OurUmmah.org

One World One Ummah

Archive for March 2010

வதை முகாம்களில் சிதைக்கபட்ட பெண் Dr.ஆபியா சித்தீக்கி

leave a comment »

7 வருடங்கள் வதை முகாம்களில். Dr.ஆபியாவை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன் மீது நடக்கு மாறு வதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார்.

Dr.ஆபியா சித்தீக்கி மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார் இந்த அராஜகம் நடைபெற்று நேற்றுடன் 7 வருடங்கள் ஆகியுள்ளது Dr.ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் . இங்கு அமெரிக்க , பாகிஸ்தானிய ஏஜண்டுகளால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கு ஆளானார் இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். வெளி உலகம் அறிந்து விட்டதால் அமெரிகாவுக்கு கொண்டு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர் இந்த அமெரிக்க பயங்கரவாதிகள்,

இந்த 7 வது வருட பதிப்பு தினத்தில் நேற்று பாகிஸ்தானில் Dr.ஆபியா சிந்தீக்கியை உடனடியாக விடுதலை செய்யகோரி , அமைதியான ஆர்பாட்டங்கள் , விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்பனவும் பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது இந்த நிகழ்ச்சிகளில் Dr.ஆபியா சிந்தீக்கி வதை செயப்பட்ட விதம் விபரிக்க பட்டுள்ளது அவர் பெற்ற வதைகள் மிகவும் பயங்கரமானதும் மனிதாபிமானம் உள்ள எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுகொள்ள முடியாதா அராஜகங்கள் அவர் பெற்ற வதைகளில் சில Dr.ஆபியா சிந்தீக்கியின் தாய் இப்படி கூறுகின்றார் விரிவாக பார்க்க …

Written by poralikall

March 31, 2010 at 8:41 pm

கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் நிகாப் முகத்திரை அணியத் தடை

leave a comment »

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதற்காக அணியும் நிகாப் உடையை தடை விதிக்கும் மசோதாவை கனடாவின் க்யூபெக் மாகாண அரசு நிறை வேற்றியுள்ளது. என்பதுடன் விசாரணை ஒன்றில் பேரில் கைதான எந்த ஒரு பெண்னும் முகத்திரையை நீக்க மறுத்தால் குறித்த பெண்கலுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று கனடா பல்வேறு மாகாணங்களின் போலீஸ் கூறியுள்ளது என்பதுடன் க்யூபெக் மாகாண அரசு முகத்திரை அணியும் பெண்களுக்கு அரச சேவைகள் மற்றும் தனியார் துறை தொழில் போன்ற வற்றை பெற்று கொள்ள தடை செய்யும் சட்டம் ஒன்றையும் சட்டமாக அமுல் படுத்த தீர்மானித்துள்ளது பாலின பாகுபாட்டுக்கு எதிரான நடவடிக்கையாகவும், இரு பாலாருக்கும் சமநிலையை உறுதிபடுத்தும் நோக்கத்துடனும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கனடா கூறியுள்ளது . இந்த சட்டத்தின் படி, சுகாதாரம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சேவைகளை பெறுவதற்கும், வழங்குவதற்கும் வரும் மக்கள் முகத்தை மறைப்பது போன்ற எந்த வித அங்கிகளையும் அணிய முடியாது

அதேவேளை பிரான்ஸில் முகத்தை மூடுவதற்காக அணியும் நிகாப்பை தடை செய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது அதை மேலும் விரிவா அணைத்து பொது இடங்களிலும் அமுல் படுத்தும் சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகள் பிரான்ஸில் நடை பெறுவதாக பிரான்ஸ் அரச நிர்வாக துறை அறிவித்துள்ளது பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோழி பிரான்ஸில் முழுமையாக முகத்தை மூடும் நிகாப்பை தடை செய்வேன் என்று கூறியிருப்பது குறிபிட தக்கது-President Nicolas Sarkozy vowed to push for a total ban of the full-face veil as it was “contrary to the dignity of women.”,

Written by poralikall

March 31, 2010 at 12:41 pm

காஸா சிறுவர்களின் அவலம் பற்றி பேசும் ஒரு ஆவணம்

leave a comment »

மோசடி, சூழ்ச்சி, துரோகம், நயவஞ்சகம் இவற்றுக்குப் பெயர்போனவர்கள்  சியோனிஸ யூதர்கள் என்றால் மிகையாகாது. வரலாறு நெடுகிலும் இத்தகைய குணம் கொண்ட யூத சியோனிஸவாதிகள்  இன்று உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாத சக்திகளாக உருவெடுத்துள்ளனர் . “உங்களைக் கடுமையாக நோவினை செய்து, உங்கள் ஆண்மக்களை அறுத்துகொலை செய்து உங்கள் பெண்மக்களை மட்டும் வாழ விட்ட பிர்அவ்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றினானே அதை நினைத்துப் பாருங்கள்” (2:49) என்று அல்லாஹ் இந்த யூதர்களுக்குச் செய்த அருட்கொடையை நினைவூட்டிய போதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ்வின் உதவியையே மறந்து துரோகம் இழைத்தனர் யூத சியோனிஸவாதிகள் என்பது வரலாறு . இன்று அந்த பிர்அவ்ன் செய்ததையும் மீறி பலஸ்தீனில் ஆண்குழந்தை பெண்குழந்தை என்று பாராமல் மிகவும் நாசகார  குண்டுகளை ஏவி  பலஸ்தீன சிறுவர் சிறுமிகளை வகை தொகை இன்றி கொன்று குவித்து கொண்டிருகின்றது யூத சியோனிஸ பயங்கரவாதம்- ஆவணங்கள் பார்க்கவும்

1

2

Written by poralikall

March 29, 2010 at 10:47 pm

பாபர் மசூதி இடிப்பை அத்வானி வேடிக்கை பார்த்தார் – ஐபிஸ் அதிகாரி சாட்சியம்

leave a comment »

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதை பாதுகாக்க எந்த விதமான முயற்சிகளையும் அத்வானி மேற்கொள்ளவில்லை என்று சிபிஐ நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரியும் அரசு தரப்பு சாட்சியுமான அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, அரசு தரப்பு சாட்சியாக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட சங்கப்பரிவார் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.​ இந்த வழக்கில் இதுவரை 8 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.இந்நிலையில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது குப்தா,​​ அத்வானியின் மெய்க்காவலராகப் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா இன்று ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். தற்போது டெல்லியில் ‘ரா’ பிரிவில் பணியாற்றி வரும் அஞ்சு குப்தா, பாபர் மசூதி இடிப்பு சம்பவ நாளுக்கு முன்பும் பின்பும் அத்வானியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் எங்கெல்லாம் சென்றார் யாரை எல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.’சர்ச்சைக்குரிய இடத்தில் சுமார் 100 பேர் (கர சேவகர்கள்) கூடியிருந்த நிலையில் அங்கு அத்வானி சென்றார். கூட்டத்தினர் மத்தியில் அவர் பேச ஆரம்பித்தார். ஆக்ரோஷமாகவும், உணர்ச்சி வசப்பட்டும் அவர் பேச பேச கூட்டத்தினர் மத்தியில் உணர்ச்சி வேகம் அதிகரித்து பதட்டமான நிலை உருவானதை உணர முடிந்தது’ என்று அஞ்சு குப்தா தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்வானியோடு, இதர பாஜக தலைவர்களான வினய் கட்டியார், பிரமோத் மகாஜன், உமா பாரதி, சாத்வி ரிதாம்பரா, கல்ராஜ் மிஸ்ரா, ஆச்சார்யா தர்மேந்திரா, விஷ்ணு ஹரி டால்மியா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் இருந்ததாக அஞ்சு குப்தா குறிப்பிட்டுள்ளார். பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தனது வாழ்நாளில் மிகவும் துயரமான சம்பவம் என்றும், பாபர் மசூதி இடிப்பு கட்டுப்படுத்த முடியாதபடி, இயல்பாக வெடித்த ஒரு கலவரம் என்றும் அத்வானி கூறி வந்தார்.

