OurUmmah.org

One World One Ummah

மேற்குலகின் ஏவுகணைகள் ஈரானை தாக்குமா ? – மேற்கை தூண்டிவிடும் இஸ்ரேல்

leave a comment »

அரசியல் களஆய்வு:

ஈரான் ஜனாதிபதி அஹமட் நஜாத் அணுசக்தி துறை -Atomic energy body -தலைவர் அலி அக்பர் சலேஹிக்கு மின்சாரத்துக்கான அணுசக்தி நடவடிகைகளை தொடங்குமாறு இன்று கட்டளை பிறப்பித்துள்ளார் இந்த அறிவிப்பு ஈரானின் அணு ஆயுதச் செயற்பாடுகள் எப்டியும் தடுக்க வேண்டும் என்ற மேற்கின் முனைப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.

ஈரானுக்கு எதிராக மேற்குலக நாடுகள் கடும் எச்சரிக்கை விடுப்பதையும் மீறி ஈரான் அணுச் செறிவாக்கத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருக்கிறது. சர்வதேசத்தின் கோரிக்கைகளை ஈரான் மீறக்கூடாது என்பது மேற்குலக நாடுகளின் எதிர்பார்பாகும் . அத்துடன் ஈரான் பத்து புதிய யுரேனியம் செறிவூட்டல் ஆலைகளை அமைக்கப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது .ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி அனைத்துலக நாடுகளுடன் உடன்படிக்கை ஒன்றை எட்ட தாம் நெருங்கி கொண்டிருப்பதாக விடுத்துள்ள அறிக்கை பற்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் நம்பிக்கையின்மையை வெளியிட்திருந்தமை குறிபிடதக்கது இங்கு கவனிக்கபடவேண்டிய விடையம் என்ன வென்றால் மின்சாரத்துக்கான ஈரான் அணுச் செறிவாக்கத்தை எதிர்க்கும் மேற்கு நாடுகள் பெரும்பாலும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கின்றன அவற்றை அழிபதற்கு தாம் தாயார் இல்லாத நிலையில் ஈரான் நாட்டின் மின்சார தேவைக்கான அணுச் செறிவாக்கத்தை தடை செய்ய முற்படுகின்றன . அணு ஆயுதம் ஒன்றை தயாரிப்பதில் முன்னேற்றம் கண்டு வரும் ஈரான் அதனை முற்றாக நிறுத்திவிடும் அறிகுறிகள் எதுவும் தமக்கு தென்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் -Robert Gates-தெரிவித்து இருந்தார்.

இதேவேளை ஈரான் நாட்டில் இரு இடங்களில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அகமது வாஹிதி திறந்துவைதுள்ளார் .தரையிலிருந்து விண்ணிலுக்கு பாய்ந்து இலக்கைத் தாக்கும் “காயெம்’ என்ற ஏவுகணை, மற்றும் தரையிலிருந்து தரைக்கு பாய்ந்து தரைஇலக்கைத் தாக்கும் “டூஃபான்’ ஏவுகணையையும், இந்த புதிய மையங்கள் உற்பத்தி செய்யும். என தெரிவிக்க படுகிறது

கடந்த புதனன்று, உயிருள்ள ஆமைகள், எலிகள், புழுக்கள் கொண்ட ஆய்வுக்கலனுடன், “கவோஷ் 3′ என்ற ஆய்வு ராக்கெட்டை, பரிசோதனை முயற்சியாக ஈரான் விண்ணுக்கு செலுத்தியது. என்பதும் குறிபிட தக்கது ஈரான் நாட்டின் ஏவுகணை உற்பத்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை, மேற்கத்திய நாடுகள் கண்டித்து வருகின்றன. இத்திட்டங்கள் அணுஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் என்பது இவர்கள் வாதமாகும் இந்த நிலையில் ஈரான் விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனங்களான மொஸாத்- சி.ஐ.ஏ தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அணுசக்தி திட்டத்தைப் பற்றித்தான் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக மேற்கு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலுக்கு வந்த லியோன் பானெட்டா இஸ்ரேல் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், மொஸாத் தலைவர் ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் .

இச்சந்திப்பு வருகிற மே மாதம் நடத்த வேண்டியதுதாகும். ஆனால் மேற்காசியாவில் மீண்டும் ஒரு ராணுவ தாக்குதல் நடக்கப்போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியான சூழலில்தான் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.கடந்த சில தினங்களாக இஸ்ரேலின் நடவடிக்கைகள் இப்பகுதியில் மோதலுக்கான சூழலை உருவாக்கி வருகின்றன. சமீபத்தில் லெபனான் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வுடன் ஒரு போர் என்பது தவிர்க்க இயலாதது என இஸ்ரேல் கபினட் அமைச்சர் யோஸி பெலித் கூறியிருந்தார். என்பதுடன் துருக்கி இஸ்ரேல் தனது நாட்டை ஈரானை உளவு பார்க்கும் தளமாக பயன்படுத்துகிறது இதை துருக்கி அனுமதிக்காது என்று துருக்கி எச்சரிக்கை விடுத்தமை குறிபிட தக்கது

எப்டியும் அமெரிக்காவை பயன்படுத்தி ஈரானை தாக்கி அடுத்த ஈராக்காக ஈரானை மாற்றுவதுதான் இஸ்ரேலின் கனவு என்பது மேற்கு நடுநிலை அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்

Advertisement

Written by poralikall

February 7, 2010 at 8:17 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 34 other followers