250 இனங்களை கொண்ட நைஜீரியா ஒரு பார்வை
நைஜீரியா மேற்கு ஆபிரிக்காவிலிலுள்ள ஒரு சமஷ்டி குடியரசு நாடாகும். இது ஆபிரிக்க நாடுகளின் மத்தியில் பிராந்திய செல்வாக்கு மிக்கதாக பார்க்க படுகின்றது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடுகளில் முக்கியமானது இதன் மக்கள்தொகை 15 கேடியை விடவும் அதிகம் இங்கு 36 மாநிலங்கள் உண்டு நைஜீரியாவினுள் 36 மாநிலங்களிளும் 250 கும் அதிகமான இனங்கள் வாழ்கின்றன என்பது முக்கியமானது இவர்கள் பல மொழிகளைப் பேசும் இனங்கள் இந்த நாட்டின் மக்கள்தொகையின் 52% தினர் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக நைஜீரியாவின் வட பகுதியில் வாழ்கின்றார்கள் இங்கு 40% மாணவர்கள் கிறிஸ்தவர்கள் இவர்கள் பெரும்பான்மையாக நைஜீரியாவின் தென்பகுதியில் வாழ்கிறார்கள் இவர்கள் அல்லாமல் மிகவும் சிறுபான்மை இனங்களும் உண்டு இங்கு நைஜீரியா தனது வரலாற்றில் தொடர்ந்தும் மேற்கின் ஆக்கிரமிப்பு களையும் இராணுவ புரட்சிகளையும் சந்தித்துள்ளது , கடைசியாக பிரித்தானியாவின் காலனித்துவ நாடாகவும் இருந்துள்ளது இவர்களின் ஆட்சிமுறை இனங்களை பிரித்தாளும் மனித விரோத அரசியல் வழிமுறைகளை கொண்டு காணப்பட்டது பிரித்தானியாவின் பிடியில் இருந்து 1960 விடுபட்டது எனிலும் 1960 தொடக்கம் 1999வரை தொடர்ந்து இராணுவ ஆட்சியின் பிடியில் தவித்தது
ஐரோப்பியர்கள் ஆட்சியில் நைஜீரியா ஆபிரிக்காவின் மிகப்பெரிய அடிமை விற்பனை சந்தையாக மாற்ற பெற்றது நைஜீரியாவின் ஆண்களையும், பெண்களையும் ஐரோப்பியர்கள் அடிமைகளாக பிடித்து விற்பனை செய்தனர் . நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இவ்வாறு அடிமைகளாக அமெரிக்கா அனுப்பப்பட்டதாக வரலாறு கூறுகின்றது இங்கு அடிமையாக பிடிக்க பட்டவர்களில் உறுதியான உடல் கட்டமைப்பை கொண்ட ஆண்களும் பெண்களும் தெரிவு செய்யப்பட்டு அடிமை பன்னைக்கு அனுப்பட்டு அடிமை உற்பத்தி முறை நடைமுறையில் இருந்ததாக சில ஆய்வாளார்கள் கூறுகின்றனர் , ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர் நைஜீரியா பரந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்ததுடன் நைஜீரியா மக்கள் பல அபிவிருத்திகளையும் கண்டிருந்தனர் ஆய்வாளர்கள் குறிபிடுவதை போன்று ஐரோப்பியர்கள் துப்பாகிகளை என்னவென்று தெரிந்திராத காலத்தில் இவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தமையால் துப்பாகிகளை பயன் படுத்துபவர்களாக இருந்திருகின்றனர் அதே போன்று கல்வி துறையில் குறிபிடதக்க அபிவிருத்தி கண்டிருந்தனர் என்பது வரலாறு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியுடன் இவர்களின் வீழ்ச்சியும் தொடங்கியதாக வரலாறு கூறுகின்றது விரிவாக பார்க்க…




very informative statment intresting to read , thank u
Rizan
February 11, 2010 at 10:54 pm
salam shamil ontime infomation and news keep it up
Rifath
February 11, 2010 at 10:58 pm