Archive for June 2010
அமெரிக்க ஆப்கான் யுத்தம் தோற்று வருகின்றது
| Year | US | UK | Other | Total |
|---|---|---|---|---|
| 2001 | 12 | 0 | 0 | 12 |
| 2002 | 49 | 3 | 17 | 69 |
| 2003 | 48 | 0 | 9 | 57 |
| 2004 | 52 | 1 | 7 | 60 |
| 2005 | 99 | 1 | 31 | 131 |
| 2006 | 98 | 39 | 54 | 191 |
| 2007 | 117 | 42 | 73 | 232 |
| 2008 | 155 | 51 | 89 | 295 |
| 2009 | 317 | 108 | 96 | 521 |
| 2010 | 200 | 64 | 58 | 322 |
| Total | 1147 | 309 | 434 | 1890 |
அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் ஆப்கான் போராளிகளிடம் மண்டியிட்டு வருகின்றது கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவரும் இந்த ஆக்கிரமிப்பு யுத்தம் போராளிகளை தோற்கடிக்கவில்லை பொதுமக்களை கொன்று குவித்து வருவதுதான் இந்த யுத்தத்தில் அமெரிக்கா புரிந்துள்ள சாதனை.
இந்த யுத்தத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையால் எதையும் சாதிக்க முடியவில்லை தனது ஆக்கிரமிப்பு பேய்களை தினமும் பலிகொடுக்கும் நிலைக்கு இன்று அமெரிக்கா வந்துள்ளது கடந்த பத்து வருடங்களில் 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகள் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு அதிகரித்த இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது என்பதுடன் யுத்த செலவீனமும் அமெரிக்காவால் தாங்க முடியாத அளவு அதிகரித்து வருகின்றது இந்த தோல்வியை அமெரிக்க, நேட்டோ இராணுவ தலைமைகள் ஏற்றுகொள்கின்றது இன்று ஆப்கான் போராளிகள் முப்பது நாட்டு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போராடிவருகின்றனர் என்பது குறிபிடதக்கதுVideo விரிவாக பார்க்க Read the rest of this entry »
சரியும் அமெரிக்காவும் உயரும் ஆப்கானிஸ்தானும்

M.ரிஸ்னி முஹம்மட்
ஆப்கானிஸ்தான் போர் எதிர்பார்த்ததை விடவும் கடினமானதாகவும் மொதுவானதாகவும் நடைபெறுகின்றது என்று சி.ஐ.ஏ.யின் பணிப்பாளர் லியன் பெனிட்டா தெரிவித்துள்ளார், ஆப்கானில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் அரசாங்க ஊழல், போதைபொருள் கடத்தல், தலிபான் போராளிகளின் தாக்குதல் தொடர்ந்தும் பிரச்சினைக்குரியவை என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க பிரபல்யமான பொருளியல் பத்திரிகையான “வேல் இஸ்டீட்” -wall street journal-ஆப்கான கர்சாயி நிர்வாகம் மிக மோசமான ஊழல் நிறைந்த நிர்வாகம் என்றும் கடந்த மூன்று வருடங்களில் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை ஊழல் செய்து வெளிநாட்டிலுள்ள தமது வங்கி கணக்குகளில் வைப்பு செய்துள்ளதாக கூறியுள்ளது அமெரிக்க ஆப்கான் பொம்மை அதிபர் கர்சாயின் சகோதரரின் அனுசரணையுடன் ஆப்கானிஸ்தானில் போதைபொருட்கள் கடத்தபடுவதாகவும் குற்ற சாட்டுகள் எழுந்துள்ளன தாலிபான் போராளிகளின் கட்டுபாட்டு பகுதிகளில் போதை பொருள் விவசாயம் தடைசெய்யபடுள்ளது என்பது குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க Read the rest of this entry »
அது அல்லாஹ்வின் அருட்கொடை . அவன் நாடியவருக்கு அதனை வழங்குகிறான் (அல் குர்ஆன் 5:54)

M.ஷாமில் முஹம்மட்
ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் ஒரு பார்வை
