Archive for February 2012
யெமனுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு அப்துல்லாஹ் ஸாலிஹிக்கு முடிவு
OurUmmah: நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. இடம்பெற்ற இத்தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளரான உப ஜனாதிபதி அப்துர் ரப் மன்ஸூர் ஹாதி மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்று உத்தியோகபூர்மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது . உத்தியோகபூர் முடிவு வெளியாக சில நாட்கள் ஆகும் என்று யெமன் செய்திகள் தெரிவித்துள்ளது. யெமன் முன்னால் சர்வாதிகாரி ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்காவின் வழிநடத்தலில் கண்டுகொண்ட உடன்பாட்டுக்கு அமைவாக நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. Read the rest of this entry »
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமில் அத்னானின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது
OurUmmah: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமில் -administrative detention-விசாரணை இல்லாமல் சிறையில் வதைக்கப்பட்டு வந்த பலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார் என்று பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றன.ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் Special Rapporteur on the situation of human rights in the Palestinian territories occupied since 1967. என்ற விசேட அறிக்கை Read the rest of this entry »
கிலாபத் அழிக்கப்பட்டு 88 ஆண்டுகள்
OurUmmah: துருக்கியில் பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி முஸ்லிம் உலகின் புதிய அரசியல் ஒழுங்கு ஒன்றின் முன்னோடியாக பார்க்கப்படுகின்றது. துனூசியாவிலும், எகிப்திலும் தேர்தல் மூலம் வெற்றிபெற்றுள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மற்றும் மொரோகோவிலும் , குவைத்திலும் , வெற்றி பெற்றுள்ள இஸ்லாமிய அரசியல் சக்திகளும் ,இன்னும் லிபியாவிலும் , யெமனிலும் வெற்றிநோக்கி நகரும் மக்களும் துருக்கியின் மாதிரி அரசியலை தமது முன்மாதிரி அரசியலாக கைகொள்ள விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர் . Read the rest of this entry »
எகிப்தில் மே மாதம் ஜனாதிபதித் தேர்தல்
OurUmmah: எகிப்து ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் பதிவு எதிர்வரும் மார்ச் 10ம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதை தொடர்ந்து அனைத்து உள்ளூராச்சி மன்றங்களுக்கான தேர்தல் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் இடைக்கால ஆளும் இராணுவ கவுன்சிலுடனான சந்திப்பைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் முஹமட் அத்தியா தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
ஷஹீத் ஹஸன்-அல்-பன்னாஹ் – மறக்கமுடியாத இஸ்லாமிய ஆளுமை
யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்
OurUmmah: நபி(ஸல்) கூறினார்கள்; “அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்” (அபூதாவூத்) – ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் இஸ்லாத்தை புனர்நிர்மாணிக்க ஒருவரை அனுப்பி வைக்கிறான் என்ற நபிமொழியின் அடிப்படையில், 20-வது நூற்றாண்டின் துவக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட முஸ்லிம்களை காப்பாற்றவும், Read the rest of this entry »
எகிப்து பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது அதான் கூறிய ஸலபி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
OurUmmah: எகிப்து பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதான் தொழுகைகான அழைப்பு விட்டுள்ளார் . கடந்த செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகை வேளையில் ஸலபி கட்சியான அந்நூர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மம்தூஹ் இஸ்மாயீல் எழுந்து அதான் கூற துவங்கினார். உடனே சபாநாயகர் ஸஅத் அல் கதாதனி பாராளுமன்றம் அதான் கூறும் இடமல்ல அதற்கு பாராளுமன்ற அவைக்கு அருகில் மஸ்ஜித் இருக்கிறது அமைதியாக அமருமாறு கூறியுள்ளார் . Read the rest of this entry »
மோடியின் குஜராத் வளர்ச்சிப் பாதையில்.. உண்மை என்ன ?
மு.குலாம் முஹம்மது
OurUmmah: “இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத்.” அதுவும் மோடியின் தலைமையில். மோடியை அப்படியே தூக்கி மன்மோகன் சிங் இருக்கும் ஆசனத்தில் வைத்துவிட்டால் (பிரதமர் பதவியில்) இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் குஜராத்தில் நடக்கும் யதார்த்தங்கள் வேறு விதமாக இருக்கின்றன. இதனை அறிந்த ஆய்வாளர்கள் Read the rest of this entry »
ஹமாஸ் வேண்டுமா இஸ்ரேல் வேண்டுமா அப்பாஸ் தீர்மானிக்க வேண்டும்
OurUmmah: பலஸ்தீனில் ஹமாஸும், பதாஹும் இணைந்து ஐக்கிய அரசை உருவாக்கியதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸுடன் சேர்ந்து ஐக்கிய அரசை உருவாக்குவதா இஸ்ரேலுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதா? என்பதை பலஸ்தீன் அரசு தீர்மானிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குமுறியுள்ளார். ஹமாஸுடன் ஐக்கியமும், இஸ்ரேலுடன் சமாதான பேச்சுவார்த்தையும் இணைந்து செல்ல முடியாது என நெதன்யாகு கொக்கரிக்கிறார். Read the rest of this entry »
குவைத் பாராளுமன்றத்தை இஸ்லாமிய அரசியல் கட்சி கைப்பற்றியுள்ளது
OurUmmah: குவைத்தில் நேற்று இடம்பற்ற பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது , கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தை தொடர்ந்து அதன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற்றது . இதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது மொத்தமாக 50 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 34 ஆசனங்களை இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது Read the rest of this entry »
ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூனின் துரோகம்
OurUmmah: அமெரிக்காவின் கைப்பாவை என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன், காஸா பகுதிக்கு சென்றபோதும் அங்கு இஸ்ரேலிய வதை முகாம்களில் வைக்கபட்டுள்ள கைதிகளின் உறவினர்களையும் ,இஸ்ரேலிய சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களையும் சந்திக்க மறுத்துள்ளதுடன் அந்த வதையுறும் மக்களின் எந்த பிரதிநிதியையும் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதியையும் மறுத்துள்ளார். Read the rest of this entry »
எகி்ப்து மக்கள் எழுச்சி ஏற்படுத்தாத இழப்பை விளையாட்டு ஏற்படுத்தியுள்ளது
OurUmmah: எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்க தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் காரணமாக 74 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எகிப்துப்த்தின் உள்ள போர்ட் நகரில் உதைபந்தாட்ட அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய அணிகள் மோதும் போட்டிக்கு ஏற்பாடாகியது அதன் ரசிகர்கள் மத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு மோதல் பெருந்திரளான மக்கள் மத்தில் பாரிய மக்கள் நெருசலை Read the rest of this entry »


