அஷ்ஷெய்க் முஹம்மத் அல் தந்தாவி வபாதானார்

எகிப்து அல் – அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தரும், இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அஷ்ஷெய்க் முஹம்மத் அல் தந்தாவி தனது 82 ஆவது வயதில் ரியாத்தில் வபாதானார். அவரின் குடும்பத்தினர் விரும்பிய படி ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம் பெற்றது.
மாரடைப்பு காரணமாக இவர் ரியாதில் வைத்து மரணமடைந்தார். இவர் சவுதி அரேபிய அரசின் இஸ்லாத்தின் வளர்சிக்கு பங்களிப்பு செய்தவர்களுகான விருது ஒன்றை பெற்று கொள்வதற்கான சவுதி சென்றிருந்தார் இவர் அதிகமான் புத்தகங்களை எழுதியுள்ளார் குறிப்பாக அல் குர்ஆனுக்கு விளக்க உரையாக 15 பாகங்களையும் 7000 பக்கங்களையும் கொண்ட தப்ஸீர் பிரபலமானது.
இவர் நிகாப் என்ற முகத்திரை பற்றி குறிபிட்டதாக கூறப்படும் கருத்துகளால் பெரிதும் அறியப்பட்டவர் “முகத்திரைக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது இஸ்லாம் கூறும் வழி முறை அல்ல என்று கூறியதாக கூறப்பட்டது தந்தாவி இதனை மறுத்துள்ளார். அவர் இது பற்றி கூறுகையில், நிகாபிர்க்கான தடை பல்கலைகலக வளாகத்தில் மட்டும் தான் என்றும் மற்ற பொது இடங்களில் நிகாப் அணிய தான் மறுப்பு தெரிவிக்க வில்லை என்றும் அவர் விளக்கம் தெரிவித்து இருந்தார் . குறித்த பல்கலைகலக வளாகத்தில் சில வாலிபர்கள் பெண்கள் போன்று நிகாப் அணிந்து பெண்களின் விடுதிக்குள் சென்று வந்ததை அவதானித்த நிர்வாகம் இந்த தடையை அமுல் படுத்தியுள்ளது என்பது குறிபிட தக்கது