ஆனால் அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்த சாட்சியங்கள் அத்வானி தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் அஞ்சு மேலும் சாட்சியம் அளிக்கையில், ‘அத்வானி மற்றும் அவருடன் இருந்த தலைவர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தார்கள்.கரசேவகர்கள் மசூதியை இடிக்கும்போது அது இடிக்கப்படாமல் பாதுகாக்க அத்வானி உட்பட அவருடன் இருந்த தலைவர்கள் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக மசூதி இடிந்து விழுந்த போது மேலே குறிப்பிட்ட எட்டு தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்’ என்று கூறியுள்ளார். இந்திய செய்தி தளமான தட்ஸ்தமிழில் இருந்து

Written by poralikall

March 28, 2010 at 11:25 pm

பாலியல் வதைகள் கற்பழிப்பு போன்ற பெண்கள் மீதான பலாத்காரங்களுக்கு பெண்கள்தான் காரணம்: ஆய்வு

leave a comment »

கற்பழிப்பு சம்பவம் நடப்பதற்கு பெண்கள் பிரதான  காரணமாக அமைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டனில் சமீபத்தில் பாலியல் வதைகள் கற்பழிப்பு போன்ற குற்றங்கள்  குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரம் கற்பழிப்புக்கு  உள்ளான பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர்  ஆயிரம் பேரிடமும்  தாம் கற்பழிக்க பட்டமை  குறித்து வாக்கு மூலம் பதிய பட்டது.இவர்கள்  18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் தான் அதிக அளவில் கற்பழிக்கப்படுகின்றனர் என்றும் . இந்த சம்பவம் நடப்பதற்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக உள்ளனர் எனவும்  பெரும்பாலோர் கருத்து தெரிவித்தனர் இளம் பெண்கள் குட்டை கீழ் ஆடை  போன்ற தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சிகரமாக உடை அணிவதும், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவதும் ,மது அருந்துவதும் இவர்களே வம்பை விலைக்கு வாங்குவதாக உள்ளது என்றும்இன்னும் சிலர், ஆண் நண்பர்களின் வீட்டில் தங்குவதும், விருந்து நிகழ்ச்சிகளில் மேலாடை விலகுவது கூட தெரியாமல் நடனமாடுவதும் ஆண்களை சபலத்துக்குள்ளாகி விடுகிறது என்றும் கூறியுள்ளனர் .

இதுதான்  கற்பழிப்பு குற்றதிற்கான் பிரதான காரணமாக கூறப்பட்டது      .கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடும் மூன்றில் ஒரு ஆண், தான் கற்பழித்ததை ஒப்பு கொள்வதில்லை. இதே போல கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் இந்த சம்பவத்தை போலீசில் சொல்ல முன்வருவதில்லை. இந்த விஷயம் கோர்ட் வரை செல்வதற்கு தயங்குகின்றனர். 42 சதவீத பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டதை போலீசில் புகார் செய்கின்றனர். என்று அந்த  சமீபத்திய  ஆய்வு தெரிவிக்கிறது

Written by poralikall

March 27, 2010 at 10:13 pm

விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் திருமாவளவன்

leave a comment »

நேற்று (21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல – தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர். அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது – அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.

மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி சிறப்பாக இருந்தது. பேரா. அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்கா விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தோழர் திருமா அவர்கள் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது. கூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ‘மக்கா மஸ்ஜித்’ இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் – பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து – ’இஸ்லாத்தை’ விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார் என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ’நாரே தக்பீர்’ முழக்கம் ஒலித்தது.. விரிவாக பார்க்க….

Written by poralikall

March 26, 2010 at 11:00 pm

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம்

leave a comment »

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு  அரசின் வதை முகாம்களில்  வதைக்க படும் மனிதம்

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஷ்டிக்க உலகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்களை ,பலஸ்தீன பொது அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது தமது அறிக்கையில் 34 வது பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் முக்கியமான கால கட்டத்தில் வர இருப்பதாகவும் இந்த தினத்தை இஸ்ரேல சிறைகளில் வதைக்க படும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் பற்றிய விழிபுனர்வுகான வாரமாக கருதி வாரம் முழுவதும் கைதிகள் பற்றிய விழிபுணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யுமாறும் ஏப்ரல் மாதம் 17 திகதி அன்று பலஸ்தீன் அரசியல் கைதிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக பட்டங்களை ஏற்றுமாறும் கூறியுள்ளது

இஸ்ரேலிய சிறைகளில் 7300 கும் அதிகமான் அரசியல் கைதிகள் வதைக்க படுகின்றார்கள் இவர்களில் 33 பேர் பெண்கள் , 300 பேர் சிறுவர்கள் , இவர்களில் 400 பேர் ஜெருசலத்தில் இருந்தும் , 745 பேர் காஸ பகுதியில் இருந்தும் , 6155 பேர் மேற்கு கறை பிரதேசத்தில் இருந்தும் இஸ்ரேலிய வதை முகாம்களில்   வதையுருகின்றனர்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடனேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மிகப் பெரும்பாலான பலஸ்தீன் கைதிகள், கைதிகளைப் பாதுகாக்கும் மனித உரிமைப் பாதுகாப்புக் குழுக்களின் எந்தத் தலையீடுகளுமற்ற நிலையில் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமை அறிக்கைகள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டுகின்றன .

கைதிகள் பற்றி குறிபிடும் மனித உரிமை அமைப்புகள் 98 சதவீதமான பலஸ்தீனர்கள் சுமார் 30 சிறைக்கூடங்களிலும் தடுப்பு முகாம்களிலும் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாகவும், 88 சதவீதமான கைதிகள் கைகள் கட்டித்தூக்கப்பட்ட நிலையில் பலமணிநேரம் நிர்வாணமாகத் தொங்கவிடப்படுவதாகவும் குறிப்பிடுகின்றது.

இதுவரை சுமார் 199 பலஸ்தீன் கைதிகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளின் காரணமாக தடுத்துவைக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளதாக மனித உரிமை அறிக்கைகள் கூறுகின்றது. சரியான மருத்துவ சிகிச்சை வழங்கப்படாத நிலையில் நோயாளிகளான சுமார் 1600 கைதிகள் இஸ்ரேலிய வதை முகாம்களில்  தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக  அறிக்கைகள் குற்றஞ்சாட்டுகின்றது

அனேகமான நோய் பாதிப்புக்கு உள்ளான கைதிகள் இஸ்ரேலிய தடுப்புக் காவலின்போது தொடர்ச்சியான கொடூரமான சித்திரவதைகளின் காரணமாகவே நோய் பாதிப்புக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கபடுகின்றது

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு கைதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கைதிகளின் நலன்களைப் பாதுகாக்க முன்வருமாறு உலகில் உள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புக்களையும் நிறுவனங்களையும் , பலஸ்தீன ஆதரவாளர்களையும் நோக்கி கைதிகள் பாதுகாப்புக்கான பலஸ்தீன் அமைப்புகள் the Free Palestine Alliance (FPA) and Addameer: Prisoners’ Support and Human Rights Association in Palestine அழைப்புவிடுத்துள்ளது.

