Dr.ஆபியா சித்தீக்கி கோட் ரூமை விட்டும் பொலிசாரினால் வெளியேற்றபட்டார்
தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருகும் முஸ்லிம் பெண் Dr.ஆபியா வழக்கு நேற்று 19.01.2010 அமெரிக்க நேரம் கலை 9.00 மணிக்கு நியூ யார்க் நகரின் விசாரனைக்கு வந்தது இவர்மீது அல் கைதாவுடன் தொடர்புடைய எந்த குற்ற சாட்டுகளும் அரச தரப்பால் முன்வைக்க முடிய வில்லை ஆனால் அமெரிக்க புலனாய்வு ஏஜன்ட்டுகாளால் ஆப்கானிஸ்தான் இரகசிய சிறையில் அடைக்கப்பட்திருந்த போது ஒரு FBI அதிகாரியிடம் துப்பாகியை பறித்து அந்த FBI அதிகாரியையும் ஒரு இராணுவ அதிகாரியையும் சுட்டார் என்றும் , பேரழிவு தாக்குதல் -mass-casualty attacks-என்று எழுதப்பட்ட ஒரு ஆவணம் வைத்திருந்தார் என்றும் குற்றம் சுமத்த பட்டுள்ளார்.
இதை Dr.ஆபியா வின் சட்டத்தரணி முற்றாக மறுத்தார் , அல் கைதாவுடன் தொடர்புடைய எந்த ஆதாரமும் இல்லாத போதும் Dr.ஆபியாவை போலியான ஆதாரங்களின் ஊடாக ஆயுள் தண்டனையை பெற்று கொடுபதற்கு அமெரிக்க புலனாய்வு தரப்புகள் முயல்வதாக பரவலாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன , வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் பார்வையாளர் பக்கம் திருப்பி பேசிய Dr.ஆபியா தனக்கு எந்த தாக்குதலுடனும் தொடர்பு இல்லை என்று குறிபிட்டார் வழக்கு விசாரணை தொடங்கிய பின்னர் வழக்கின் சாச்சி ஒன்றை இடை மரித்தார் என்ற குற்றசாட்டின்பெயரில் கோட் ரூமை விட்டும் பொலிசாரினால் வெளியேற்றபட்டார் இவர் வெளியேற்றப்படும்போது தான் பேச அனுமதிக்க படவில்லை எனக் கூறி சென்றார்
மனிதாபிமான அமைப்புகள் இஸ்லாமிய இயக்கங்கள் என்பன ஒன்றிணைந்து நேற்றைய தினத்தை “Free Dr Aafia Siddiqui Day” , “டாக்டர் .ஆபியா சிந்தீக்கி விடுதலை நாளாக” பிரகடனம் செய்தமை குறிபிடதக்கது அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டுவரும் நியாயமற்ற வதைச்செயல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் Dr.ஆபியா சிந்தீக்கி உடனடியாக விடுவிக்குமாறும் கோரும் ஆர்பாட்டங்கள் நேற்று முன்தினம் பாகிஸ்தான் , U.S., UK, ஆஸ்திரேலியா , ஸ்பெயின் , கத்தார் , துர்கி , போன்ற நாடுகளில் இடம் பெற்றுள்ளன.
இந்த வழகின்போது இவர் சட்ட விரோதமாக கடத்தபட்டமை , இவரின் மூன்று குழந்தைகள் கடத்தபட்டு, சித்திரவதை செய்யப்பட்டமை , இவர் நிர்வான படுத்தப்பட்டு FBI ,CIA சித்திரவதை அதிகாரிகளால் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்த பட்டமை போன்ற எந்த விடையங்களும் நேற்று எடுக்க படவில்லை என்பது குறிபிடதக்கது
டாக்டர் ஆபியா பற்றி எமது முன்னைய பதிவுகைளை பார்க்க…



this website is good
ilmkabeer
November 22, 2010 at 10:34 pm