துருக்கி ஹமாஸுடன் பக்க துணையாக இருக்கும்: துருக்கி பிரதமர் தையிப் அர்பகான்
OurUmmah:இஸ்ரேல் துருக்கிய கப்பல் மாவி மர்மரா மீது மே மாதம் 2010 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தி 9 துருக்கிய மக்களை கொலை செய்தமைக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று துருக்கி பிரதமர் தையிப் அர்பகான் தெரிவித்துள்ளார் மாவி மர்மரா காப்பளை எங்களிடம் ஓப்படைத்த பின்னர் இஸ்ரேல் மன்னிப்பு கோர வேண்டும், நஷ்டஈடு வழங்கவேண்டும் மூன்றாவதாக காஸா மீதான முற்றுகையை நீக்கவேண்டும். காஸா ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை ‘நீ – இஸ்ரேல்- அனைத்து மக்களையும் சிறையில் வைக்க உனக்கு உரிமையில்லை-, இந்த -துருக்கியின் -நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எமது உறவு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாது என்று தெரிவித்துள்ளார்.
துருக்கிய பிரதமர் அர்பகான் கடும் தொனியில் இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சருக்கு எதிராக பேசினார் அவர் பேசும்போது லிபெர்மன்- Avigdor Lieberman- அனைத்து கேவலமான வேலைகளையும் செய்துள்ளார் என்றும் நேதன்யாஹு தலைமயிலான தற்போதைய இஸ்ரேல் அரசு துருக்கியுடன் மிக மோசமான உறவை கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் தனது வெளிநாட்டு அமைச்சரை பதவியில் இருந்து நீக்குமாறும் கூறியுள்ளார் கடந்த புதன்கிழமை- 12.01.2011 அல்ஜஸீரா- தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார் விரிவாக
துருக்கி பிரதமர் தையிப் அர்பகான் தனது நாடான துருக்கி ஹமாஸுக்கு பக்கதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளதுடன் ஹமாஸ் எதிர் போராட்ட அமைப்பை தேர்தலில் பங்குகொள்ளும் ஒரு அரசியல் கட்சி என்று அழைத்துள்ளார்
‘ஹமாஸ் சரியாக இருக்கும்போது நாம் அவர்களுக்கு பக்க துணையாக இருக்கின்றோம்’ ஏனென்றால் ஹமாஸ் இயக்கம் ஒரு எதிர் போராட்ட இயக்கமாகும் நான் ஹமாஸை ஒரு பயங்கரவாதியாக பார்க்கவில்லை- “We stand by Hamas when they are right, because the Hamas movement is a resistance movement. I do not see Hamas as ‘terrorist’. அவர்கள் நாட்டை பாதுகாக்கும் மக்கள் அது தேர்தலில் கலந்துகொண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஒரு அரசியல் அமைப்பு என்று தெரிவித்துள்ளார்.
துருக்கி பிரதமர் தையிப் அர்பகான் ஹமாஸை ஜனநாயகத்தின் எதிரிகள் என்று வர்ணித்து அந்த கட்சிக்கு அரசியல் சந்தர்பத்தை வழங்காதவர்களை கண்டித்தார் , அவர்கள் ஹாமாஸுகு எதிராக அனைத்து தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர் ஆனாலும் அவர்கள் எந்த வகையிலும் வெற்றிபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் அர்பகான் -பலஸ்தீன சமாதன தூதுவரான டோனி பிலேயர்- Tony Blair- சமாதான நடவடிக்கைகளில் ஹமாஸை உள்வாங்கவேண்டும் என்றும் ஹாமாஸ் உள்வாங்கப்படாத சமாதனை பேச்சு மேசை வெற்றிபெறாது என்றும் கூறியுள்ளார் தற்போது பத்தா மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டும் பலஸ்தீனில் முக்கிய அங்கங்கள் நீங்கள் ஒன்றை முக்கிய அங்கமாகவும் மற்றயதை முக்கிய அங்கமாக பார்க்காமலும் இருந்தால் பலஸ்தீனிய சமாதனம் நிகழாது என்றும் தெரிவித்துள்ளார்