Written by poralikall

March 24, 2010 at 8:32 pm

பிரிட்டன் இஸ்ரேல் ராஜதந்திரி ஒருவரை வெளியேற்றப் போகிறதாம் !!!

with one comment

இணைப்பு-2

பலஸ்தீன் விடுதலை போராட்டத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரும் ஹமாஸ் கட்டமைப்பான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் உயர் நிலை உறுப்புரிமை பெற்றவருமான மஹ்மூத் அப்துறவூப் அல் மப்ஹூஹ்- கொலையுடன் தொடர்புடை யோரின்  வீடியோ காட்சிகளை துபாய்  வெளியிட்டது இவர்கள் இஸ்ரேல மொஸாட் பயங்கரவாதிகள்  போலி கடவுசீட்டுகளில் பயணம் செய்துள்ளனர் என்ற தகவல்  இப்போது  வலு பெற்றுள்ளது இவர்கள் போலியான கடவுசீட்டுகளை பயன்படுதியுள்ளனர்  இந்த மொஸாட்  பயங்கரவாதிகளில் 6 பேர் போலி முகவரியிலான பிரிட்டன் கடவுசீட்டை பயன்படுத்தியுள்ளனர்.   இந்த விடையம் தொடர்பாக விசாரணை செய்துவரும்  பிரிட்டன் வேறு வலி இன்றி இஸ்ரேல ராஜ தந்திரி ஒருவரை பிரிட்ட னை விட்டும் வெளியேற்றும் அறிவிப்பை இன்று வெளியிடும் என்று எதிபார்க்க படுகின்றது  இஸ்ரேல் என்ற சட்ட விரோத அரசு உருவாக்குவதில் முக்கிய பங்கு   பிரிட்டன் அரசுக்கு உண்டு என்பது நோக்கப்படவேண்டிய விடையம்

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரிட்டன் வெளிநாட்டு  அமைச்சர் டேவிட்  மிலிபேண்ட் – David Miliband- பிரிட்டன் இஸ்ரேல் ராஜதந்திரி ஒருவரை நாட்டை விட்டும்  வெளியேற்றும் அறிவிப்பை வெளியிட்டார் அவர் தொடர்ந்தும் கூறுகையில் பிரிட்டன் இஸ்ரேல் இஸ்திரதன்மை மற்றும்   பாதுகாப்பு விடையத்தில் பிரிட்டன் தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என்றும் எனிலும் இந்த இஸ்ரேலின் நடவடிக்கை – கள்ள கடவுசீட்டுகளை பயன்படுத்தியது – முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது போய்விட்டதாகவும் கூறியுள்ளார் -Miliband said Britain will continue to support Israel’s bid for security and stability but that Israel’s actions had been completely unacceptable.- இது பற்றி அல் ஜஸீரா கூறுகையில்   வெளியேற்றப்படும் இஸ்ரேல் ராஜதந்திரி மொசாட் அமைப்பின் பிரிட்டன் பிரதிநிதி என்று குறிபிட்டுள்ளது

Written by poralikall

March 23, 2010 at 9:34 pm

இன்று பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் இரு வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்

leave a comment »

கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான ஜெரூசலம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் அந்த மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகின்றது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய அராஜகங்கள் அல் குத்ஸ் மஸ்ஜித் பகுதியிலும் அதிகரித்துள்ளது இஸ்ரேலிய அராஜகங்கள்,எதிர்த்து மக்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு கரை பகுதியில் இன்று இடம் பெற்ற இஸ்ரேலிய அராஜக துப்பாக்கி தாக்குதலில் இரு பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரத் தரப்பு அண்மைக்காலமாக ஏராளமான பலஸ்தீன் வீடுகள், கடைகள், கட்டடங்களைத் தகர்த்து வருகின்றது என்பதும் இஸ்ரேல புதிதாக 50000 ஆயிரம் -ஐம்பதாயிரம்- புதிய குடியிருப்புகளை கிழக்கு ஜெருசலத்தின் அல் குத்ஸ் பகுதில் அமைக்க திட்டமிட்டுள்ளதுடன் 1600 குடியிருப்புகளை கிழக்கு ஜெருசலத்தின் நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கபடுகின்றது إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ-

Written by poralikall

March 21, 2010 at 6:14 pm

இந்தியப்பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன் விளக்குகிறார் ?

with one comment

அமெரிக்க,லொஸ் ஏஞ்ஜலிஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகக் கடமையாற்றும் பெரியார்தாசன் தமிழ் நாடு பச்சையப்பன் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்,திராவிடர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Written by poralikall

March 21, 2010 at 12:57 pm

விமான ,மோட்டார் தாக்குதல் மத்தியிலும் பல பலஸ்தீன பகுதிகளில் இன்றும் ஆர்பாட்டங்கள் வெடித்துள்ளன

leave a comment »

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு சில நாட்களாக  பலஸ்தீன பகுதிகளில் விமான குண்டு தாக்குதல்களை நடத்திவருகின்றது இன்று வெள்ளி கிழமை   அதிகாலையும் விமான குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது இதில் பலர் மிக மோசமாக காயம் அடைந்துள்ளனர்  காஸாவின் பல பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளது

இதே வேளை  இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை கடந்த சில நாட்களாக ஆட்லறி மோட்டார் தாக்குதல்களையும் அதிகரித்துள்ளது , இஸ்ரேல்  ஆக்கிரமிப்பு அரசு மீண்டும் மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் வாலிபர்கள் குறிப்பாக 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தொழுவதை தடை செய்துள்ளது இன்று ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் பலஸ்தீன்  ஜெருசலம் பகுதியில் பல இடங்களில்   இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற  திட்டத்தை எதிர்த்தும் பலதீனர்களின் வீடுகள்  ஆக்கிரமிப்பு படையால் தகர்க்க படுவதையும்  எதிர்த்தும் ஆர்பாட்டங்கள் வெடித்துள்ளன

இன்று காலை காஸாவுக்கு வடக்கேயுள்ள குடியிருப்புக்களை நோக்கி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஷெல் , மற்றும் விமான தாக்குதல் நடாத்தியதில் ஐந்து பலஸ்தீன் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். அதே வேளை பலஸ்தீன்  மேற்கு கரை நகரான   ஹெப்ரோன் பகுதில் இன்று ஜும்மாஹ் தொழுகையின் பின்னர்    தடைகளை மீறி பாரிய அளவின் ஆர்பாட்டங்கள் வெடித்துள்ளன கடந்த சில நாட்களாக நடை பெரும் ஆர்ப்பாட்டங்களில் நுற்றுக்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் காயம் அடைந்துள்ளனர் 60 கும் அதிகமானவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் கைதாகியுள்ளனர்

மேற்படி தாக்குதலில் படுகாயமுற்றுள்ளவர்களின் பலரின்  நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் துரித வைத்தியசேவைப் பிரிவு  தெரிவித்துள்ளது