உலகில் இன்று அதிகமாம ஆச்சரியமாக பார்க்கப்படும் விடையமாக ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் விடயம் கருதபடுகின்றது ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ள கனிமத் தாதுக்களின் மதிப்பு மட்டும் ஒன்று தொடக்கம் இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் என தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு ட்ரில்லியன் டொலர்கள் என வைத்து கொண்டாலும் 1 ட்ரில்லியன் டொலர் இதை பில்லியன் கணக்கில் -மில்லியன் கணக்கில் அல்ல – சொன்னால் 1000 பில்லியன் டொலர்கள் ஆகும் இவ்வளவு பெரிய கனிமத் தாதுக்களை ஆப்கானிஸ்தான் எப்படிப் பயன்படுத்தப் போகிறது இதை அமெரிக்காவும் மற்ற மேலாதிக்க நாடுகளும் எப்படி சுருட்டப் போகிறது என்பது தான் இன்றைய பொருளாதார உலகின் பிரதான வினா இந்த வினாக்களுக்கு அப்பால் சில விடையங்களை நாம் பார்போம்
லித்தியம் ,இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் இரத்தினம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான் கண்டுகொண்டது என்று அமெரிக்கா கூறியது ஆனால் முதல் முதலில் 1974ஆம் ஆண்டு தெற்கு காபூல் பகுதியில் பல மில்லியன் தொன் நாகம் இருப்பதாக அறியப்பட்டது இந்த தெற்கு காபூலின் நாகப் படிவு பற்றிய ஆய்வை 1974 ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசு ரஷ்யா உதவியுடன் மேற்கொண்டது தொடர்ந்து வந்த காலபகுதியில் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது 1979 தொடக்கம் 1989 வரையிலான 10 வருட ஆக்கிரமிப்புக்கு விரிவாக பார்க்க Read the rest of this entry »
பாகிஸ்தானில் அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள் ஐவருக்கு பத்து வருட சிறை ! கேரி புரூக்ஸ்க்கு விடுதலை ?
S.M.அப்துல்லாஹ்
பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டார்கள் என்ற குற்றசாட்டில் அஹ்மத் அப்துல்லா , உமர் பாருக், அமன் ஹஸன் ,வாகர் ஹுஸைன் கான் மற்றும் ராமி சம்சம் என்ற ஐந்து அமெரிக்க முஸ்லிம் வாலிபர்கள் இந்த வருடம் ஜனவரிமாதம் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர் இந்த அமெரிக்க முஸ்லிம் வாலிபர்கள் ஐந்து பேரிடம், அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களான CIA , FBI மற்றும் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர் இவர்கள் மீதான விசாரணைகள் பல கட்டங்களாக நடைபெற்றது ஐந்து இளைஞர்கள் மீது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது .
அமெரிக்காவின் வாஷிங்டன், விர்ஜினியா மாகாணத்திலிருந்து பாகிஸ்தானுக்கு உறவினர் ஒருவரின் திருமணம் மற்றும் சுற்றுலா நோக்கம் கருதி தாம் வந்ததாகவும் பாகிஸ்தான் வரிய குடும்பங்களுக்கும் அகதிகளுக்கும் உதவும் நோக்குடன் இருந்ததாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர் இவற்றை கருத்தில் கொள்ளாத பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று வியாழகிழமை இவர்களுக்கு தலா பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது இந்த தீர்ப்புக்கு எதிராக இவர்கள் மேல்முறையீடு செய்யவுள்ளனர்
இதே வேளை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த கேரி புரூக்ஸ் புளக்னர் வயது 51 என்ற அமெரிக்க நபர் கை துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யபட்டார் இவர் தான் அஷ்ஷெய்க் உஸாமா பின் லாதினை கொலை செய்ய பாகிஸ்தான் வந்துள்ளதாக கூறியுள்ளார் இவர் தற்போது பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவரின் உறவினர்களின் தகவலின் படி விரிவாக பார்க்க Read the rest of this entry »
பிளக் வேட்டர் -Blackwater Worldwide- பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் நூல் ஆசிரியருமான Jeremy Scahill

M.ரிஸ்னி முஹம்மட்
பிளக் வேட்டர் -Blackwater Worldwide- பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் -Blackwater: The Rise of the World’s Most Powerful Mercenary Army -என்ற மிகவும் பிரபல்யமான நூலை எழுதியவருமான ஜெர்மி இஸ்காஹில் -Jeremy Scahill- வழகியுள்ள பேட்டி
