freepalastine

Written by poralikall

December 16, 2009 at 8:08 am

பலஸ்தீன் மக்கள் பிரிவினைத் தீர்மானத்தை 62 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்த்ததைப் போலவே இன்றும் எதிர்க்கிறார்கள்: ஹுஸாம் அஹ்மத்

leave a comment »

காஸா- 1947 ஆம் ஆண்டு பிரிவினையை ஏற்குமாறு நிர்ப்பந்தித்த 181 ஆவது தீர்மானம் பெல்ஃபர் உடன்படிக்கையை சட்டபூர்வமாக்குவதை நோக்காகக் கொண்ட ஒரு சதித்திட்டமாகும் என்று ஹமாஸின் அகதிகள் விவகாரம் தொடர்பான திணைக்களத் தலைவர் ஹுஸாம் அஹ்மத் கருத்துரைத்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) பத்திரிகையாளர்களைச் சந்தித்த அஹ்மத், 62 ஆண்டுகளாகத் தொடரும் இந்தச் சதித்திட்டம் இன்னுமே முடிவுறவில்லை. இதன் பின்னணியாக இருந்து செயல்படும் சர்வதேச சக்திகள் பலஸ்தீனர்கள் தமக்குள் பிளவுபட்டு இருப்பதையே இன்று பெரிதும் விரும்புகின்றன. அதன்மூலம் அவை தமது அரசியல் நலன்களை அடையவே விழைகின்றன. எனினும், இதனாலெல்லாம் பலஸ்தீன் மக்கள் தமது இலட்சியத்தை அடைவதில் சோர்ந்துவிடப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,  பிரிவினைத் தீர்மானம் உண்மையில் (மே 9, 1916) ஸைகஸ்-பிக்கொட் உடன்படிக்கையின் தொடர்ச்சிதான் என்றும், அது அரபுலகத்தைத் துண்டாடியதோடு , பலஸ்தீனைப் பிரித்ததன் மூலம்  ஸியோனிஸ சதித்திட்டத்தை நிலைநிறுத்துவதற்கேற்ற உறுதியான பின்புலத்தையும் பெற்றுக்கொடுத்தது என்றும் அறிவுறுத்தினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், கடந்த 62 வருட காலமாக அமெரிக்காவின் தலைமையில் மேலாதிக்கம் செலுத்திவரும் காலனித்துவ சக்திகள் ‘இஸ்ரேல்’ எனும் இந்த ‘இராணுவ தள’த்தினை ஏதேனுமொரு வகையில் சட்டபூர்வமாக்குவதற்கு இடையறாது முயன்றுவருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் கடந்த 62 வருடங்களாகத் தன்பங்குக்கு பலஸ்தீன் மக்களுக்கும் பிராந்தியத்திலுள்ள ஏனைய அரபு மக்களுக்கும் எதிராகத் தொடர்ச்சியான அத்துமீறல்களையும் அட்டூழியங்களையும் கட்டவிழ்த்துவிட்டபடி, ஒரு இனவாத, மனிதாபிமானமற்ற ஸ்தாபனமாக, தனது இருப்பை நிலைநிறுத்த இடையறாது பாடுபட்டு வருகின்றது என்று சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இரண்டாம் உலகப் போரின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரிவினைத் தீர்மானம்  ஒரு சர்வதேச ஸ்தாபனத்தினால் நிறைவேற்றப்பட்டிருப்பினும்கூட அது சட்டபூர்வமற்றதே. ஏனெனில், இச்சர்வதேச நிறுவனமானது காலனித்துவ சக்திகளின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை உலகின் பல பாகங்களிலும் பரவலாகப் நடைமுறைப்படுத்துவதற்குரிய ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், பலஸ்தீன் மக்கள் பிரிவினைத் தீர்மானத்தை 62 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்த்ததைப் போலவே இன்றும் எதிர்க்கிறார்கள். அந்தத் தீர்மானம் ஒரு போலித்தீர்மானம் என்பதும், பலஸ்தீனர்களின் அங்கீகாரம் இல்லாத நிலையில் அதற்கு எத்தகைய பெறுமானமும் இல்லை என்பதும் ஐ.நா.வுக்கு மிகத் தெளிவாகவே தெரியும் என்றார்.