Written by poralikall

March 19, 2010 at 7:17 pm

Daniel Streich நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன்

with 2 comments

சுவிட்சர்லாந் நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் – Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக செய்திகள் வெளிவந்தன எனிலும் அதுபற்றிய மாறுபட்ட கருத்துகள் வெளிவந்தமையால் அந்த செய்தியை நாம் உடனடியாக தரவில்லை ஆனால் இப்போது .அவர் நேரடியாக சுவிட்சர்லாந் அரச தொலை காட்சியில் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்

இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் “Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,”- நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்கா ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார் -

இவரை பற்றி சுவிட்சர்லாந் அரச தொலை காட்சி இப்படி கூறியுள்ளது He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur’an, prays five times a day and goes to a mosque! இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும் , பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர் , சமூக கவுன்சில் உறுப்பினர்   இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார் , ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார் , அல் குர்ஆன் படிக்கிறார் என்று குறிபிடுகிறது

இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்தியவர் இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்க படுகின்றது

சுவிட்சர்லாந் நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 311000 என்று கூறுகின்றது இங்கு 100 கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருகின்றன எனிலும் 4  மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது .

நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார் .

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிதவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு

Written by poralikall

March 19, 2010 at 6:24 pm

இஸ்ரேல் என்ற சட்டவிரோத குழந்தைக்கு எப்போதும் அமெரிக்காவின் ஆதரவு உண்டு

leave a comment »

இஸ்ரேல புதிதாக 50000ஆயிரம் -ஐம்பதாயிரம்- புதிய  குடியிருப்புகளை கிழக்கு ஜெருசலத்தின் அல் குத்ஸ் பகுதில்  அமைக்க திட்டமிட்டுள்ளது இதில் 20000 ஆயிரம் குடியிருப்புகளை முதலில் நிர்மானிபதற்கான ஆரம்ப வேலைகள் பூர்த்தியான நிலையை அடைந்திருபதாகவும் ஏனைய 30000 ஆயிரம்  குடியிருப்புகளை உருவாக்கும் திட்டம் திட்டமிடல் குழுவிடம் விரைவாக தயாராகி வருவதாகவும்    இஸ்ரேலிய செய்திகளை  ஆதாரம் காட்டி தகவல்கள் பலவழிகளிலும் வெளியாகியுள்ளன இந்த நிலையில் தான் 1600 புதிய விடு களையும் அதற்கு தேவையான அணைந்து பொது கட்டிங்களையும் ஜெருசலத்தின் கிழக்கு அல் குத்ஸ் பகுதில் அமைக்க இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசாங்கம் அங்கீகாரம் கொடுத்துள்ளது .

இந்த அங்கீகாரம் கடந்த வாரம் அமெரிக்க உதவி ஜனாதிபதி  ஜோய்   பிடேன்- Vice President Joe Biden-இஸ்ரேல சென்று இருந்த போது இடம் பெற்றமையால் பல அரசியல் ஆய்வாளர்கள் நேடன்யாஹு அரசு அமெரிக்காவின் முகத்தில் கொடுத்த அடிதான் இந்த குடியிருப்புகளை உருவாக்கும் திட்டதுக்கான அங்கீகாரம் என்று வர்ணித்தார்கள் இது பற்றிய விமர்சனங்கள் உலகின் முன்னணி  மீடியாக்களில் இடம் பெற்றன என்பதுடன்   இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின

இது பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க தமது ஆதரவு என்றும் இஸ்ரேலுக்கு உண்டு
என்று தெரிவித்துள்ளதுடன்     இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி   கிளிங்டன்    மறுத்துள்ளார்

மேலும் அவர் கூறுகையில் இரு நாடுகளுக்கும் இடையில் மிக நெங்கிய பிணைப்பு காணப்படுவதாகவும்  சமாதானத்தை நிலைநாட்டுவதில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான கோரிக்கை எனவும், இந்தக் கோரிக்கையில் மாற்றம் எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

இதே வேளை இது பற்றி ஒபாமா இஸ்ரேல் சார்பான பாக்ஸ் செய்தி -Fox News -நிறுவனத்துக்கு வழங்கியுள்ள செவ்வியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் நல்ல நண்பர்கள் சிலவேளைகளில் நண்பர்கள் கருத்து முரண்படுவது உண்டு என்று தெரிவித்த ஒபாமா “Friends are going to disagree sometimes,” இஸ்ரேல ஆக்ரமிப்பு அரசின் எந்த நடவடிக்கையையும் கண்டிக்காமல்  பலஸ்தீன் மக்கள்  இஸ்ரேல் ஆக்ரமிப்பு அரசு  கிழக்கு ஜெருசலத்தின் அல் குத்ஸ் பகுதில்  தமது சொந்த மண்ணியில் சொந்த வீடுகளை இடித்து தகர்க்க  வரும்   இஸ்ரேல் ஆக்ரமிப்பு படைக்கு எதிராக ஆர்பாட்டம் செய்வதை வன்மையாக இன்று கண்டித்துள்ளார்  இதுதான் அமெரிக்காவுக்கு நீதியாக தெரிகின்றது

Written by poralikall

March 18, 2010 at 8:59 pm

இன்று அமெரிக்காவின் உளவு விமான தாக்குதல்களில் 11 கொல்லப்பட்டனர்

leave a comment »

http://www.nation.com.pk/uploads/news_image/large/Atleast8killedseveralinjuredasUSdronesfiredmissilesinSouthWaziristan_5456.jpg

பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில்:

இன்றும் அமெரிக்காவின் உளவு விமானங்கள் பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் பல குண்டுகளை ஏவியுள்ளது இதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் இதனால்  கொல்லப்பட்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்க படுகின்றது கடந்த ஒரு வார காலத்துக்குள் இது இரண்டாவது தாக்குதல் ,கடந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறிபிடதக்கது-إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

Written by poralikall

March 17, 2010 at 3:32 pm

முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்

leave a comment »

http://www.fnal.gov/pub/today/images08/60secs_violation.jpg

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம் சமுதாயத்தினர் மீதான பாரபட்சமான, துவேஷப் போக்கு அதிகரித்து வருவதாக அமெரிக்க மனித உரிமைத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மனித உரிமைத் துறை வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்கள் குறித்து துவேஷப் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. முஸ்லீம்களிடம் பாகுபாடு காட்டுவதும், வெறுப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்வதும் ஐரோப்பியர்களிடையே அதிகரித்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் மசூதிகள் அல்லது பள்ளிவாசல்கள் போன்றவற்றைக் கட்ட சுவிட்சர்லாந்து அரசு தடை விதித்தது இதையே காட்டுவதாக உள்ளது. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, ஆலந்தில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. தொப்பி அணிவதையும் இந்த நாடுகள் தடை விதித்துள்ளன. விரிவாக பார்க்க…

Written by poralikall

March 16, 2010 at 11:34 pm

இஸ்லாத்தை பற்றி உலக அறிஞர்கள்

leave a comment »

இஸ்லாத்தை பற்றி  உலக அறிஞர்கள் , வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்வது உலக வரலாறு பற்றிய எமது பார்வையை விரிவாக்க உதவும் என்பதுடன் இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு மனிதம் கொண்ட கோட்பாடு என்பதை அறிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் என்ற காரணத்தால் இந்த வீடியோவை இங்கு பதிவு செய்கிறோம்.