இவரின் பேட்டியை பார்பதற்கு முன்னர் இங்கு தரப்படும் Blackwater Worldwide சமந்தமான விபரங்களை படித்து விட்டு பார்க்கவும் விளங்குவதற்கு இலகுவாக அமையும்
பிளக் வேட்டர் 1997 இல் எரிக் பிரின்ஸ் – Erik Prince- என்பவனால் உருவாக்கபட்ட அமெரிக்க தனியார் இராணுவ கம்பனி. இது Xe Services LLC என்றும் அழைக்கபட்டது இந்த நிறுவனம் 2007 இல் Blackwater Worldwide என்று பெயர்மாற்றம் பெற்றது இந்த தனியார் இராணுவ அமைப்பு ஒரு வருடத்துக்கு 400,00 உறுபினர்களை பயிற்சி வித்து வருகின்றது. இது இரண்டு பிரதான பிரிவாக இயங்கி வருகின்றது ஒன்று அமெரிக்க தேசிய பாதுகாப்புகான வெளிப்பாட்டையான நடவடிக்கை பிரிவு இரண்டாவாது அமெரிக்க தேசிய பாதுகாப்புகான இருண்ட அல்லது இரகசிய பிரிவு இந்த அமைப்பின் வெளிப்பாட்டையான நடவடிக்கை பிரிவு பொதுவாக அமெரிக்காவிலும் அமெரிக்கா தளம் அமைத்துள்ள 75 நாடுகளிலும் செயல் படுகின்றது இருண்ட அல்லது இரகசிய பிரிவு குறிப்பாக ஈராக் , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , யமன் போன்ற நாடுகளில் இயங்கு கின்றது இந்த இருண்ட அல்லது இரகசிய பிரிவு அமெரிக்க CIA உளவு அமைப்புடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டுள்ளது ,இந்த பிரிவு கொலை , கடத்தல் , அழிவு நாசவேலை போன்றவற்றை செய்து வருகின்றது இதை செய்வதற்கு அமெரிக்க ஒபாமா நிர்வாகம் முழு அனுமதி வழங்கிவருகின்றது என்று குற்ற சாட்டுகள் உள்ளன.விரிவாக பார்க்க Read the rest of this entry »
துருக்கி இஸ்ரேலுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க ஒரு ரோட்மெப்- Road Map தயாரித்துள்ளது

M.ரிஸ்னி முஹம்மட்
காஸாவுக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது இஸ்ரேலிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் இதை தொடர்ந்து துருக்கிய பாராளுமன்றம் இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது இதில் . துருக்கியை ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக்குமான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள கோரினர் துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 16 வகையான இராணுவ , ஒப்ந்தங்கள் நடைமுறையில் உள்ளது . இந்த உறவுகளை உறைநிலையில் வைக்க வேண்டும் துருக்கி தீர்மானித்தது
இதை தொடர்ந்து துருக்கி இஸ்ரேல் இந்த தனது இராணுவ தாக்குதல் தொடர்பாக சர்வதேச சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் . இஸ்ரேல் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் , கொல்லப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று துருக்கி கோரியது ஆனால் இவற்றை இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசு புறகணித்து வருகின்றது இதை தொடர்ந்து துருக்கிய கடந்த வியாழகிழமை துருக்கிய பிரதமர் தலைமையில் கூடிய துருக்கி உயர் பாதுகாப்பு சபை இஸ்ரேலுடன் உள்ள அணைத்து இராணுவ உறவுகள் , உடன்படிக்கைகள் என்பன வற்றை முழுமையாக துண்டிக்கும் முகமாக பல படித்தரங்களை கொண்ட ரோட் மெப் ஒன்றை தயாரித்துள்ளது.விரிவாக பார்க்க Read the rest of this entry »
இஸ்ரேல் என்ற நாடு யூத மத அடிப்டை கோட்பாடுகளுக்கு மாறானது என்று கூறும் யூதர்கள்

1948ல் ஐ.நாவின் தலைமையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான அநியாயம் விதைக்கப்படுகிறது. யூதர்களுக்கு என்று ஒரு சட்ட விரோத நாடு உருவாக்க படுகின்றது . கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருந்தும் ஆக்கிரமிப்பு சட்ட அந்தஸ்தை பெறுகின்றது. யூதர்களின் “ஊடுருவல்” 1948க்கு நெடுங்காலம் முன்பே தொடங்கியது. 1880களிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கிவிட்டார்கள் .
