OurUmmah.org

One World One Ummah

Archive for January 2012

உஸாமாவை காட்டி கொடுத்தவர் மீது தேசதுரோக குற்றமும் அமெரிக்காவின் கவலையும்

leave a comment »

OurUmmah: அஷ்-ஷஹீத் உஸாமா பின்லாதின் இரகசிய இருப்பிடம் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கு தகவல் வழங்கியதற்காக பாகிஸ்தான் நிர்வாகம் கைது செய்துள்ள மருத்துவரான ஷகீல் அப்ரிடி கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகர் மீது அத்துமீறி நுழைந்த அமெரிக்க சிப்பாயிகள்  உஸாமா பின்லாதின் உட்பட நாள்வரை கொலைசெய்தனர். உஸாமாவின் இரகசிய இடம் தொடர்பான முக்கிய தகவலை அமெரிக்க CIA முகவராக செயல்பட்டு ஒரு குழுவை இயக்கி வந்த அப்ரிடி என்பவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் Read the rest of this entry »

Written by poralikall

January 28, 2012 at 10:22 pm

மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்: மீள்பதிவு

leave a comment »

அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம்
OurUmmah: பிரான்ஸில்  கிண்டல், நையாண்டி ஆகியவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் சஞ்சிகையான ‘ஷார்லி எப்தோ’ Charlie Hebdo என்ற பிரான்ஸ் மொழி பத்திரிகை மனிதர்களுக்கான இறுதித் தூதர் முஹமத் (ஸல்) அவர்களை மீண்டும் நையாண்டி செய்து தனது சஞ்சிகையின் முகப்பு பக்கதில் காட்டூன் மற்றும் செய்திகளை வெளியிட்டு வன்முறையை தூண்டியுள்ளது. இதனால் கோபம் கொண்ட இனம் தெரியாதவர்களினால் அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்டுள்ளது. விரிவாக…

Written by poralikall

January 28, 2012 at 9:02 pm

எகிப்தின் புதிய பாராளுமன்றம் பதவியேற்பு

leave a comment »

OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபை நேற்று பதவி ஏற்றுள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்றுள்ள எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான உத்தியோகபூர்வமாக  நேற்று பதவியேற்றுள்ளது. இது எகிப்திலும் ஏணைய நாடுகளிலும்  மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபை மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 498 உறுப்பினர்களையும் இராணுவ நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களையும் கொண்ட 508 மொத்த உறுப்பினர்களுடன் Video விரிவாக…

Written by poralikall

January 24, 2012 at 11:54 pm

எகிப்தின் பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி

with 3 comments

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று மிகப் பாரிய வெற்றி பெற்றுள்ளது. இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி 47 வீதமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 235 ஆசனங்களை கைப்பற்றி முதல் தரத்தில்  வெற்றி பெற்றுள்ளது. ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான அன் நூர் கட்சி  25 வீததிற்கு நெருக்கமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 125 ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

January 22, 2012 at 8:25 pm

இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா ?

leave a comment »

OurUmmah: ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்றதாக தெரிவித்து சில உயர் இராணுவ அதிகாரிகளை ஷேக் ஹஸீனா அரசு கைது செய்துள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் தீவிர சிந்தனையை கொண்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்துள்ளார். இதனை எதிர் தரப்பினர் ஆளும் தரப்பின் நாடகம் என்று தெரிவித்துள்ளனர் .

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு இராணுவப்புரட்சி முயற்சிக்கு பிறகு இராணுவத்திற்கும், ஷேக் ஹஸீனா அரசுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு தீவிரமடைந்துள்ளதை Read the rest of this entry »

Written by poralikall

January 20, 2012 at 8:20 pm

அடுத்து ஈரானை தாக்க அமெரிக்கா சந்தர்பம் தேடுகிறதா ?

leave a comment »

OurUmmah: “ஈராக் , ஆப்கானிஸ்தான் அடுத்து அமெரிக்கா கால் வைக்க தீர்மானித்துள்ள நாடு ஈரானாக இருக்கலாம்” என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தொடராக கருத்துரைத்து வருகின்றனர். இதேவேளை அமெரிக்கா ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க சட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமுதாயத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஈரான் அணு குண்டு தயாரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டது. ஈரானும் அணு ஆயுதம் தயாரிப்பதாக யுரேனியம் செரிவாக்களை தான் செய்வதாக தெரிவித்துள்ளது, அமெரிக்காவின் பொருளாதார தடையை தொடர்ந்து Read the rest of this entry »

Written by poralikall

January 15, 2012 at 8:53 pm

எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஹிஜாபுடன் தொலைகாட்சி நிகழ்சி நடத்த அனுமதி

leave a comment »

OurUmmah:  எகிப்து அரச தொலைகாட்சிகளில் பெண்கள் ஊடகவியலாளர்கள்  நிகழ்சிகளை நடத்தும்போது ஹிஜாப் அணிய பல ஆண்டுகளாக இருந்து வந்த தடைக்கு எதிராக எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்கள் ஹிஜாப்புடன் தொலைகாட்சிகளில் நிகழ்சிகளை நடத்த உரிமை பெற்றவர்கள் என்று  எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

எகிப்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தாலும் எந்த பெண்ணும் ஹிஜாபுடன் நிகழ்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது இதனால் பல பெண்கள் தமது வேலைகளை தூக்கி எறிந்துள்ளனர். Read the rest of this entry »

Written by poralikall

January 12, 2012 at 9:56 pm

ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை

leave a comment »