ஸியோ-அமெரிக்க கூட்டுச்சதித்திட்டத்தினை வெற்றிகொள்ள வேண்டுமெனில், அதனை  பலஸ்தீனர்கள் அனைவரதும்  ஒற்றுமையாலும், தத்தமது வீடுகளைவிட்டுப் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள பலஸ்தீன் அகதிகள் யாவரும் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச்செல்லும் உறுதியான உணர்வினாலும் மட்டுமே சாதிக்கமுடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

நன்றி: PIC

freepalastine.com

Written by poralikall

December 16, 2009 at 7:42 am

உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பான்

leave a comment »

http://thesecretlifeofkat.com/images/uploads/kat_blog_images/famine.jpg

இஸ்லாமிய மார்க்கத்தின்  சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)

முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.

அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:

“நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)

இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். “குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே’ என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின் அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல “குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.” அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி

ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் முறை கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.

(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் “எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது’ என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் “விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் “உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு” என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)

இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.

islamthalam

Written by poralikall

December 15, 2009 at 4:37 am

பொஸ்னியா: கரட்ஸிக்கின் இனச்சுத்திகரிப்பும் உலக மனசாட்சியும்

leave a comment »

றவூப் ஸெய்ன்

சேர்பியப் படையினர் மூன்று மாதக் குழந்தை ஒன்றை அதன் பெற்றோரிடமிருந்து பிடுங்கி தீயில் எறிகின்றனர். வெந்து போன அப்பிஞ்சு உடலை பெற்றோரை உண்ணுமாறு வற்புறுத்துகின்றனர். மறுத்தபோது அவர்களை துப்பாக்கியினால் சுட்டு துடிதுடிக்கக் கொல்கின்றனர்.

இது எப்போது எங்கே நடந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? 1992 ஒக் டோபர் ஒருநாளில் கிழக்கு ஐரோப்பாவில் போல்கன் என அழைக்கப்படும் பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைக்கு ஒரு உதாரணம் இது. மனித நாகரிகமும் பண்பாடும் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் இந்நூற்றாண்டில், அதுவும் அறிவை யும் பண்பாட்டையும் உலகிற்குப் போதிப்பதாகக் கூறிக் கொள்ளும் ஐரோப்பாவில் நிகழ்ந்த காட்டு மிராண்டித்தனம்தான் இது.

அப்போது சேர்பிய படையினர் பொஸ்னிய கிராமங்கள் மீது நடாத் திய அதிரடித் தாக்குதல்களை அடுத்து திணறிப் போன பொஸ்னிய முஸ்லிம்கள் தம் உயிரைக் கையில் வைத்துக் கொண்டு மலையடிவாரங் களையும் மறைவான இடங்களை யும் நோக்கி ஓடிக் கொண்டிருந்த போது சேர்பியப் படையினர் “இப் போது உங்கள் கடவுள் எங்கே” என்று கேட்டனர்.

1992 ஒக்டோபர் மாத பீபீசி செய்தி அறிக்கை போல்கன் பற்றிய பெட்டக நிகழ்ச்சியின்போது இச்சம் பவத்தை அப்படியே ஒலிபரப்பியது. இதனை செவிமடுத்த ஷெய்க் அல் கஸ்ஸாலி அவர்கள், சிலுவை யுத்தத் தில் ஐரோப்பியர் அடைந்த தோல்வி யும் அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர் வும் பொஸ்னிய முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளதை எண்ணி தான் கவலைப்படுவதாகக் கூறி யிருந்தார்.

இதே ஆண்டில் சேர்பியத் தலை நகர் பெல்கிரேடில் முன்னாள் யூகோஸ்லா வியத் தலைவர் மிலோ சொவிகும் அவரது சகாவான கரட்ஸிகும் இலட்சக்க ணக்கான சேர்பியர்களிடையே உரையாற்றினர். “சேர்பியர்களே, முழு ஐரோப் பாவி லிருந்தும் முஸ்லிம்களை துடைத் தழிக்கும் யுத்தமொன்றில் நாம் இறங்கியுள்ளோம். 600 ஆண்டு களுக்கு முன்பாக ஒடோமன் துருக்கி யர்கள் எப்படி நம்மைக் கொன்று குவித்தார்களோ அப்படி இன்று நாம் முஸ்லிம் களைக் கொன்று குவித்து குருதியைக் கொட்ட வேண்டும். வரலாற்றின் இந்தப் பழிவாங்கலை நாம் கனகச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும்” என அவர்கள் இனவா தத் தீயைக் கொழுத்திவிட்டனர்.

