OurUmmah.org

One World One Ummah

“சிமி” அமைப்பு தடை 2 ஆண்டுக்கு நீட்டிப்பு: இந்தியமத்திய அரசு உத்தரவு

leave a comment »

http://echo.levillage.org/273/images/5333.jpg

இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் -SIMI  -சிமி – இந்த அமைப்புக்கு இந்தியாவில்  சில பகுதிகளில்  கிளைகள் உள்ளது. SIMI அமைப்பை இந்தியாவில்  பல இடங்களில் குண்டு தாக்குதல் நடத்தியதாகவும்      2007ஆண்டு  நடந்த ஜெய்ப்பூர், பெங்களூர், ஐதராபாத், சூரத், ஆமதாபாத், டெல்லி நகரங்களில் தொடர் குண்டு வெடிப்பு  தாக்குதல்களில் SIMI இயக்கத்தினர் முக்கிய பங்கு இருபதாகவும் 2001 க்குப் பின் இந்தியாவில்  நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளிலிருந்து பாராளுமன்றத் தாக்குதல் வரை அனைத்துக்கும் காரணம் SIMI தான் என கூறி   இந்திய அரசு சிமியை எந்த ஆதாரமும் இல்லாமல் போலியாக சோடிக்கப்பட்ட கதைகளை கூறி ஆதாரங்கள் இன்றி தடை செய்தது என்ற பிகவும் பலமான குற்ற சாட்டுகள் இந்தியாவில் உள்ளன 2008 ஆதாரங்கள் இல்லாத தடையை நீக்குவதாக டில்லி உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டது. எனிலும் உச்ச நீதி மன்றம் மீண்டும் தடை செய்தது  2010இல் மீண்டும் இந்த தடை நீடிக்க பட்டுள்ளது முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்கமாக இனவெறி பிரசாரங்கலும் முஸ்லிம் படுகொலைகளிலும் நேரடியாக தொடர்பு பட்ட இந்து வெறியை தூண்டும் அமைப்புகள் இந்தியாவில் சட்டத்தை மதிக்கும் அமைப்புகளாக அரசால் பார்க்க படுவதாக இந்தியாவில் பரவலான குற்ற சாட்டுகள் இருப்பது குறிபிடதக்கது இது பற்றி SIMIயின் முன்னாள் தலைவர் ஷாஹித் பத்ர்  கூறியதாக  இந்திய இணையத்தளம் ஒன்றில்-muthupet.org -இல்  வந்த செய்தியை இங்கு தருகிறோம்

புதுடெல்லி:தடைச் செய்யப்பட்ட அமைப்பான இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்(SIMI) சட்டவிரோத நடவடிக்கைகள் ஒன்றிலும் ஈடுபட்டதில்லை என்றும் தடையை நீக்குவதற்கான சட்டரீதியான போராட்டத்தில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சிமியின் முன்னாள் தலைவர் ஷாஹித் பத்ர், ஸலாஹி -அஃப்காரே மில்லி- என்ற உருது மாத இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தில் நம்பிக்கை வைத்துள்ளதால் தான் சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக “சிமி இந்திய அரசியல் சட்டத்தை நம்புவதில்லை என்ற பிரச்சாரம் செய்யப்படுகிறதே” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஷாஹித் பத்ரு இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் குண்டுவெடிப்புகளுக்கு சிமிதான் காரணம் என குற்றஞ் சாட்டப்படுகிறதே என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கையில் “இறைத்தூதரின் வழிமுறையை பின்பற்றித் தான் தாங்கள் கிலாபத்(உலகளாவிய தலைமைத்துவம்) குறித்து பேசினோம். ‘எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீதியையும் நியாயத்தையும் நடைமுறைப்படுத்திய அபூபக்கர், உமர் ஆகிய கலீபாக்களின் ஆட்சியை இந்தியாவில் கொண்டுவருவேன்’ என்று ஒருமுறை காந்திஜி கூட கூறியுள்ளார்.

படிப்படியாகத்தான் சிந்தனை ரீதியான மாற்றத்தின் வழியாகத்தான் அதனை நடைமுறைப்படுத்த முடியுமே தவிர பலம் பிரயோகித்தோ அல்லது நிர்ப்பந்தத்தினாலோ அதனை செயல்படுத்த முடியாது. எவரேனும் ராம ராஜ்ஜியத்தைக் கொண்டுவருவதைக் குறித்தோ, கம்யூனிசத்தைக் கொண்டுவருதைக் குறித்தோ பேசும்பொழுது இந்த நாடு அதனை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் எங்களை மட்டும் குற்றவாளிகளாக கருதுகின்றார்கள்.

இந்தியாவில் நடைபெறும் குண்டுவெடிப்புகளை எவருடைய தலையிலும் வைத்து சுமத்துவதற்கு முன்பு அந்த குண்டுவெடிப்பினால் எவருக்கு லாபம் என்பதைக் குறித்து தீவிர ஆய்வை மேற்க்கொள்ள வேண்டும்” எனவும் ஷாஹித் பத்ர் தெரிவித்தார்.
தாங்கள் மத நல்லிணக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களென்றும், பலத்தை பிரயோகிக்காமல் போதனைகளில் நம்பிக்கைக் கொண்டவர்களென்றும் ஷாஹித் பத்ர் தெளிவுப்படுத்தினார்.

கூறியதாக  இந்திய இணையத்தளம் ஒன்றில் வந்த செய்தியை இங்கு தருகிறோம்

முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்கமாக இனவெறி பிரசாரங்கலும் முஸ்லிம் படுகொலைகளிலும் நேரடியாக தொடர்பு பட்ட இந்து வெறியை தூண்டும் அமைப்புகள் இந்தியாவில் சட்டத்தை மதிக்கும் அமைப்புகளாக அரசால் பார்க்க படுவதாக இந்தியாவில் பரவலான குற்ற சாட்டுகள் இருப்பது குறிபிடதக்கது

Advertisement

Written by poralikall

February 6, 2010 at 8:36 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 34 other followers