OurUmmah: ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணு விஞ்ஞானிகள் படுகொலை வரிசையில் மற்றுமொரு அணுத்துறை விஞ்ஞானி கார் குண்டின் மூலம் கொல்லப்பட்டுள்ளார். ஈரான் நதான்ஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள யுரேனிய செறிவாக்கல் மையத்தில் பணியாற்றிய அணு விஞ்ஞானி முஸ்தபா அஹ்மதி ரோஷன் இன்று படுகொலைச் செய்யப்பட்துள்ளார் இவரது கொலையின் பின்னணியில் மொசாத், இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

January 11, 2012 at 10:57 pm

எகிப்தில் மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி

leave a comment »

OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் இஹ்வானுல் முஸ்லிமீன் மற்றும் அன் நூர் கட்சி ஆகியன 62.2.வீதமான வாக்குகளை பெற்றுள்ளது என்று எகிப்தின்  தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது . இது தவிர மற்றுமொரு இஸ்லாமிய கட்சியான அல் வசத் என்ற கட்சி 2 வீதமான வாக்குகளை கைப்பற்றியுள்ளது.

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகளின் படி Read the rest of this entry »

Written by poralikall

January 8, 2012 at 9:00 pm

பிரதமர் அர்துகானின் அரசை கவிழ்க்க சதி செய்த துருக்கி முன்னாள் இராணுவ தளபதி கைது

leave a comment »

OurUmmah: துருக்கி முன்னாள் இராணுவ தளபதி இன்று வெள்ளிகிழமை கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான இஸ்லாமிய பின்னணியை கொண்ட அரசாங்கதை கவிழ்க்க பயங்கரவாத அமைப்பு ஒன்றை வழிநடத்தி வந்தார் என்ற குற்றசாட்டின் கீழ் ஜெனரல் இல்கர் பாஸ்புக் என்ற முன்னாள் இராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ள அதி உயர் இராணுவ அதிகாரியாக இவர் உள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

January 6, 2012 at 9:26 pm

எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான இறுதி சுற்று தேர்தல் நடைபெறுகிறது

leave a comment »

OurUmmah: எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் 498 ஆசனங்களுக்கான மூன்றாம் சுற்று தேர்தல்  நேற்று செவ்வாய் கிழமை ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு சுற்று தேர்தல்கள் முடிவுற்றுள்ளது. இடம்பெற்ற இரண்டு சுற்றுத் தேர்தல்களிலும் இஸ்லாமிய கட்சிகள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது. நீதிக்கும் சுதந்திரதிற்குமான கட்சி- கூட்டணியாக- 160 வரையான ஆசனங்களையும் அன் நூர் 83 வரையான ஆசனங்களையும் கைப்பற்றி உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது . Read the rest of this entry »

Written by poralikall

January 4, 2012 at 9:34 am

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவுக்கு துருக்கியிலும் அமோக வரவேற்பு

leave a comment »

OurUmmah: பலஸ்தீன காஸா பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா நேற்று துருக்கி சென்றுள்ளார் துருக்கி சென்றுள்ள அவருக்கு துருக்கி மக்கள் அமோக வரவேற்பு வழங்கியுள்ளனர் , துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் அவருக்கு விசேட வரவேற்பு வழங்கியுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையில் பல விடயங்கள் கலந்தாலோசிக்ப்பட்டுள்ளது. இதன்போது காஸாவுக்கான விசேட உதவி திட்டம் ஒன்றை துருக்கி பிரதமர் அறிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

January 2, 2012 at 10:51 pm

இஹ்வான்களின் மேரி கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

with 14 comments

OurUmmah: புத்தாண்டில் கிறிஸ்தவ மக்களை வாழ்த்துவதற்காக இஹ்வான் அமைப்பு பிரதித்தலைவர் டாக்டர் மெஹ்மூத் இஸ்ஸத் தலைமையில் உயர் மட்ட உறுபினர்களை கொண்ட குழுவை தேவாலயங்களுக்கு அனுப்புயுள்ளது. புத்தாண்டு தினத்தில் தேவாலயங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உயர் மட்ட குழுவினர் கிஸ்தவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேவேளை கடந்த கிரிஸ்மஸ் பண்டிகையின் போது இஹ்வான் FJP தேவாலயங்களுக்கு சென்று தமது மேரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .படங்கள் Read the rest of this entry »

Written by poralikall

January 1, 2012 at 8:56 pm

ஆப்கான் தாலிபான் அமெரிக்காவின் எதிரியல்ல: அமெரிக்கா

leave a comment »

OurUmmah: தலிபான் இயக்கத்துடன் பேசப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமெரிக்கா அரசாங்க அறிக்கை ஒன்று ஆப்கான் தாலிபான் இயக்கம் அமெரிக்காவின் எதிரியல்ல என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேச்சுக்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக தகவகள் தெரிவிக்கின்றது.

இதேவளை தாலிபான் அமைப்பு கட்டாரில் ஒரு அலுவலகத்தை திறப்பதற்கு தான் எதிர்ப்பை தெரிவிக்க மாட்டேன் என்று ஆப்கான் கர்சாய் தெரிவித்துள்ளார் , கட்டாரில் துறக்கப்படவுள்ள தாலிபான் அலுவலகம் பேச்சுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

Written by poralikall

January 1, 2012 at 8:00 pm

Posted in Uncategorized

Follow

Get every new post delivered to your Inbox.

Join 38 other followers