Archive for the ‘பொதுவானவை’ Category
யெமனுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு அப்துல்லாஹ் ஸாலிஹிக்கு முடிவு
OurUmmah: நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. இடம்பெற்ற இத்தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளரான உப ஜனாதிபதி அப்துர் ரப் மன்ஸூர் ஹாதி மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்று உத்தியோகபூர்மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது . உத்தியோகபூர் முடிவு வெளியாக சில நாட்கள் ஆகும் என்று யெமன் செய்திகள் தெரிவித்துள்ளது. யெமன் முன்னால் சர்வாதிகாரி ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்காவின் வழிநடத்தலில் கண்டுகொண்ட உடன்பாட்டுக்கு அமைவாக நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. Read the rest of this entry »
எகிப்தில் மே மாதம் ஜனாதிபதித் தேர்தல்
OurUmmah: எகிப்து ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் பதிவு எதிர்வரும் மார்ச் 10ம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதை தொடர்ந்து அனைத்து உள்ளூராச்சி மன்றங்களுக்கான தேர்தல் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் இடைக்கால ஆளும் இராணுவ கவுன்சிலுடனான சந்திப்பைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் முஹமட் அத்தியா தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
எகிப்து பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது அதான் கூறிய ஸலபி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
OurUmmah: எகிப்து பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதான் தொழுகைகான அழைப்பு விட்டுள்ளார் . கடந்த செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகை வேளையில் ஸலபி கட்சியான அந்நூர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மம்தூஹ் இஸ்மாயீல் எழுந்து அதான் கூற துவங்கினார். உடனே சபாநாயகர் ஸஅத் அல் கதாதனி பாராளுமன்றம் அதான் கூறும் இடமல்ல அதற்கு பாராளுமன்ற அவைக்கு அருகில் மஸ்ஜித் இருக்கிறது அமைதியாக அமருமாறு கூறியுள்ளார் . Read the rest of this entry »
எகி்ப்து மக்கள் எழுச்சி ஏற்படுத்தாத இழப்பை விளையாட்டு ஏற்படுத்தியுள்ளது
OurUmmah: எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்க தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் காரணமாக 74 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எகிப்துப்த்தின் உள்ள போர்ட் நகரில் உதைபந்தாட்ட அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய அணிகள் மோதும் போட்டிக்கு ஏற்பாடாகியது அதன் ரசிகர்கள் மத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு மோதல் பெருந்திரளான மக்கள் மத்தில் பாரிய மக்கள் நெருசலை Read the rest of this entry »
மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்: மீள்பதிவு
அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம்
OurUmmah: பிரான்ஸில் கிண்டல், நையாண்டி ஆகியவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் சஞ்சிகையான ‘ஷார்லி எப்தோ’ Charlie Hebdo என்ற பிரான்ஸ் மொழி பத்திரிகை மனிதர்களுக்கான இறுதித் தூதர் முஹமத் (ஸல்) அவர்களை மீண்டும் நையாண்டி செய்து தனது சஞ்சிகையின் முகப்பு பக்கதில் காட்டூன் மற்றும் செய்திகளை வெளியிட்டு வன்முறையை தூண்டியுள்ளது. இதனால் கோபம் கொண்ட இனம் தெரியாதவர்களினால் அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்டுள்ளது. விரிவாக…
எகிப்தின் புதிய பாராளுமன்றம் பதவியேற்பு
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபை நேற்று பதவி ஏற்றுள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்றுள்ள எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான உத்தியோகபூர்வமாக நேற்று பதவியேற்றுள்ளது. இது எகிப்திலும் ஏணைய நாடுகளிலும் மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபை மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 498 உறுப்பினர்களையும் இராணுவ நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களையும் கொண்ட 508 மொத்த உறுப்பினர்களுடன் Video விரிவாக…
எகிப்தின் பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று மிகப் பாரிய வெற்றி பெற்றுள்ளது. இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி 47 வீதமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 235 ஆசனங்களை கைப்பற்றி முதல் தரத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான அன் நூர் கட்சி 25 வீததிற்கு நெருக்கமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 125 ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. Read the rest of this entry »
எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஹிஜாபுடன் தொலைகாட்சி நிகழ்சி நடத்த அனுமதி
OurUmmah: எகிப்து அரச தொலைகாட்சிகளில் பெண்கள் ஊடகவியலாளர்கள் நிகழ்சிகளை நடத்தும்போது ஹிஜாப் அணிய பல ஆண்டுகளாக இருந்து வந்த தடைக்கு எதிராக எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்கள் ஹிஜாப்புடன் தொலைகாட்சிகளில் நிகழ்சிகளை நடத்த உரிமை பெற்றவர்கள் என்று எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.