எப்படி இந்தியாவில் பாபர் மஸ்ஜிதை இடிபதற்கு ஆதாரம் அற்ற புராண-இதிகாச கதைகள் காராணமாக அமைந்ததோ அதேபோன்று இஸ்ரேல் உருவாக புராண-இதிகாச கதைகள் ஆதாரமாக அமைந்தது சியோனிஸ்டுகள். பைபிளின் பழைய ஏற்பாட்டின்படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக கூறினார். சியோனிஸ்டுகள் தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக பைபிளின் பழைய ஏற்பாட்டினை எடுத்துகொன்டனர் இஸ்ரேல என்ற யூத சியோனிச கற்பனை நாட்டை பலஸ்தீன் என்ற முஸ்லிம் தேசத்தில் இருப்தாக தெரிவித்து 1948ல் ஐ.நா சபையின் தலைமயில் அமெரிக்க , பிரிட்டன் உதவியுடன் இஸ்ரேல என்ற கற்பனை நிஜ உருவம் பெற்றது விரிவாக பார்க்க Read the rest of this entry »
மால்கம் X அமெரிக்க இஸ்லாமிய எழுச்சியின் ஒரு மைல் கல்

இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதை முன்வைத்து அமெரிக்காவில் , கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய இஸ்லாமிய சாத்வீ க போராளி கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக் எதிர்த்து போராடிய போராளி மால்கம் X – Malcolm X- கொலை செய்ய பலமுறை FBI முயற்சிச் செய்தது இறுதியாக 1965 ஆம் ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது மால்கம் X ஒருவனால் சுட்டு கொல்லபட்டார் சுட்டு கொன்றவன் தோமஸ் ஹாகன் இவன் அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானான் . ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால் யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை .
அமெரிக்காவில் மோசமான குடும்பத்தில் பிறந்தார் மால்கம் X . இவரின் ஆரம்ப வாலிபம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். கல்வி நின்று போனது. போதைப் போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் விரிவாக பார்க்க Read the rest of this entry »
இஸ்லாம் எழுச்சி பெரும் கிர்கிஸ்தானில் -Kyrgyzstan- இன வன்முறை தூண்டப்படுகின்றது
Kyrgyzstan- கிர்கிஸ்தானில் இரண்டாவது பெரிய நகரமா ஓஷ் நகரில் கலவரம் வெடித்து குறைந்தது 200பேர் உயிரிழந்ததாக தெரிவிக்க படுகின்றது ஓஷ் நகரத்தில் பெருமளவு உஸ்பெக் மக்கள் வசிக்கின்றனர். கிர்கிஸ்தான் நாட்டின் தெற்கில் உள்ள ஓஷ் நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான கிர்கிஸ் இளைஞர்கள் சண்டையில் ஈடுபட்டனர்.
இரு குழுக்களிடையே ஆரம்பித்த பிரச்சினை துப்பாக்கிச் சூட்டுச் கலவரமாக விரைவில் மாறியதாக உள்ளூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. நகரில் பல கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், உள்ளூர் தொலைக்காட்சி நிலையம், ஆகியன சேதப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் தெற்குப் பகுதியில் கிர்கீசிய இனத்தவருக்கும் உஸ்பெக்கியர்களுக்கும் இடையில் இன்றும் கடும் முறுகல் நிலை நீடித்து வருகிறது.