ஐரோப்பாவின் இஸ்லாமிய இதயம் எனக் கருதப்படும் போல் கனில் மிலோசொவிக்கும் கரட்ஸிக் கும் கொழுத்திய இனவாதத் தீ, கொழுந்து விட்டு எரிந்தது. அதனால் ஏற்பட்ட இனச் சுத்திகரிப்புப் போர் பல்வேறு கோர வடிவங்களை எடுத் தது. இளம் முஸ்லிம் பெண்களை கதறக் கதற குதறிப் போட்டனர். குரோஷிய முஸ்லிம் இனத் தூய் மையை அழித்து சேர்பியர் களின் இனக் கலப்பை உருவாக்க இந்தக் கொடுமையை இழைத்தனர். அதை அவ்வப்போது பகிரங்கமாகவும் வெளிப்படுத்தினர். இதனால் உள நெருக்கீடு களுக்கு உட்பட்ட ஆயிரக் கணக்கான பெண்கள், தமது உயிரை மாய்த்துக் கொண்டனர்.

1992 முதல் 1995 வரை பொஸ் னிய முஸ்லிம்கள் மீதான இக்கோரத் தாண் டவம் நடைபெற்று சுமார் 17 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. ஆயினும், இன்னும் அந்நாட்டில் மனித எலும்புக் கூடுகள் தோண்டப் படுகின்றன. சேர்பியர்கள் இழைத்த போர்க் குற்றங்களுக்கு சாட்சி சொல் வதாக அவை அமைந்துள்ளன. நேற்று மிலோசொவிக்கிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து சாட்சி களும் இன்று கரட்ஸிற்கு எதிராக எழுந்து நிற்கின்றன. 1990களில் பொஸ்னியாவில் நடந்த சம்பவங் கள் ஒட்டுமொத்த உலகத்தி னதும் மனச் சாட்சியை உறுத்தியது மட்டு மன்றி, பொஸ்னியர்கள் மீதான மிகப் பெரும் அனுதாப அலைகளை யும் எழுப்பியது.

ஒரு முஸ்லிம் பெண்ணின் வயிற் றைப் பிளந்து, அதற்குள் ஒரு நாய்க் குட்டியை வைத்து உயிரோடு தைத்த சேர்பியர்களின் கொடு மைகளை ஆராய்ந்த அப்போதைய மேற்குலக மானிடவியலாளர்கள், சேர்பியர்கள் மனித பரம்பரை அலகுகளிலிருந்து பிறழ்ந்து விட்ட ஓர் இனம் என தமது மானிடவியல் ஆய்வுகளில் சுட்டிக் காட்டும் அளவுக்கு மிகக் குரூரமாக நடந்து கொண்டனர்.

தற்போது போர்க் குற்றவாளி களில் ஒருவரான கரட்ஸிக், ஹேக்கி லுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன் றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். பெல்கி ரேடில் கைதுசெய்யப்பட்ட அவ ருக்கு வயது 64. 1990களில் பொஸ்னி யாவின் மீது சேர்பிய அரச படைகள் நடத்திய யுத்தத்தின்போது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தலைமைத் தளபதியாக கரட்ஸிக் இருந்தார். அவரது கட்டளைகளின் பெயரி லேயே இப்படுகொலைகள் நடந் தன.

விளைவாக, ஒரு லட்சம் பொஸ் னியர்கள் பல்வேறு விதங்களில் படுகொலை செய்யப்பட்டதோடு 2.2 மில்லியன் மக்கள் தமது இருப்பிடங் களிலிருந்து விரட்டியடிக்கப்பட் டனர்.

கரட்ஸிக்கிற்குப் பின் அதிகாரத் திற்கு வந்த பில்ஜானா, ஏற்கனவே 11 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றார். 1990களில் நடந்த படுகொலை களுக்கு தானும் பொறுப் பாக இருந்தார் என்ற அவரது ஒப்பு தல் வாக்கு மூலத்தை அடுத்து பில் ஜானா சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்.