Written by poralikall

March 16, 2010 at 6:27 pm

பாகிஸ்தானில் வெடிக்கும் குண்டுகளின் பின்னால் அமெரிக்க , பாகிஸ்தான் உளவு அமைப்புகள்

with one comment

அரசியல் கள ஆய்வு:
.
ஈராக்கில் 2003 ஆண்டு தொடக்கம் 2006 ஆண்டு வரை படு தோல்வியை தலுவிகொண்டிருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படை தனது இராணுவ திட்டமிடலில் மாற்றங்களை செய்தது இதன் படி ஈராக்கின் மஸ்ஜிதுகள் குண்டுகாளால் தகர்க்கபட்டன கருத்து முரண்பாடாக மட்டும் இருந்த சிறு சிறு முரண்பாடுகள் அமெரிக்க குண்டுகளால் ஆயுத மயப்படுத்தபட்டது முஸ்லிம்களை கொலைசெய்த அமெரிக்க பயங்கரவாதம் பலியை முஸ்லிம்கள் மீது போட்டது.
ஒரு பகுதி முஸ்லிம்களை அடுத்த பகுதி முஸ்லிம்கள் மீது ஏவி விட்டது இதன் மூலம் அமெரிக்கா தான் நினைத்ததை ஓரளவு வெற்றி கொண்டது என்றுதான் கூற வேண்டும் . அதைத்தான் இப்போது பாகிஸ்தானில் செய்ய தொடங்கியுள்ளது அமெரிக்க பயங்கரவாதம் பாகிஸ்தானையும் ஈராக்கை போன்று முஸ்லிம்களின் சமூக மத்திய நிலையமாக விளங்கும் மஸ்ஜிதுகளை குறிவைத்து தாக்குகின்றது.
பாகிஸ்தானிய அமெரிக்க கூலிபடைகள் குண்டுகளை வெடிக் வைக்கின்றன மஸ்ஜிதுகளை தகர்கின்றன , முஸ்லிம்களை உடல்களை துண்டு துண்டாக சிதறடிகின்றன முஸ்லிம்களை கொன்று முஸ்லிம்கள் மத்தியல் பிளவுகளை உருவாக்கி தமது இலக்குகளை இலகுவாக அடைந்து விட துடிக்கின்றன தொடராக பாகிஸ்தானில் இஸ்லாமிய தலைவர்களும் , மஸ்ஜிதுகளும் தாக்க படுகின்றன தினமும் பல நூறு முஸ்லிம்கள் கொலை செய்யபடுகின்றனர்.
ஒவ்வொரு முறையும், பாகிஸ்தானில் இந்த குண்டுகளை வெடிக் செய்பவர்கள் அமெரிக்க , பாகிஸ்தானிய ஏவல் பேய்கள்தான் என்பதில் அரசியல் , இராணுவ நிலவரங்களை ஆராய்பவர்களுக்கு எந்த சந்தேகமும் வராது என்பதுடன் பாகிஸ்தானின் முக்கிய இஸ்லாமிய அமைப்புகள் இந்த குண்டு வெடிப்புகள் அமெரிக்க ,பாகிஸ்தானிய உளவு அமைப்புகளின் நாச வேலைகள்தான் என்று மிகவும் பகிரங்கமாக குற்றம் சுமத்துகின்றன , நேற்று வெளியிடபட்ட ஒரு பிரதான இஸ்லாமிய அமைப்பின் அறிக்கையில் வடக்கு வஸரிஸ்தான் பிரதேசத்தின் மீது அமெரிக்க , பாகிஸ்தானிய அரசுகள் நடத்த போகும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவையும் பாகிஸ்தான் படைவீரர்களின் ஆதரவையும் பெற்று கொள்வதற்கு அமெரிக்க , பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் சதி வேலைதான் இந்த தொடர் குண்டு வெடிப்புகள் என்று குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானின் இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் இஸ்லாமிய போராளிகளை தாக்குவதை பாவமாக பார்க்கும் மனப்பாங்கு கொண்டவர்கள் பல தடவைகள் போராளிகளுடன் ஏற்பட்ட போரில் ஆயுதங்களுடன் போராளிகளிடம் சரண் அடைந்துள்ளார்கள் என்பது இதைதான் காட்டுகின்றது மஸ்ஜிதுகளில் வெடிக்கும் குண்டுகளுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தாலிபன்கள் மறுத்து வருகின்றனர் என்பது கவனிக்கப்படவேண்டும்

Written by poralikall

March 14, 2010 at 10:04 pm

அமெரிக்க கனவு நிஜமாகும் சோமாலியா தேசம்

leave a comment »

சோமாலியாவில் இடம்பெற்றுவரும் மோதல்களை  தொடர்ந்து  தலைநகரின் போர் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்த படுகின்றனர் . கடந்த மூன்று நாட்களில் மட்டும்  தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அரசுத் தாக்குதல்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது எனவும், இதனால் பொதுமக்கள் 2 கிமீ தூரத்துக்குக் குறையாமல் வெளியேறுமாறு மேயர் அப்துரிசாக் முஹம்மத் கூறியுள்ளார் எனிலும் ஷரிப் நிர்வாகத்துக்கு எதிராக போராடும் போராளிகளின் முன்னேற்றம் மிகவும் வேகமாக இருப்தாக அறிய முடிகின்றது

ஷரிப் அரசுக்கு எதிராக போராடும் அமைப்புகளின் முன்னணி அரண்களை நோகி அரசுப் படைகள் எறிகனைகளை வீசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோமாலியா நாடு அரசு இல்லாத நாடாக கருத பட்டது இஸ்லாமிய வாதிகளின் ஒருவரான ஷரிப் என்ற இஸ்லாமிய அறிஞரின் ஒருவரின் தலைமையில் திரண்ட சோமாலியா மக்கள் UIC -Union of Islamic Courts என்ற அமைப்பை நிறுவி சோமாலியாவை பால் படுத்திகொண்டு இருந்த யுத்த பிரபுகளுடன் போரிட்டு அவர்களை வெற்றி கொண்ட இஸ்லாமிய போராளிகள்    தமக்கு என்று ஒரு அரசை ஏற்படுத்தினார்கள் அங்கு சட்டம் , ஒழுங்கு , முறையாக பலமாக கருதப்பட்ட ஷரிப் நிர்வாகத்தினால் அமுல் படுத்தபட்டது இருண்டு கிடந்த சோமாலியா மக்களின் உள்ளங்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது பல பிரிவுகள் இணைந்து ஷரிப் நிர்வாகத்தினை பல படுத்தினர் ஆனால் ஒன்றுமையாக இருந்த இஸ்லாமிய வாதிகள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் அதிகரித்தது அரச நிர்வக்கதில் இருந்து ஸபாப் என்ற இஸ்லாமிய போராளிகள்  அமைப்பு பிரிந்தது இன்று மீண்டு சோமாலியா மக்களின் எதிர்காலம் போர் முனைப்பு பெற்று தெளிவு இன்றி இருக்கிறது ஷரிப் தலைமையிலான UIC -Union of Islamic Courts அதிகாரத்துக்கு வருவதை அமெரிக்க பல வகையில் தடுக்க முயன்று தோற்று போனது.