எகிப்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தாலும் எந்த பெண்ணும் ஹிஜாபுடன் நிகழ்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது இதனால் பல பெண்கள் தமது வேலைகளை தூக்கி எறிந்துள்ளனர். Read the rest of this entry »
பிரதமர் அர்துகானின் அரசை கவிழ்க்க சதி செய்த துருக்கி முன்னாள் இராணுவ தளபதி கைது
OurUmmah: துருக்கி முன்னாள் இராணுவ தளபதி இன்று வெள்ளிகிழமை கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான இஸ்லாமிய பின்னணியை கொண்ட அரசாங்கதை கவிழ்க்க பயங்கரவாத அமைப்பு ஒன்றை வழிநடத்தி வந்தார் என்ற குற்றசாட்டின் கீழ் ஜெனரல் இல்கர் பாஸ்புக் என்ற முன்னாள் இராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ள அதி உயர் இராணுவ அதிகாரியாக இவர் உள்ளார். Read the rest of this entry »
எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான இறுதி சுற்று தேர்தல் நடைபெறுகிறது
OurUmmah: எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் 498 ஆசனங்களுக்கான மூன்றாம் சுற்று தேர்தல் நேற்று செவ்வாய் கிழமை ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு சுற்று தேர்தல்கள் முடிவுற்றுள்ளது. இடம்பெற்ற இரண்டு சுற்றுத் தேர்தல்களிலும் இஸ்லாமிய கட்சிகள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது. நீதிக்கும் சுதந்திரதிற்குமான கட்சி- கூட்டணியாக- 160 வரையான ஆசனங்களையும் அன் நூர் 83 வரையான ஆசனங்களையும் கைப்பற்றி உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது . Read the rest of this entry »
இஹ்வான்களின் மேரி கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
OurUmmah: புத்தாண்டில் கிறிஸ்தவ மக்களை வாழ்த்துவதற்காக இஹ்வான் அமைப்பு பிரதித்தலைவர் டாக்டர் மெஹ்மூத் இஸ்ஸத் தலைமையில் உயர் மட்ட உறுபினர்களை கொண்ட குழுவை தேவாலயங்களுக்கு அனுப்புயுள்ளது. புத்தாண்டு தினத்தில் தேவாலயங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உயர் மட்ட குழுவினர் கிஸ்தவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேவேளை கடந்த கிரிஸ்மஸ் பண்டிகையின் போது இஹ்வான் FJP தேவாலயங்களுக்கு சென்று தமது மேரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .படங்கள் Read the rest of this entry »
எகிப்தை ஆளத் தயாராகும் இஸ்லாமிய கட்சிகள்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி அரசியல் யாப்பை வரைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்ற சில ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. யாப்பை வரைய முன்னர் இராணுவ நிர்வாகம் தனது அதிகாரத்தை துறந்து அதனை பொது மக்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் அவர் இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபடும் சிறிய அமைப்புக்கள் கூறிவருகின்றது. இதற்கு பதில்வழங்கியுள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு யாப்பை வரைய முன்னர் ஒருவரை ஜனாதிபதியாக நியமித்தால் அவர் ஹுஸ்னி முபாரக்கை விடவும் சர்வாதிகாரதன்மையுடன் செயல்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
கடும்போக்காளர் பூட்டினுக்கு எதிரான மீண்டும் ஆர்பாட்டம்
OurUmmah: ரஷ்யாவில் மீண்டும் ஆர்பாட்டம் வெடித்துள்ளது அந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிர கணக்கானவர்கள் கலந்து கொண்துள்ளனர். அதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பூடின் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மிஹாலி கோபர்சேவ் தெரிவித்துள்ளார். தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல்களைக் கண்டித்து ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில், நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
எகிப்தின் இரண்டாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளை கைப்பற்றியுள்ளது
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது என்று உத்தியோக பூர்வமற்ற எகிப்தின் தேசிய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றது .முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மூன்றில் இரண்டு வாக்குகளுக்கும் அதிகமான 61 வீதமான வாக்குகளை பெற லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் சுற்று தேர்தலுக்கான வாக்கெடுப்பு கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி முடிவுற்றது அதில் இரண்டு பிரதான இஸ்லாமிய அரசியல் கட்சிகளான இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சிக்கும் ஸலபிகள் அமைப்பின் Read the rest of this entry »
எகிப்தில் இரண்டாம் சுற்று தேர்தல் ஆரம்பம்
OurUmmah: எகிப்தில் புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான இரண்டாம் சுற்று தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளது.அத்தேர்தலில் மற்றும் நீதிக்கும் விடுதலைக்குமான கட்சி 36.6 சதவீத வாக்குகளையும் அன் நூர் 24.6 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. Read the rest of this entry »