கரட்ஸிக்கிற்கு எதிரான விசார ணைகள் தொடங்கப்பட்ட முதல் நாள் அவர் நீதிமன்றத்திற்கு வருகை தரவில்லை. எனினும், இரண்டாவது நாள் அவருக் கெதிரான குற்றச்சாட்டு கள் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டன. மூன்று பாரதூரமான போர்க் குற்றங்கள் அவர் மீது சுமத் தப்பட்டுள்ளன. பொஸ்னியர்களை படுகொலை செய்தமை; மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள், போர் தொடர்பான சம்பிரதாயங்கள் மற்றும் சட்டங்களை மீறிய மையே அவை. முதல் குற்றச்சாட்டில் ஒரு லட்சம் மக்கள் படுகொலை செய் யப் பட்டதும் உள்ளடங்கும்.

மூன்று ஆண்டுகள் இக்கொலை கள் நடக்கும்வரை ஐ.நா. பாது காப்புச் சபையோ, ஐரோப்பிய ஒன்றியமோ எவ்வித தடுப்பு நட வடிக்கைகளிலும் இறங்கவில்லை. ரஷ்யாவின் சோசலிச ஆதரவுப் பங்காளியான யூகோஸ்லா வியா வொஷிங்டனின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்பட்ட கூட்ட மைப்பு என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தபோதும் ஐரோப்பாவில் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புக்கு உட்படுவதை அமெரிக்காவும் மறை முகமாக ஆதரித்து வந்தது. ஏனெ னில் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப் பாரிய இனச் சுத்திகரிப்புப் போர் இதுவரை ஐரோப்பாவில் பொஸ்னிய முஸ்லிம் களுக்கு எதிராகவே நிகழ்ந்துள்ளது.

இந்த யுத்தம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் எதிரானது என்ப தோடு, பாரம்பரியமாகப் பின்பற்றப் படும் அனைத்து சர்வதேச போர்ச் சட்டங்களை யும் முற்றாகவே உதா சீனம் செய்துள்ளது. ஆயினும், அது மிகப் பெரும் பேசுபொருளாக ஆக் கப்படவில்லை. காரணம் முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு என்பதில் ஐரோப் பாவும் அமெரிக்காவும் ஒரே நிலைப் பாட்டையே கொண்டி ருந்தது.

இவ்வளவு பெருந் தொகையான படுகொலைகளுக்கு அதிகாரபூர்வ மாக ஆணையிட்டவர் கரட்ஸிக். பொஸ்னியாவின் தலைநகர் சரஜே வாவில் பிறந்த இவர், முஸ்லிம் களுக்கு எதிரான இனவெறியை வளர்த்து வந்தார். பல்வேறு முகங் களைக் கொண்ட அவர், பல்வேறு தந்திரோபாயங்களையும் பயன் படுத்தி வந்தார். அவரது இறுதிக் காலத்தில் உளத் தடுமாற்றத்திற்கு உட்பட்டிருந்தார்.

1992 ஏப்ரலிலிருந்து 1995 நவம்பர் வரை பொஸ்னியா முற்றுகையிடப் பட்டு சேர்பிய இராணுவ வெறியர் களின் குரூரத் தாக்குதல்களுக்கு உட்பட்டது. அப்போது சேர்பியப் படை மீது முழு அதிகாரம் கொண்டி ருந்த கரட்ஸிக் திட்டமிட்டு குரோ ஷிய, பொஸ்னிய முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்புச் செய்தார். இது உலகமே தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள உண்மையாகும்.

கரட்ஸிக் பல்வேறு அடையாளங் கள் கொண்டவர். அவரது நெருங்கிய நண்பரான செனடின், கரட்ஸிக் பற்றி சொல்லும் தகவல் ஆச்சரியமளிக் கின்றது. 1960களில் கரட்ஸிக் மிகப் பெரும் எழுத்தாளர். பின்னர், தோற் றுப் போன உளவியலாளர். பின்னர் ஒரு வியாபாரி. அடுத்து வந்த காலங் களில் தீவிர தேசியவாதி. கடைசி யில் ஓர் ஆன்மீகக் குரு. மொத்தத்தில் கரட்ஸிக் தான் போற்றிய தேசிய வாத, இனவாதக் கொள்கைகள் அவரை கொலை யாளியாக மாற்றி, தற்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது.