கெனியாவில் CIA தளம் அமைத்தது இஸ்லாமிய போராளிகளுக்கு எதிரான யுத்த பிரபுகளுக்கு பல கோடி டாலர்களுக்கு ஆயதங்களை வழங்கியதுடன் எதியோபியா அரச படைகளை  மறைமுகமாக இஸ்லாமிய போராளுகளுக்கு எதிராக களத்திலும் இறக்கி விட்டது  ஆனால் அனைதிலும் அமெரிக்க நினைத்தது நடக்கவில்லை ஷரிப் நிர்வாகம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது எனிலும் ஸபாப் பிரிந்தமை மீண்டும்  ஷரிப் நிர்வாகம் பலவீனம் கண்டு வருகின்றது அமெரிக்கா விரும்பியதும் முயன்றதும் இப்போது நடந்து வருகின்றது என்பதைத்தான் கள நகர்வுகள் காட்டுகின்றது  சோமாலியாவில் அழிவுக்கு மேற்கு நாடுகள் தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது

சோமாலியா வளமான மிக நீண்ட கடலை கொண்டுள்ளது. ஆனால் அங்கு மீனவர்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர். மீன்பிடிக்க கடலுக்கு சிறிய ரக படகில் சிறிய வலையுடன் சென்றால், மீன்கள் கிடைப்பதில்லை. காரணம் சோமாலியா கடல் மீன்களை பிறநாட்டு அதி நவீன மீன்பிடி கப்பல்கள் வந்து அள்ளிக் கொண்டு போகின்றன.சோமாலியா மக்களிடம் நவீன மீன் பிடி கருவிகளோ நவீன கப்பல் வசதிகளோ இல்லை இதனால் கள்ள தனமாக வரும் வெளிநாட்டு அதி நவீன கப்பல்கள் எதையும் இந்த வறிய மீனவர்களுக்கு மிச்சம் வைப் பதில்லை ஒரு நிலையான அரசாங்கம் இல்லாத சோமாலிய மீனவர்களால் இந்த அத்து மீறல்களை பசியுடம் மொவ்னமாக பார்த்துக் கொண்டிருக்க மட்டும் தான் முடிகிறது ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள், தமது நாடுகளில் அணு உலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், வேறு இரசாயன நச்சுக் கழிவுகளையும் கொண்டு வந்து திருட்டுத்தனமாக இங்குதான் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இந்த நச்சுக் கழிவுகள் சோமாலிய கடற்கரையை மாசுபடுத்துகின்றன. கடலின் கரை பகுதி மீன்கள் இறகின்றன சோமாலியா மக்கள் பல உயிர் கொல்லி நோய்களுக்கு ஆளாகின்றனர் . இதனால் வேலை இழந்த மீனவர்கள் தான், இப்போது கடற்கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர் என்று அறிய முடிகின்றது

Written by poralikall

March 14, 2010 at 12:53 am

றீஹல் கோரி -Rachel Corrie- பலஸ்தீன மக்களுக்காக தன் உயிரை தியாகம் செய்த அமெரிக்க பெண்

leave a comment »

றீஹல்  கோரி -Rachel Corrie-பலஸ்தீன மக்களுக்காக தன் உயிரை தியாகம் செய்த அமெரிக்க பெண் இவர் அமெரிக்க வோசிங்டன் ஒலிம்பியா பகுதியை சேர்ந்த ஒரு இளம் பட்டதாரி இவர் “International Solidarity Movement,”என்ற அமைப்பின் ஒரு உறுபினராக  பலஸ்தீன் சென்றார் ஆனால் இவர் திரும்பி அமெரிக்க செல்லவில்லை.

23 வயது ஆனா இந்த இளம் பெண் காஸா நப்லுஸ் பகுதியில் 2003 ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி இஸ்ரேல இராணுவ தாங்கி ஒன்றால் மிதித்து படுகொலை செய்யபட்டார் இஸ்ரேல பயங்கரவாதம் காஸா நப்லுஸ் பகுதியில் பலஸ்தீன மக்களின் வீடுகளை புல்டோசர்களை கொண்டு உடைத்து அழித்து கொண்டு இருந்த போது இவர் ஒரு வீட்டின் முன் நின்று புல்டோச்சர்களை தடுத்து நிறுத்த முற்பட்டார்  இஸ்ரேல பயங்கரவாதத்தை சாத்வீக முறையில் தடுக்க முற்பட்டார் வீடுகளை உடைத்து  கொண்டு முன்னேறி வந்த இராணுவ தாங்கி ஒன்றால் மிதித்து படுகொலை செய்யபட்டார் பலஸ்தீன மக்களின் வீடுகளை பாதுகாக்க தன்னை அற்பனித்தார் இவரின் தியாகத்தை பலஸ்தீன மக்கள் என்றும் நினைவு கூறுகின்றனர் இந்த மாதம் 16 ஆம் திகதி இவர் கொல்லபட்டார் என்பது குறிபிடதக்கது

Written by poralikall

March 13, 2010 at 12:59 am

ஈராக்கில் அப்பாவி பொது மக்களை கொலை செய்யது பின்னர் வருந்தும் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி

leave a comment »

Written by poralikall

March 12, 2010 at 8:48 pm

அஷ்ஷெய்க் முஹம்மத் அல் தந்தாவி வபாதானார்

leave a comment »

எகிப்து அல் – அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தரும்,  இஸ்லாமிய  மார்க்க அறிஞருமான அஷ்ஷெய்க் முஹம்மத் அல் தந்தாவி தனது 82 ஆவது வயதில்  ரியாத்தில் வபாதானார். அவரின் குடும்பத்தினர் விரும்பிய படி     ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம் பெற்றது.

மாரடைப்பு காரணமாக இவர் ரியாதில் வைத்து மரணமடைந்தார். இவர் சவுதி அரேபிய அரசின் இஸ்லாத்தின் வளர்சிக்கு   பங்களிப்பு செய்தவர்களுகான விருது ஒன்றை பெற்று கொள்வதற்கான சவுதி சென்றிருந்தார் இவர் அதிகமான் புத்தகங்களை எழுதியுள்ளார் குறிப்பாக அல் குர்ஆனுக்கு  விளக்க உரையாக 15 பாகங்களையும்  7000  பக்கங்களையும் கொண்ட தப்ஸீர் பிரபலமானது.