நேரில் கண்டவர்களை ஆதாரம் காட்டி தெரிவிக்க படும் தகவலில் கிர்கீசிய இன குழுக்கள் உஸ்பெக்கிய பகுதிக்கு சென்று தாக்குதல்களை ஆரம்பித்ததாக தெரிவிக்கின்றது அதனுடன் கிர்கீசிய இன பகுதிகலில் உஸ்பெக் வாலிபர்கள் புகுந்து தாக்குதல்கள் நடத்துவதாகவும் ,பெண்களை கற்பழிபதாகவும் வதந்திகள் பரவியதாக தெரிவிக்க படுகின்றது Video வுடன் விரிவாக பார்க்க Read the rest of this entry »
ஈரானுக்கு எதிராக மேற்கு உலகம் நான்கு முகத் தடை விதித்துள்ளது
ஈரானுக்கு எதிராக நான்கு சுற்று தடைகளை விதிப்பது குறித்த வாக்கெடுப்பு, பாதுகாப்புப் பேரவையில் நடைபெற்றுள்ளது இதில் 15 நாடுகளில் 12 நாடுகள் ஈரானுக்கு தடைகளை விதிக்குமாறும் துருக்கி , பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளும் தடைகளுக்கு எதிராக வாக்களிக்க லெபனான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை ஈரான் இந்த தடை எமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது இந்த தடை ஈரானுக்கு கொசு கடிபோன்றது என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
அணுத் திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபந்தனைகளை ஈரான் பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக மேற்கு கூறிவருகின்றது இதுவரை காலமும் ஈரான் எதிர்நோக்கிய கடுமையான பொருளாதாரத் தடையாக இது அமையும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். ஈரான் இரகசியமாக அணுவாயுதங்களைத் தயாரித்து வருவதாக மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், சக்தி வளப் பயன்பாட்டுக்காக தாம் அணு ஆலைகளைப் பயன்படுத்துவதாக ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது
இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலை நியாயப்படுத்த முயன்ற அமெரிக்க ஊடகங்கள்
அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலை மறைக்கும் விதமாக எப்படி செய்திகளை வெளிவிட்டன என்பதை ரஷ்யா டுடே ஊடகம் சுட்டிக்காட்டும் செய்தி அமெரிக்க பிரதான ஊடகங்கள் இஸ்ரேலிய பயங்கரவாத்க்கு ஆதரவாக தமது செய்திகளை ,ஆவணங்கள் தயாரித்து வருவது எமக்கு தெரிந்த விடையம் சில தினங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை நிவாரண உதவிக் கப்பல்கள் மீது நடாத்திய தாக்குதல்களை அமெரிக்க ஊடகங்கள் தமது செய்திகளின் ஊடாக நியாயப்படுத்த முயன்றமாதிரியை இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ வை பார்த்து தெரிந்து கொள்ளமுடியும்
முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது
M.ரிஸ்னி முஹம்மட்
காஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போதுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில் பெண்கள் , சிறுவர் , சிறுமியர் ,வயோதிபர் என்ற பாகுபாடுகள் இன்றி வதைக்க படுகின்றனர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான , மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து, சமையல் வாயு, எதுவுமே காஸா வுக்குள் இஸ்ரேலியஆக்கிரமிப்பு படையால் அனுமதிக்க படுவதில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னர் S.S. Free GAZA என்ற கப்பல்கள் 2008 ஆம் ஆண்டில் காஸாவை அடைந்தது அதன் பின்னர் எந்த நிவாரண உதவி கப்பல்களும் அனுமதிக்க படவில்லை மருத்துவமனைகளில் சிகிச்சை இன்றி குழந்தைகளின் இறப்புவீதம் மிக மேசமாக அதிகரித்துள்ளது. நான்கு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமாக மாறிவருகின்றது காஸா வில் 70 வீதமானவர்கள் மிகவும் மோசமான வறுமை நிலையில் போதுமான உணவு இன்றி உள்ளனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »
