உஸாமாவை காட்டி கொடுத்தவர் மீது தேசதுரோக குற்றமும் அமெரிக்காவின் கவலையும்
OurUmmah: அஷ்-ஷஹீத் உஸாமா பின்லாதின் இரகசிய இருப்பிடம் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கு தகவல் வழங்கியதற்காக பாகிஸ்தான் நிர்வாகம் கைது செய்துள்ள மருத்துவரான ஷகீல் அப்ரிடி கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகர் மீது அத்துமீறி நுழைந்த அமெரிக்க சிப்பாயிகள் உஸாமா பின்லாதின் உட்பட நாள்வரை கொலைசெய்தனர். உஸாமாவின் இரகசிய இடம் தொடர்பான முக்கிய தகவலை அமெரிக்க CIA முகவராக செயல்பட்டு ஒரு குழுவை இயக்கி வந்த அப்ரிடி என்பவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் அவர் தேசதுரோக குற்றச்சாட்டுகளுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த கைதை உண்மையில் தவறான விடயம் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா CBS தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதுடன் கைது தொடர்பாக கவலையும் பட்டுள்ளார் .
அதேவேளை Dr.ஆபியா 2003 மார்ச் மாதம் அவரின் மூன்று குழந்தைகளுடன் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்காவால் கடத்தப்பட்டு பல ஆண்டுகள் சித்திரவதையின் பின் அவர் கடத்தபட்ட விடையம் வெளிவரவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அவர்மீதான மீதான வழக்கின் தீர்ப்பு 23.9.2010- அன்று அறிவிக்கப்பட்டது. அவர் ஆப்கானிஸ்தான் சிறையில் அமெரிக்க உளவுத் துறை சிப்பாயை சுட முயன்றார் என்ற குற்றச் சாட்டப்பட்டு அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 86 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்பளித்தது. இந்த தீர்ப்பு முஸ்லிம் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது தீர்ப்புக்கு முன்னர் அவர் பல ஆண்டுகளாக இரகசிய இடங்களில் மிக கொடுமையான வதைகளை அனுபவித்தார் .
Dr.ஆபியாவை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன் மீது நடக்கு மாறு வதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார்.
அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் . இங்கு அமெரிக்க , பாகிஸ்தானிய ஏஜண்டுகளால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கு ஆளானார் தற்போது Dr.ஆபியா சித்தீக்கி சித்ரவதைகள் காரணமாக புற்று நோய்க்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது . பாகிஸ்தான் உட்பட உலகம் பூராவும் அவரை விடுவிக்க கோரி ஆர்பாட்டங்கள் இடம்பெற்றது . ஆனால் இவர் மீது எந்த கருணையும் காட்டாத அமெரிக்க பயங்கரவாதம் கடந்த வருடம் இரு பாகிஸ்தான் பிரஜைகளை சுட்டு கொன்ற அமெரிக்க CIA உளவாளி பாகிஸ்தான் விடுவிக்க வேண்டும் என கோரியது அதேபோன்று அமெரிக்க உளவாளி பாகிஸ்தான் அரசால் விடுதலை செய்யப்பட்டார்.
இரு பாகிஸ்தான் பிரஜைகளை சுட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க தூதரக உளவு அதிகாரி ரய்மொன்ட் டேவிஸ்- Raymond Davis- விடுதலை செய்யப்பட்டு விசேட அமெரிக்க இராணுவ விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் நோக்கி பறந்தார்.
ரய்மொன்ட் டேவிஸ்- இவர் தான் அமெரிக்காவின் புலனாய்வு வலையமைப்பை பாகிஸ்தானில் விரிவாக்கிவர் இந்த மனிதர்தான் அதிகமான குண்டு வெடிப்புகள் , உளவு விமான தாக்குதல்கள் ஆகிய வற்றில் சமந்தபட்டவர் இந்த மனிதர்தான் தனது உளவு கூட்டாளிகளுடன் இணைத்து மத்ரசாக்களிலும் பாடசாலைகளிலும், மஸ்ஜிதுக்களிலும் நகர் பகுதிகளிலும் குண்டுகளின் மூலம் பல்லாயிரம் முஸ்லிம்களை கொலை செய்தவர் என்று பாகிஸ்தான் மக்கள் குற்றம் சாட்டினர் பேரணிகள நடாத்தினர் ஆனால் அமெரிக்கா பாகிஸ்தான் அமெரிக்க சார்பு அரசின் மூலம் தான் நினைத்ததை சாதித்தது .
இப்போது தேசதுரோக குற்றசாட்டில் சிக்கியுள்ள அமெரிக்க முகவர் அப்ரிடி பற்றி கவலை கொண்டுள்ளது. Dr. ஆபியாவுக்கு ஒரு சட்டம் , தனது உளவாளிகளான அப்ரிடிக்கும் ரய்மொன்ட் டேவிஸுக்கும் ஒரு சட்டம் என்ற காட்டுமுராண்டி சட்டத்தைத்தான் மீண்டும் திணிக்க போகிறது அமெரிக்கா .
துரோகி அப்ரிடியும் நாளை அமெரிக்க நகரங்களில் சுதந்திரம் பெற்றவனாக நடமாடுவான் அமெரிக்கா தான் விரும்பியதை எமது தேசத்தில் சாதிக்கும் வரலாற்றதான் இன்றும் கொண்டுள்ளது என்று பாகிஸ்தான் மக்கள் தெரிவிக்கின்றனர்.