பொஸ்னியர்களின் வார்த்தையில் சொல்வதானால்; கரட்ஸிக் மில்லி யன் முறை கொல்லப்பட்டாலும் அவர் செய்த படுகொலைகளுக்கு ஈடாகாது. அதையும் தாண்டி தமது உயிர்த் துணைகளை இழந்து தவிக் கும் லட்சக்கணக்கான பொஸ்னிய பெண் களினதும் போருக்குப் பிந்திய உள வடுவினால் அவதிப்படும் ஆயி ரக் கணக்கான அப்பாவிச் சிறுவர் களினதும் சாபம் அவர் இறந்ததற் குப் பின்னரும் நிச்சயம் அவரது கல் லறையின் மீது என்றும் படிந்தி ருக்கும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தில் நடக்கும் இந்த விசாரணை யேனும் நீதியாக நடாத்தப்பட்டு கரட்ஸிக் தண்டிக்கப்பட வேண்டும். ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் எதிராக கரட்ஸிக் இழைத்த குற்றங் களுக்காக ஒட்டுமொத்த மனித குல மும் இன்று எதிர்பார்ப்பது இதையே.

பொஸ்னியா ஹெஸகோவினா 1990ல் முன்னைய யூகோஸ்லாவியாவி லிருந்து பிரிந்து தனிநாடாகியது. 1992-1995 வரை மீண்டும் அதை சேர்பியா வுடன் இணைத் துக் கொள்வதற்கான ஆக்கிரமிப்பு யுத்தம் மூண்டது. தற்போது சுதந்திரக் குடியரசான பொஸ்னியா பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ளது. சேர்பிய யுத்தத்தின்போது அதன் தலைவராக இருந்தவர் அலி இஸ்ஸத் பெகோவிச் ஆவார். அவர் ஒரு இஸ்லாமிய சிந்தனையாள ராக மதிக்கப்படுபவர்.

பிரதான இனங்களாக பொஸ்னிய, குரோஷிய முஸ்லிம்கள் உள்ளனர். சேர்பிய இனத்தவர் சிறுபான்மையாக வாழ்கின்றனர்.

சனத்தொகை: 4 மில்லியன் (2008)

தலைநகர்: சரஜேவோ

பரப்பு: 51,129 சதுர கி.மீ.

பிரதான மொழிகள்: பொஸ்னியா, குரோஷியா, சேர்பியா

பிரதான ஏற்றுமதி: பலகைகள், பத்திரிகைகள்

தலாவீத வருமானம்: 3790 அமெரிக்க டெலர் 2005ல் இடம்பெற்ற Dayton ஒப்பந்தத்தை அடுத்து யுத்தம் முடிவுக்கு வந்தது. இதன்படி இரு அதிகார அலகுகள் உருவாக்கப்பட்டன. பொஸ்னிய, குரோஷிய இனத்தவர்களுக் கான பொஸ்னிய ஹெஸகோவின கூட்டமைப்பு, பொஸ்னிய சேர்பியர்களுக்கான குடியரசு. இவற்றுக்குத் தனித் தனியே ஜனாதிபதி, அரசாங்கம், பாராளுமன்றம், காவல் துறை என்பன இயங்கி வருகின்றன.

ஜசாக் அல்லாஹ்  மீள்பார்வை

Written by poralikall

December 10, 2009 at 5:02 am

பாபர் மசூதியை இடித்த இந்து முஸ்லீமாக மாறிய விநோதம்

leave a comment »


1992 டிசம்பர் மாதம் ஆறாம் தேதி (டிசம்பர் 6 என்பது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்) அத்வானி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான காவிக் கூட்டத்தினர் 450 ஆண்டுகால வரலாறு படைத்த முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

இந்தியா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது. 17 ஆண்டுகள் பறந்தோடிய நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடு.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அன்று பாபர் மசூதியின் நடுக் கோபுரத்தை கடப்பாரையால் இடித்துக் கூத்தாடிய இரு இளைஞர்கள் சிவசேனா அமைப்பினைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சிவசேனா பறக்கும் படையின் துணைத் தலைவர் பல்பீர் சிங், மற்றொருவர் யோகேந்திரபால்.

