OurUmmah.org

One World One Ummah

அடுத்து ஈரானை தாக்க அமெரிக்கா சந்தர்பம் தேடுகிறதா ?

leave a comment »

OurUmmah: “ஈராக் , ஆப்கானிஸ்தான் அடுத்து அமெரிக்கா கால் வைக்க தீர்மானித்துள்ள நாடு ஈரானாக இருக்கலாம்” என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தொடராக கருத்துரைத்து வருகின்றனர். இதேவேளை அமெரிக்கா ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க சட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமுதாயத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஈரான் அணு குண்டு தயாரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டது. ஈரானும் அணு ஆயுதம் தயாரிப்பதாக யுரேனியம் செரிவாக்களை தான் செய்வதாக தெரிவித்துள்ளது, அமெரிக்காவின் பொருளாதார தடையை தொடர்ந்து அமெரிக்கக் கடற்படை ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சண்டித்தனம் காட்டக்கூடாது என்று ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் தன்னுடைய மிகப்பெரிய கடற்படைக் கப்பலைக் கடந்த வாரம் கொண்டுபோய் நிறுத்தியது. அமெரிக்காவும் ஹோர்முஸ் நீரிணையில் தனது இரண்டு பாரிய கடற்படைக் கப்பல்களை கொண்டு சென்றுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பென்டகன் வெளியிட்டுள்ள தகவலில் , “ஈரான் தனது கடற்படைப் படகுகள் மூலம் எங்களைச் சீண்டிப் பார்க்கிறது. இதே நிலைமை நீடித்தால் அதன் விளைவை ஈரான் அனுபவிக்க நேரும். ஹோர்முஸ் நீரிணையில் சென்ற அமெரிக்கப் போர்க்கப்பலான நியூ ஆர்லியான்ஸ் கப்பலுக்கு அருகில் 2 போர்ப்படகுகள் வந்தன. அதில் இருந்தவர்கள் ஏ.கே. 47 ரகத் துப்பாக்கியை வெளியில் தெரியும்படி வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் அந்தத் துப்பாக்கியையும் அமெரிக்கப் போர்க்கப்பலை நோக்கியே வைத்திருந்தார் என்றும்  ஈரான் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் அருகில் தன்னுடைய கடற்படைப் படகுகளை அதி வேகத்தில் இயக்கி, அச்சுறுத்துவதைப் போல நடந்துகொள்கிறது என்றும் ஈரான் அணு ஆயுதம் தயாரித்து அதைத் தனது நேச நாடுகளுக்குத் வழங்குகிறது ” என்று பாரிய குற்றச்சாட்டுகளை ஈரான் மீது சுமத்தியுள்ளது.

தற்போதைய இந்த நகர்வுகள் ஈரான் மீது அமெரிக்கா இராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தருணம் சந்தர்பத்தை தேடுகிறது இது பாரதூரமானதாக இருக்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Written by poralikall

January 15, 2012 at 8:53 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 34 other followers