அமெரிக்க உளவு விமானம் தவறி விழ வில்லை தரை இறக்கினோம் :Video
OurUmmah: அமெரிக்க உளவு விமானம் ஈரானிய வான் பரப்பில் பறந்த போது விமானத்திற்கும் அமெரிக்க தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான நுண்அலை இயக்க தொடர்பை துண்டித்ததோடு அல்லாமல் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை தம் வசப்படுத்தி தாம் நினைத்த இடத்தில் சிறப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வு அமெரிக்காவை மறைமுகமாக அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. தரையிறக்கும் கட்சிகளை ஈரான் வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி இப்படி கூறுகிறார் எமது US RQ-170 உளவு விமானம், ஈரானில் விழுந்து விட்டது. அதை, ஈரானியர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த விமானத்தை எம்மிடம் திருப்பித் தரவேண்டும் என்று தெரிவிக்கிறார். Read the rest of this entry »
உளவு விமானத்தை திருப்பித் தரமுடியாது:ஈரான்
OurUmmah: நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது’ என, ஈரானின் புரட்சிப் படை உறுதியாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி.மீ., தொலைவில் ஈரானுக்குள், அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததாகவும் அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது. அது தொடர்பான வீடியோ வையும் ஈரான் வெளியிட்டது Read the rest of this entry »
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலதிற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மாநாடு
OurUmmah: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித ஜெருசலதிற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. அரபு லீக் அனுசரனையுடன் கட்டார் தலைநகர் டோஹாவில் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலதிற்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் மஸ்ஜிதுல் குதுஸ், மீதான அத்துமீறல்கள், மற்றும் இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளால் புனித ஜெருசலம் நகரில் சுகாதார, கல்வி துறைகளில் ஏற்பட்டு வரும் தாக்கம் தொடர்பிலும் ஏனைய அத்துமீறல்கள் தொடர்பிலும் அங்கு ஆராயப்படவுள்ளது என்று ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிக்கின்றது.
தொடரும் கடும்போக்காளர் பூட்டினுக்கு எதிரான ஆர்பாட்டங்கள்
OurUmmah: கடந்த 20 ஆண்டுகளில், ரஷ்யா வரலாறு காணாத அளவிற்கு, தேர்தல் முறைகேடுகளை கண்டித்து, நேற்று சனிக்கிழமை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பல்லாயிர கணக்கான மக்கள கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றுள்ளது. ரஷ்யாவில் கடந்த 4ம் தேதி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள், மோசடிகள் நிகழ்ந்துள்ளது இது நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் இல்லை. இந்த தேர்தல் முழுமையாக பிரதமர் விளாடிமிர் பூட்னின் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு ஆதரவாக நடத்தப்பட்டது என்று பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்தவன்னமுள்ளது. Read the rest of this entry »
எதிர்பார்க்கப்பட்ட எகிப்திய ஜனநாயக சக்திகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான முறுகல்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் ஜனநாயக சக்திகளுக்கும் இராணுவ நிர்வாகத்திற்கும் இடையில் முறுகல் நிலை மேலும் அதிகரித்து வருகின்றது. தற்போது இராணுவ நிர்வாகம் வெளிப்படுத்தி வரும் கருத்துக்கள் இராணுவ நிர்வாகத்தின் எதார்த்தத்தை காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை எகிப்தின் இடைக்கால இராணு நிர்வாக உறுப்பினர் மேஜர் ஜெனரல் முக்தார் அல் முல்லா வெளியிட்ட கருத்துக்கள் மேலுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ”புதிதாக அமையப்போகும் எகிப்தின் பாராளுமன்றம் பறந்த அளவில் எகிப்தியர்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப் படுத்தபோவதில்லை” என்று தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
ரஷ்யாவில் பூடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
OurUmmah: ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக, ஐரோப்பிய கண்காணிப்பு அமைப்பு கூறியதையடுத்து, நேற்று, தலைநகர் மாஸ்கோவில், ஆயிரக்கணக்கானோர் பிரதமர் விளாடிமிர் பூடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் . ஐரோப்பிய அமைப்பைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும், ரஷ்ய தேர்தலைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.ரஷ்யாவில், கடந்த 4ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. Read the rest of this entry »
எகிப்தில் இஸ்லாமிய கூட்டமைப்புகள் பெற்ற இஸ்லாமிய வாக்குகள் எத்தனை வீதம் ?