சரி, அவர்களுக்கு இப்பொழுது என்ன வந்தது? ஒரு சுவையான திருப்பம் இதில் ஏற்பட்டுள்ளது. அந்த இரு இளைஞர்களும் இப்பொழுது முசுலிம்களாக மாறிவிட்டனர் என்பதுதான் அந்தச் சுவையான திருப்பம் மிகுந்த செய்தியாகும்.

பாபர் மசூதி கோபுரத்தின்மீது ஏறி, இரு இளைஞர்கள் யானையின் மத்தகத்தைப் பிளப்பதுபோல செயல்பட்டார்களே ஏடுகளில் அந்தப் படங்களெல்லாம்கூட வெளியானதே சாட்சாத் அந்த இரு இந்து இளைஞர்கள், சிவசேனாவின் சிப்பாய்கள்தான், இப்பொழுது முகம்மது ஆபிராகவும், முகம்மது உமர் ஆகவும் மாறிவிட்டனர்.

இளைஞர்கள் மூளையில் சாயம் ஏற்றி ஏற்றி, வெறித்தனமான போதனைகளை ஊட்டி ஊட்டி, வெறியாட்ட வன்முறைப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்துக் கொடுத்து, மாற்று மதக்காரர்கள்மீது வெறுப்பினைக் கூர்மைப்படுத்தி கூர்மைப்படுத்தி, ஒரு கட்டத்தில் அவர்களை வேட்டை நாய்களாக ஏவிவிடுவார்கள். அவ்வாறு ஏவிவிடப்பட்டு இடிக்கப்பட்டதுதான் பாபர் மசூதி.

காலம் கடந்து இப்பொழுது உண்மையை உணர்ந்து, தாம் செய்த குற்றத்துக்குப் பிராயச்சித்தமாக எந்த மதத்துக்கு விரோதமாக வெறியாட்டம் போட்டார்களோ, அந்த மதத்தோடேயே அய்க்கியமாகும் நிலை ஏற்பட்டுவிட்டது!

பொதுவாக மதம் என்பது விலங்குகளைப் பிடிப்பது, மனிதர்களைப் பிடித்தால் அதைவிட ஆபத்து! ஆபத்து!! நினை-விருக்கட்டும்!

—————மயிலாடன் அவர்கள் 10-10-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

Written by poralikall

December 5, 2009 at 3:42 pm

பாபர் மசூதி இடிப்பு: லிபரன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 68 குற்றவாளிகள்!

leave a comment »

நாளை பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு ‌தின‌ம்: ‌த‌மிழக‌ம் முழுவது‌ம் பல‌த்த பாதுகா‌ப்பு

லிபரஹன் கமிட்டி அறிக்கை ஒரு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே. குற்றவாளிகளாக கூறப்பட்டுள்ள எவரின் மீதும் நடவடிக்கை எடுக்ககும் மனோத்திடம் மத்திய காங்கிரஸ் கூட்டனிக்கு கிடையாது.

மும்பை கலவரம் பற்றிய சிறிகிருஷ்னா அறிக்கையில் அடையாளம் காண்பிக்கப்பட்ட பால் தாக்ரே மற்றும் சிவசேன குண்டர்களின் மீது – மகாராஷ்டிரத்தை  ஆளும் காங்கிரஸ் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருக்கிறதே?

பரபரப்பாக பேசப்பட்ட சிரிகிருஷ்னா அறிக்கையை – பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மறந்துவிட்டது போல்வே – லிபரஹான் அறிக்கையையும் மறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

பாபர் மசூதி இடிப்பு: லிபரன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 68 குற்றவாளிகள்!

1.        அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)

2.        அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

3.        அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)

4.        ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத், உறுப்பினர்)

5.        ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)

6.        ஆர்.கே.குப்தா  (உ.பி

7.        உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)

8.        எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸஎஸ்)

9.        ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)

10.     ஓங்கார் பாவே (விஸ்வ ஹிந்து பரிஷத்)

11.     ஓம் பிரதாப் சிங்

12.     கல்யாண் சிங் (உ.பி

13.     கல்ராஜ் மிஸ்ரா (பாஜக உ.பி

14.     குர்ஜான் சிங் (விஎச்பி, ஆர்எஸ்எஸ்)