Millatfacebook நாமும் இணைவோம்
பேஸ்புக்-Facebook- இணையத்தளம் உலகத்துக்கான இறைவனின் இறுதித் தூதரை அவமதிக்கும் காட்டூன் படங்களை தொடர்ந்தும் பதிவுசெய்ய அனுமதித்து வருகின்றமையால் முஸ்லிம் உலகில் கடும் வெறுப்பை சம்பாதித்து வருகின்றது பேஸ் புக்கிற்கு மாற்றீடாக பல சமூக தொடர்பாடல் தளங்களை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றது இந்த வகையில் பாகிஸ்தான் வாலிபர்கள் பலர் இணைந்து `மில்லத் பேஸ் புக்’ -Millat facebook- என்ற புதிய சமூக வலைத் தளத்தை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளனர். உலகெங்கும் வாழும் சுமார் 1.6 பில்லியன் முஸ்லிம்களுக்குமான ஓர் உறவுப் பாலமாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் தளமாகவும் இந்த இணைய வழி சமூக வலைத்தளம் திகழும் என மில்லத் பேஸ் புக்கின் தயாரிப்பாளர்களான பாகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான் ஸஹீர் தலைமையிலான கணினி மென்பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர் Read the rest of this entry »
காஸா மீதான இஸ்ரேலிய முற்றுகையின் காரணமாக குழந்தைகளின் மரணம் 374 ஆக உயர்ந்துள்ளது
இரண்டாவது முறையாக சென்ற கப்பலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையால் தடுக்கப்பட்டுள்ளது
முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மேலும் ஒரு கப்பல் புறப்பட்டது றீஹல் கோரி -Rachel Corrie என்ற அந்த கப்பல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் தடுக்கப்பட்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு துறைமுகமான அஷ்டோட்க்கு- Ashdod- பலவந்தமாக இழுத்து செல்லபட்டுள்ளது காஸா முற்றுகையை உடைத்து இந்த கப்பல் உள்நுழைய முயன்றது எனிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கடற்படையின் சுற்றிவளைப்பில் சிக்குண்டது தற்போது இதனுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக பட்டுள்ளது மலேசிய முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் தலைமையில் இயங்கும் Perdana Global Peace Organisation- என்ற அமைப்பு இந்த ஐரிஷ் கப்பலை ஏற்பாடு செய்திருந்தது இந்த கப்பல் இன்று காஸாவை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது விரிவாக பார்க்க.. Read the rest of this entry »
முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு உதவ மற்றும்மொரு கப்பல் புறப்பட்டுள்ளது
முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு மேலும் ஒரு கப்பல் நிவாரண உதவிகளை வழங்க புறப்பட்டுள்ளது மலேசிய நாட்டு உதவியுடன் தயாரான ஐரீஸ் நாட்டு கப்பல் காஸாவுக்கு புறப்பட்டுள்ளது இந்த கப்பலை பாதிக்க கூடிய எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என்று மலேசிய அரசு கூறியுள்ளது இந்த கப்பல் மருந்து பொருட்களை எடுத்து செல்கின்றது என்பது குறிபிடத்தக்கது இதில் 11மனித நேய செயல் பாட்டாளர்கள் உள்ளனர் இந்த கப்பல் றீஹல் கோரி -Rachel Corrie என்று பெயர் இடப்பட்டுள்ளது அன்று 23 வயது நிரம்பிய இந்த இளம் பெண் காஸா நப்லுஸ் பகுதியில் 2003 ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி இஸ்ரேல பயங்கரவாதத்தை சாத்வீக முறையில் தடுக்க முற்பட்டார் வீடுகளை உடைத்து கொண்டு முன்னேறி வந்த இராணுவ தாங்கி ஒன்றால் மிதித்து படுகொலை செய்யபட்டார் அந்த இளம் யுவதியின் நினைவாக கப்பலுக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த மனிதாபிமான உதவிக் கப்பலை Perdana Global Peace Organisation- என்ற மலேசியாவை தளமாக கொண்டு