இவர்  நிகாப் என்ற முகத்திரை பற்றி குறிபிட்டதாக  கூறப்படும் கருத்துகளால் பெரிதும் அறியப்பட்டவர்  “முகத்திரைக்கும் இஸ்லாத்திற்கும்   எந்த சம்பந்தமும் இல்லை அது இஸ்லாம் கூறும்  வழி  முறை அல்ல என்று கூறியதாக கூறப்பட்டது தந்தாவி இதனை மறுத்துள்ளார். அவர் இது பற்றி கூறுகையில், நிகாபிர்க்கான தடை பல்கலைகலக வளாகத்தில் மட்டும் தான் என்றும் மற்ற பொது இடங்களில் நிகாப் அணிய தான் மறுப்பு தெரிவிக்க வில்லை என்றும் அவர் விளக்கம் தெரிவித்து இருந்தார் . குறித்த பல்கலைகலக வளாகத்தில் சில வாலிபர்கள் பெண்கள் போன்று நிகாப் அணிந்து பெண்களின் விடுதிக்குள் சென்று வந்ததை அவதானித்த நிர்வாகம் இந்த தடையை அமுல் படுத்தியுள்ளது என்பது குறிபிட தக்கது

Written by poralikall

March 12, 2010 at 9:40 am

“எதிரியை எதிரியால் அழிக்கும் ப்ராஜெக்ட் “

leave a comment »

Project for destroy enemy by enemy:

அமெரிக்காவின் குடியேற்ற நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது” என, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:”பாக்.அதிபர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானில் அமெரிக்காவின் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது. இதன் மூலம், பாகிஸ்தான், அமெரிக்காவின் குடியேற்ற நாடாக மாறி வருகிறது.எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானை இஸ்லாமிய நலன் பேணும் நாடாக மாற்றுவோம்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாதாக .இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

பர்விஸ் முஷாரப் ,  அலி தர்தாரி போன்ற அரசியல் தலைவர்களின் காலத்தில் தான் அமெரிக்கா தனது உளவு அமைப்புகளான CIA ,FBI Black Water போன்ற அரச பயங்கரவாத அமைப்புகளின் ஊடாக  ஈராக்கை  போன்று முஸ்லிம்களை  கொலை செய்து பலியை முஸ்லிம்கள்  மீது போடும் நாசகார  வேலையை செயல்படுத்த தொடங்கியது      பாகிஸ்தானில் தனது உளவு பயங்கரவதத்தை  நிறுவி சுமார் 1000 பாகிஸ்தான் வாலிபர்களுக்கு பயிற்சி வழங்கி முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொலை செய்யும் படு பாதகமான் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது இந்த திட்டத்தை அமெரிக்கா “எதிரியை எதிரியால் அழிக்கும் ப்ராஜெக்ட் ”  – Project for destroy enemy by enemy- என்று  கூறுகின்றது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இந்த ப்ராஜெக்ட்டின் விளைவுதான் மஸ்ஜிதுகளில் வெடிக்கும் குண்டுகள் என்பது குறிபிடதக்கது

Written by poralikall

March 11, 2010 at 10:34 pm

அமெரிக்க உளவு விமான தாக்குதல்களுக்கு தொடர்ந்தும் பலியாகும் பாகிஸ்தான் முஸ்லிம் கிராம மக்கள்

leave a comment »

பாகிஸ்தான் வடக்கு வஸரிஸ்தான் பகுதியில் அமெரிக்க உளவு விமான நடத்திய பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 18  பேர் பலியானதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிகின்றன இந்த தாக்குதலை பாகிஸ்தான் உளவுத்துறை நேற்று உருதிப்படித்தியுள்ளது முதல் தாக்குதல் பொது மக்கள் பிரயாணம் செய்த வாகனத்தின் மீது நடத்தபட்டது இதன் போது 10பேர் வரை பலியாகினர் இரண்டாவது தாக்குதல் வபாத்தா ஜனாசாகளை எடுத்துகொண்டு இருந்தவர்கள் மீது நடாத்தபட்டுள்ளது இதன் போது 8 பேர் கொல்லப்படுள்ளனர் இந்த தாக்குதலில் அதிகமான மக்கள் கடுமையாக காயபட்டுள்ளனர் இது பற்றி அமெரிக்க தகவல் தாலிபான் ஆதரவு ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக கூறுகின்றது.

வாஷிங்டனை தளமாக கொண்டு இயங்கும் புத்திஜீவிகள் அமைப்பு ஒன்று கடந்த மாதம் வெளயிட்ட அதன் அறிக்கையில் கடந்த 6 வருடங்களில் மட்டும் அமெரிக்க உளவு விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் 1200 பேர் கொல்லபட்டுள்ளதாக கூறியுள்ளது , இது பற்றி கருது தெரிவித்த மற்றும் ஒரு அமெரிக்க புத்திஜீவிகள் அமைப்பு 1200 என்பது மிகவும் குறைந்த ஒரு தொகையாகும் கொல்லப்பட்டவர்கள் , காயம் அடைந்தவர்களின் தொகை 1200 அல்ல அதன் பல மடங்காகும் என்று கூறியுள்ளது

Written by poralikall

March 11, 2010 at 8:56 pm

அதிகரிக்கும் அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரம்

leave a comment »

உலகில் பாலியல் பலாத்காரங்கள் மிகவும் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கதான் முதல் இடத்தை தொடர்ந்து கைப்பற்றி வருகின்றது என்பது அதிகமானவர்களுக்கு தெரியும்  தற்போது வெளி வரும் அறிக்கைகள்  இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரத்திலும் அமெரிக்காவை எவரும் முந்தி விட முடியாது என்று கூறுகின்றது    அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்க ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன கடந்த வருடத்தில்  -2009 -மட்டும் 37000 பெண் இராணுவ சிப்பாய்கள்   பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியதாக அந்த அறிக்கை கூறுகின்றது எனிலும் இந்த தொகை மிகவும் சிறியது என்றும் பாலியல் பலாத்காரம் செய்யபட்ட அதிகமான பெண் இராணுவ சிப்பாய்கள் அது பற்றி முறைப்பாடு செய்வது இல்லை  முறைப்பாடு செய்தால் பழிவாங்கபடுவதாக கூறுகின்றனர் ஈராக்கிலும் , ஆப்கானிஸ்தானிலும் மொத்த இராணுவ  பாலியல் பலாத்காரதில் 25 வீதம் அங்குதான் நடை பெறுவதாக பெண்டகன் அறிக்கை ஒன்று கூறுகின்றது

அமெரிக்கா முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை விடவும்  கூடுதல்   என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பாலியல் தொடர்பான குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

இதற்காக அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் முகவரி உள்ளிட்டவை அடங்கிய சேவையை தனியார் நிறுவனம் ஒன்று வழங்குகிறது. இதன்மூலம், ஒருவர் தாம்  வாழும் பகுதிக்கு அருகில் பாலியல் குற்றங்களை புரிவோர் என்று கருதப்படுவோர் யாரேனும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் விளம்பரப்படுத்திவருகின்றது என்பது குறிபிடதக்கது

Written by poralikall

March 10, 2010 at 10:26 pm

ஆப்கானிஸ்தான் போராளிகளை பிரிக்கும் அமெரிக்க முயற்சி வெற்றி பெருமா ?

leave a comment »

ஹிக்மத்தியார் தலைமையிலான  ஹிஸ்பே இஸ்லாமி தனது ஆயுதங்களை அமெரிக்க பொம்மையான கர்சாய் நிர்வாகத்திடம் இன்று ஒப்டைக்க தொடங்கி இருபதாக செய்திகள் தெரிவிகின்றன   ஹிக்மத்தியார் தலைமையிலான  ஹிஸ்பே இஸ்லாமி ஆப்கானிஸ்தானில் இரண்டாவது பெரிய ஆயுட அமைப்பாகும் இவர்கள் ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய பாரிய ஆயுத இயக்கம் என்பது குறிபிடதக்கது தலிபான்  போராளிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது ஹிஸ்பே இஸ்லாமி அமைப்பு அதிகாரத்தில் இருந்து வெளியேற்றபட்டதுடன் இதன் போராளிகளில் பெரும் தொகையானவர்கள்  தலிபான்  போராளிகளுடன் இணைந்து கொண்டார்கள் ஹிக்மத்தியார் ஈரானில் சிறிது காலம் வாழ்தார் பின்னர் ஏற்ப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில்  தலிபான்  போராளிகளுடன் இணைந்து செயல்பட்டார்

