இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமில் அத்னானின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது
OurUmmah: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமில் -administrative detention-விசாரணை இல்லாமல் சிறையில் வதைக்கப்பட்டு வந்த பலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார் என்று பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றன.ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் Special Rapporteur on the situation of human rights in the Palestinian territories occupied since 1967. என்ற விசேட அறிக்கை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன் பிராந்தியத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சமர்பிக்கப்பட்டு விவாதம் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதனை கருத்தில்கொண்டுள்ள இஸ்ரேல் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். அத்னான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17-ஆம் திகதி அவரை விடுதலைச் செய்வதாக இஸ்ரேலிய நீதி அமைச்சு உடன்பட்டதை தொடந்து அத்னானின் வழக்கறிஞர் மூலம் அத்னானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் .
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டாலும் அத்னானின் உயிரை காப்பாற்ற முடியாது என்று சிறையில் அவரை பரிசோதித்த தன்னாரவ தொண்டு நிறுவனம் ஒன்று முன்னர் தெரிவித்திருந்தமை குறிபிடதக்கது. பலஸ்தீன் எதிர் போராட்ட இயக்கமான இஸ்லாமிக் ஜிஹாதின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பலஸ்தீன் மனித உரிமை ஆர்வலருமான 33 வயதான காதர் அத்னான். கடந்த டிசம்பர் 17ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை கைது செய்தது.
கடந்த மாதம் 10ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ நீதிமன்றம் அத்னானை 4 மாதம் காவலில் வைக்க உத்தரவிட்டது. மே 8ஆம் திகதி வரை இக்காவல் நீடிக்கும். ஆனால், இஸ்ரேல் அத்னானின் காவலை காலவரையற்று நீட்டிக்கொண்டே செல்ல வாய்ப்புள்ளது என ஆம்னஸ்டி தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


