“கஷ்மீர் தினம்” இந்தியாவின் பிறப்புக்கு முன்பு பிறந்தது கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம்:

நேற்று “கஷ்மீர் தினம்” பாகிஸ்தானில் அனைத்து பிரதான நகரங்களிலும் பாரிய மக்கள் தொகையை கொண்ட கஷ்மீர் விடுதலைப் போராட்டத்திக்கு ஆதரவான ஆர்பாட்டங்கள் நடந்துள்ளன ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 5ம் நாள் கஷ்மீர்,பாகிஸ்தான் மக்களால் “காஷ்மீர் தினம்” கொண்டாடுவது வழக்கம் கஷ்மீர் கடந்த 150 ஆண்டுகளாக கஷ்மீர் விடுதலைப் போராட்ட பாதையில் நடக்கிறது இந்தியா என்ற நாடு தோன்றுவதற்கு முன்பு காஷ்மீர் விடுதலை போராட்டம் தொடங்கி விட்டது , டோக்ரா மஹாராஜாவின் அடக்குமுறையை , அவரின் மத ரீதியான ஒடுக்குமுறை ஆட்சிமுறையால், பாதிக்கப்பட்டவர்கள் காஷ்மீர் முஸ்லிம். மன்னரின் அடக்குமுறை பாரபடசத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் 1931-ல் பாரிய அளவில் போராட்டம் நடத்தியுள்ளனர் அன்றில் இருந்து இன்றுவரை கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாக சித்தரித்து காட்ட படுகிறது ‘காஷ்மீர் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தலைமையில் 1932-ல், ‘ஜம்மு கஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி’ என்ற அமைப்பின் ஊடாக மக்கள் போராடிவருகின்றனர் இன்று போராட்டங்கள் வடிவங்கள் மாறி இருந்தாலும் கஷ்மீர் விடுதலைப் போராட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அத்திவாரமிடபட்டுள்ளது என்பது கஷ்மீர் மக்களின் வாதமாகும்.