ஹிக்மத்தியாரையும்  தலிபான்  போராளிகளையும் பிரிப்பதற்கு   அமெரிக்க தரப்பு   பல திட்டங்களைத் கொண்டு செயல்பட்டன இறுதியில் பிரிக்கும் முயற்சி வெற்றி பெற்று விட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன  சில வாரங்களுக்கு  முன்னர்  ஹிக்மத்தியார் கர்சாய் நிர்வாகத்தின் உடன்படிக்கை ஒன்றை ஏற்கபோவதாக தகவல் வெளியானது   நேற்று தலிபான்  போராளிகளுக்கும்,  ஹிஸ்பே இஸ்லாமி போராளிகளுக்கும் இடையில் கடும் சமர் வெடித்துள்ளது இதில் 70 பேர் வரை வபாதாகியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன ,ஹிஸ்பே இஸ்லாமி வடக்கு ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளை தனது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கின்றார்கள் அவற்றை தற்போது தலிபான்  போராளிகள் தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்  இதில் ஹிஸ்பே இஸ்லாமி போராளிகள் அதிகமாக தலிபான்  போராளிகலுடன் இணைத்து கொள்வதாகவும் சிலர் கர்சாய் நிர்வாகத்திடம் ஆயுதங்களை கொடுப்பதாகவும் தெரிவிக்கபடுகின்றது  எனிலும்  ஹிக்மத்தியார் தரப்பில் இருந்து எந்த தகவலும் இதுவரை வெளிவர வில்லை  பெரும் தொகையான ஹிஸ்பே இஸ்லாமி போராளிகள் தலிபான்  போராளிகளுடன் இணைத்து கொண்டாள்  பிரிக்கும் அமெரிக்க  முயற்சி வெற்றி பெற்றதாக கூற முடியாது

Written by poralikall

March 9, 2010 at 10:37 pm

மேற்கு ஊடகப் பயங்கரவாதம் பற்றி ஜோன் பிராட்லி

leave a comment »

மேற்கு ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளரும் சவூதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவருமான ஜோன் பிராட்லி என்ற ஊடகவியலாளர் மேற்கு ஊடகத்துறை பற்றி இப்படி கூறுகின்றார்

அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலைத் தாங்கிப்பிடிப்பவை -There is no doubt the American media is deeply pro-Israeli- இஸ்ரேல் நாட்டினுள் உள்ள ஊடகங்கள் இஸ்ரேலை எதிர்த்துக் குரல் கொடுப்பதை விட அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரானவற்றைப் பேசுவது மிகமிகக் குறைவு. CNN மற்றும் BBC போன்ற ஊடகங்கள் அளிக்கும் செய்திகளையும் ஆய்வுகளையும் சில நிமிடங்கள் நடுநிலைப் பார்வையோடு கவனித்தோமானால் அதில் உள்ள இஸ்ரேலிய ஆதரவுத் தன்மை விளங்கும்.

அமெரிக்க ஊடகங்களில் அரபுலக  சிறுவர்கள் கொலை செய்யப்படுவது மறைக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு சிறுவன் இஸ்ரேலில் இறந்தால் அதற்கான ‘சிறப்புப் பார்வை’ நிகழ்ச்சிகள் அமெரிக்க ஊடகங்களில் அரங்கேறுவதைக் காணலாம். காஸா , மேற்குக்கரைப் பகுதிகளை அமெரிக்க ஊடகங்கள் முன்பு குறிப்பிடுகையில் “Occupied” அல்லது “Occupation” போன்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு வந்தது. தற்போது அத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் அடியோடு நிறுத்தப்பட்டு “Contested அல்லது Disputed” போன்ற பிரயோகங்களாக மாறுதல் அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு படி மேலே போய் பலஸ்தீனின் அப்பகுதிகளையே “இஸ்ரேல்” என்றே அழைக்கும் ஊடங்களும் அமெரிக்காவில் உண்டு.

இஸ்ரேல், லெபனான் மீது தொடுத்த போரின் உண்மைக் காரணிகளை அமெரிக்க ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்த விஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்? இரு இஸ்ரேலியப் படைவீரர்களை ஹிஸ்புல்லாஹ் பிடித்துச் சென்றது மட்டும் காண்பிக்கப்பட்ட ஊடகத்தில் அந்த இரு வீரர்கள் லெபனான் எல்லைக்குள் என்ன செய்து கொண்டிருந்தபோது பிடிபட்டனர் என்பது பூசி மெழுகி மறக்கப்பட்டு விட்டது. இரு வீரர்கள் பிணைக்கைதிகளானது போர்க்காரணம் என்றால் பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களும் பெண்களும் அடங்கிய 9000 பேர் இஸ்ரேலியச் சிறையில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களே, அவர்கள் படும் வேதனைகளை யார் வெளியே சொல்வது? அவர்களை யார் விடுவிப்பது?

Written by poralikall

March 9, 2010 at 9:31 pm

துருக்கியில் நிலநடுக்கம் இது வரை 57 பேர் வபாதானதாக தகவல்

leave a comment »

துருக்கியின் கிழக்குப் பகுதியில் இன்று ஓரளவு அதிர்வை உடைய  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 6.0 ஆகப் பதிவானதாக துருக்கி  புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. துருக்கி நாட்டு நேரப்படி அதிகாலை 4.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கதுக்கு இது வரை 57 பேர் வபாதானதாக , தெரிவிக்கபடுகின்றது

Written by poralikall

March 8, 2010 at 9:18 pm

நைஜீரியாவில் ஜோஸ் நகரில் நேற்று மீண்டும் மதத்தின் பெயரால் வன்முறை

leave a comment »

ஜோஸ் நகருக்கு அருகே உள்ள மூன்று நகர் புறங்களில் இந்த சம்பவன் நடை பெற்றுள்ளது இங்கு கிருத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கிடையே பல ஆண்டுகாலமாக முறுகல் நிலை இருந்து வருகின்றது . கடந்த கடந்த ஜனவரி மாதம் நடை பெற்ற கலவரத்தில் 1000 வரையிலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிபிடதக்கது , இந்த முறை கலவரத்தில்  முஸ்லிம்களும்  கிருத்தவர்களுமாக 500  பேர் வரை   கொல்லப்பட்டுள்ளதாக தெரிகின்றது இந்த முறை பாதிக்க பட்டுள்ளவர்கள் கிறிஸ்தவர்கள் என்று செய்திகள் குறிபிடுகின்றன ஜொஸ் நகரம் நைஜீரியாவின் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வடக்குப் பகுதிக்கும், கிருத்தவர்கள் அதிகமமக வாழும் தெற்குப் பகுதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது பதில் அரசத்தலைவர் குட்லக் ஜொனத்தன் இராணுவத்தினரை உசார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Written by poralikall

March 8, 2010 at 8:33 pm

முஸ்லிம் உம்மாஹ் பற்றி அல்லாஹ்வின் தூதரின் முன்னறிவிப்பு

leave a comment »

Written by poralikall

March 8, 2010 at 7:22 pm

கிலாபத் பற்றி அல்லாஹ்வின் தூதரின் முன்னறிவிப்பு

leave a comment »

Written by poralikall

March 8, 2010 at 7:11 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 38 other followers