15.     குஷபாவ் தாக்கரே (ஆர்.எஸ்.எஸ்)

16.     கெளர் (மாவட்ட ஆணையர்)

17.     கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்)

18.     சக்சேனா (உபி தலைமைச் செயலாளர்)

19.     சங்கர் சிங் வகேலா (குஜராத் மாநில பாஜக தலைவர்

20.     சதீஷ் பிரதான் (சிவசேனா)

21.     சம்பத் ராய் (அயோத்தி கட்டுமானப் பிரிவு மேலாளர்)

22.     சாத்வி ரிதாம்பரா (சந்த் சமாஜ் தலைவர்)

23.     சிதா ராம் அகர்வால்

24.     சுதர்ஷன் (ஆர்எஸ்எஸ் தலைவர்)

25.     சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக)

26.     சுவாமி சச்சிதானந்த சாக்ஷி (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)

27.     சுவாமி சத்மிட் ராம் ஜி (சந்த் சமாஜ்)

28.     சுவாமி சத்யானந்த் ஜி (சந்த் சமாஜ்)

29.     சுவாமி சின்மயானந்த் (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)

30.     சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்)

31.     சூர்ய பிரதாப் சாகி (உ.பி

32.     டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)

33.     தாவு தயால் கன்னா (பாஜக)

34.     திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)

35.     தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ் தலைவர்)

36.     பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

37.     பரம் தத் திவிவேதி (உ.பி

38.     பால் தாக்கரே (சிவசேனா)

39.     பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)

40.     பி.பி.சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

41.     பிரபாத் குமார் (உ.பி உள்துறை முதன்மை செயலாளர்)

42.     பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)

43.     பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)

44.     புருஷோத்தம் நாராயண் சிங் (விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர்)

45.     பைகுந்த் லால் சர்மா (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

46.     மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா)

47.     மகந்த் நித்யகோபால் தாஸ் (ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர்)

48.     மகந்த் பரமஹம்ஸ் ராம் சந்தர் தாஸ் (விஸ்வ ஹிந்து பரிஷத்)

49.     முரளி மனோகர் ஜோஷி (பாஜக)

50.     முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)

51.     முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)

52.     மோர்பந்த் பிங்கலே (சிவசேனா)

53.     மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா)

54.     யோத் நாத் பாண்டே (சிவசேனா)

55.     ராம் சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்)

56.     ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)

57.     ராஜேந்கிர சிங் என்ற பேராசிரியர் என்ற ராஜு பையா (ஆர்.எஸ்.எஸ் தலைவர்)

58.     ராஜேந்திர குப்தா (உ.பி. அமைச்சர்)

59.     லல்லு சிங் செளஹான் (பா.ஜ.க அயோத்தி எம்எல்ஏ)

60.     லால்ஜி தண்டன் (உ.

61.     வினய் கத்யார் (பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ்)

62.     விஜயராஜே சிந்தியா (பாஜக)

63.     விஷ்ணு ஹரி டால்மியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)

64.     ஜி.எம்.லோதா (பாஜக)

65.     ஜெய் பகவான் கோயல் (சிவசேனா)

66.     ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்)

67.     ஸ்ரீ சந்தர் தீட்சித் (பாஜக)

68.     ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)

நன்றி : inneram.com

Written by poralikall

December 5, 2009 at 3:20 pm

அமெரிக்கா உருவாக்க நினைக்கும் இஸ்லாத்தின் புதிய வடிவம் New Version of Islam

leave a comment »

முஸ்லிம் உம்மாவை அமெரிக்கா போன்ற சிலநாடுகளில் பிடிக்க முயலும் ஒரு வகை நோய் தொற்று இது அமெரிக்க ஒட்டுண்ணி புழுக்களால் ஏற்படும் நோய் தொற்று. இதனை முரண் மூளை நோய்தொற்று என்றும் அழைப்பர். இந்த நோய் தொற்று ஏற்பட்டால் ஈமான் பறிபோய்விடும் இந்த நோய் தொடர்ந்து இருந்தால் முனாபிகாக மரணம் அடைய வாய்ப்பு உண்டு, இது ஒரு பெரிய நோய்க்கான அறிகுறியாகும்.

Written by poralikall

December 2, 2009 at 6:53 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 38 other followers