இயங்கும் அமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது இந்த அமைப்பின் தலைவராக மலேசிய முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் உள்ளார் இந்த கப்பல் நாளை காஸா வை அடையும் என்று எதிர்பார்க்கபடுகின்றது அதே வேளை ஐரீஸ் நாட்டு பிரதமர் கப்பலுக்கு வழிவிடுமாறு இஸ்ரேலை கேட்டுள்ளார் இந்த கப்பலையும் இஸ்ரேல இடைமறிக்கும் நேரடியாக முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸாவை உதவிகள் சென்றடைய அனுமதிக்காது என்று எதிபார்க்க படுகின்றது
இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதலை மகிழ்ச்சியாக கொண்டாடும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள்
இஸ்ரேலின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டு உணவு , குடிநீர் , மருத்துவ வசதிகள் , மின்சாரம் இன்றி வதைக்கப்பட்டுகொண்டிருக்கும் காஸா மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற கப்பல்களை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தாக்கி 20கும் அதிகமானவர்களை கொலைசெய்தும் 50 தொடக்கம் 60 வரையானவர்களை படுகாயப்படுத்தியுள்ளது ஏனையவர்களில் அதிகமானவர்களை சிறைவைதுள்ளது இந்த சம்பவங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியிரு பாளர்கள் தமது ஆக்கிரமிப்பு படை செய்த கொலை வெறியாட்டத்தை ஆதரித்து வீதியில் இறங்கி ஆரவாரம் செய்து கொண்டாடுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும் இந்த மகிழ்ச்சி ஆர்பாட்டம் இஸ்ரேலில் அமைந்துள்ள துருக்கி எம்பசிக்கு முன்னால் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்றுள்ளது وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلاَ النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ- அல்குர்ஆன் 2:120
பிந்திய செய்திகளின் படி குறைந்தது 9 பேர் கொல்லப்படும் 50 பேர் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்
ஆப்கான் , ஈராக் , பாகிஸ்தான் , தற்போது யமனிலும்

அமெரிக்க ஆக்கிரமிப்பு படையின் டோன்- Unmanned Drone விமானங்கள் மூலம் அத்துமீறி ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் , பாகிஸ்தானையும் தாக்கும் அமெரிக்க சட்டவிரோத உளவு விமான தாக்குதல்கள் தற்போது யமன் நாட்டையும் தனது கொடூர வேட்டை பற்களால் கொதற ஆரம்பித்துள்ளது எதுவும் அறியாத சிறுவர் சிறுமிகளை தனது பாசிச வேட்டை பற்களால் கொடூரமாக கொன்று இரத்தமும் சதையுமாக குவித்து வருகிறது இங்கு கொலை செய்யபடுபவர்கள் பெண்களும் , எதுவும் அறியாத குழந்தைகளும்தான் அதிகம் அமெரிக்க பாசிச நகரங்களில் ஒரு குழந்தை தவறி விழுந்து விட்டால் ஒப்பாரி வைக்கும் அமெரிக்க , ஐரோப்பிய மாஸ் மீடியாக்கள் இங்கு பிச்சு தூக்கி எறியப்பட்டு சதை வேராகவும் எலும்பு வேராகவும் குவிக்கப்படும் குழந்தைகளை அமெரிக்க பாசிச தேசத்தை நிலை நிறுத்த தேவையான உரமாக பார்கிறது . சில தினங்களுக்கு முன்னர் யமன் நாட்டின் மீது பரந்த அமெரிக்க உளவு விமானங்கள் பயங்கரவாதிகளை தாக்குகின்றோம் என்ற பெயரில் அப்பாவி பெண்களையும் எதுவும் அறியாத குழந்தைகளையும் படு கொலை செய்துள்ளது இந்த தாக்குதல்களில் 13 பெண்களும் 23 சிறுவர் சிறுமிகளும் கொல்லப்பட்டுள்ளனர் புஷ் அமெரிக்கநிர்வாகத்தில் இருந்த 8 வருடங்களில் டோன்- Unmanned Drone மூலம் 45 இராணுவ இலக்குகளை தாக்கியதாகவும் ஒபாமா நிர்வாகத்தில் ஒன்றரை வருடத்துக்கும் குறைவான காலங்களில் 82 இராணுவ இலக்குகளை தாக்கியதாகவும் அமெரிக்க தகவல்கள் கூறுகின்றது இது ஒபாமா யார் என்பதை காட்ட போதுமானது வீடியோ பார்க்க Video Read the rest of this entry »