அஹ்மத்ஷா அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளது அந்த முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அதி கூடிய வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றது .எகிப்து தேர்தல் சம்மந்தமாக சரியான புரிதலுக்கு செல்வதற்கு முன்னர் சுருக்கமாக எகிப்து தேர்தல் களத்தில் உள்ள சில கட்சிகளை பற்றிய அறிமுகத்தை தந்து அதன் பின் தேர்தல் முடிவுகள் பற்றி பார்க்கலாம். Read the rest of this entry »
எகிப்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்: இஸ்லாமிய கட்சிகள் அதிகூடிய செல்வாக்குடன்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளது அந்த முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் 61 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றது .
பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்று சுற்றுகளில் முதல் சுற்றின் முடிவுகளின் படி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி 36.6 வீத வாக்குகளையும் , ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான அன் நூர் 24.4 வீத வாக்குகளையும் விபரல்வாத அரசியல் கட்சி மூன்றாவது இடத்தில் 13.4 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் Read the rest of this entry »
எகிப்து பாராளுமன்ற தேர்தல் முறை ஒரு சிறு பார்வை
அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம் (இஸ்லாஹி)
OurUmmah: எகிப்தில் பாராளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது வெற்றி யாருக்கு ? எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் சர்வாதிகார ஆட்சி மக்கள் எழுச்சி மூலம் அகற்றப்பட்டது. தற்போது இராணுவ அதிகாரத்தின் கீழ் இடைக்கால நிர்வாகம் நிர்வாகத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் 50 க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் ஆயிரத்துக்கும் அதிகமான தமது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளனர்.
அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சிக்கு பின்னர் பிராந்தியம் காணும் மூன்றாவது தேர்தல் இதுவாகும். துனூசியாவிலும் , மொரோகோவிலும் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »
யெமனில் இடைக்கால நிர்வாகத்தின் பிரதமர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது
OurUmmah: யெமனில் இடைக்கால நிர்வாகத்தின் பிரதமராக முஹம்மத் பசிண்ட்வா என்ற முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி உறுப்பினருமான ஒருவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை 33 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி புரிந்த வந்த இவர் . துனிசியா, எகிப்து, லிபியா சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட அழிவுகளை தொடர்ந்து கடந்த புதன் கிழமை பதவி விலகக் தீர்மானித்தார்.
கடந்த பத்து மாதங்களாக யெமனிலும் அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சிப்போராட்டம் நடந்து வருகின்றது . அல்-கைதா போராளிகள் அதிகமாக யெமனில் இருப்பதாக கூறும் அமெரிக்கா வழமை போன்று இந்த சர்வாதிகரிக்கும் தனது பூரண ஆதரவை வழகிவருகின்றது ஆனால் துனிசியா, எகிப்து, லிபியா நாடுகள் போன்று தொடரான மக்கள் எழுச்சிக்கு முன்னால் யாருடைய ஆதரவு இருந்தாலும் பயனற்று போயுள்ளது. Read the rest of this entry »
மொரோகோவிலும் இஸ்லாமிய அரசியல் கட்சி வெற்றி
இணைப்பு-3: OurUmmah: மொரோகோவில் நேற்று பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. இந்த தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி The Justice and Development Party -PJD- என்ற இஸ்லாமிய கட்சி கூடிய ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. என்றாலும் முறிவுகள் உத்தியோக பூர்வமாக வெளியாகவில்லை. இந்த தேர்தலில் 45 வீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 37 வீதமான வாக்காளர்கள் மேட்டுமே தமது வாக்குகளை பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .
எதிர்பார்க்கப் பட்டதைப் போன்று கடந்த 2007ஆம் ஆண்டு தேர்தலைவிடவும் கூறிய மக்கள் வாக்களித்த தேர்தலாக இது பார்க்கப்படுகின்றது. Read the rest of this entry »
எகிப்தில் மீண்டும் ‘ மில்லியன் பேர் ஆர்ப்பாட்டம்’
OurUmmah: எகிப்தில் எதிர் வரும் 28 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , எகிப்தின் இராணுவம் கட்டுப்பாட்டிலான இடைக்கால நிர்வாகத்தையும் இராணுவ நிர்வாகத்தையும் எதிரித்து மக்கள ஆர்ப்பாட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது, படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதன்போது குறைந்தது 33 பேர் உயிரிழந்ததுடன் 1500பேர் காயம் அடைந்துள்ளனர். மக்கள் ஆர்ப்பாட்டம் தொடராக இடம்பெற்று வருகின்றது. இன்று ‘ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டம்’ ஒன்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எகிப்து செய்திகள தெரிவிக்கின்றது. Read the rest of this entry »
நிர்வாணப்படம் வெளியிட்ட ஆலியா
OurUmmah: எகிப்தில் ஆலியா எல்மெஹ்தி எனும் 20 வயது பெண்ணொருவர் தனது வலைப்பக்கத்தில் நிர்வாணப்படம் வெளியிட்டதை தொடர்ந்து ஹுஸ்னி முபாரக் அரசை வீழ்த்திய ஏப்ரல் 6 இயக்கத்தைச் சேர்ந்தவள் தான் இந்த பெண் அவளின் சுத்திர முழக்கம்தான் இது என சில ஊடங்கள் செய்தி வெளியிட்டதனை ஏப்ரல் 6 இயக்கம் கடுமையாக மறுத்துள்ளது.
அந்த இயக்கம் வெளியிட்ட செய்தியில் நாங்கள் பண்பாட்டை மதிப்பவர்கள். அப்படி இருக்கையில் இப்படி நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ள பெண் எப்படி எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியும் என்று அது கேள்வி எழுப்பியுள்ளதுடன். அது தொடர்பான வெளியான செய்திகள் போலியானவை என்று தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
டியுனீஸிய புதிய அரசாங்கம் ஒரு விமர்சனப் பார்வை
அபூ அய்யூப் முஹம்மது
OurUmmah: டியுனீஸிய அரசாங்கம் மதுபானத்தையோ, நாஸ்த்திகத்தையோ, ஓரினச் சேர்க்கையையோ தடை செய்யாது. இவற்றில் ஈடுபடுபவருக்கு தண்டனையும் வழங்காது: முஸலிம்களாகிய நாம் மார்க்கத்தை அலட்டிக் கொள்ளாத வர்களிடம் எதிர் பார்ப்பதை விட இஸ்லாமிய இயக்கம், இஸ்லாமியக் கட்சி, இஸ்லாமிய அரசாங்கம் என்ற பெயரோடு வருபவர்களிடம் பலவற்றை எதிர் பார்த்திருப்பது பழகிப் போன விடயம்.
அந்த வரிசையில் அன்மையில் ‘டியுனீஸியா’வில் ‘அன்னஹ்தா’ மறுமலர்ச்சி கட்சி அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து ‘இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக பல விடயங்கள் நடக்கப் போகிறன’ Read the rest of this entry »
மொரோகோவிழும் இஸ்லாமிய அரசியல் கட்சி வெற்றிபெரும் சாத்தியம்
OurUmmah: மொரோகோவில் அரசியல் கட்சிகளுக்கும் ஆளும் மன்னர் தரப்புக்கும் இடையிலான உடன்பாட்டை அடுத்து ஏற்பட்ட முடிவுகளின் படி நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அதிகாரபூர்வமாக கடந்த 12 ஆம் திகதி ஆரம்பித்துள்ளன. இந்த தேர்தலில் The Justice and Development Party -PJD- நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி என்ற இஸ்லாமிய கட்சி போட்டியிடுகின்றது. இந்த கட்சி நடைபெறப்போகும் தேர்தலில் கூடிய ஆசனங்களைப் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்சி கடந்த 2007 ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அது போட்டியிட அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று. மொரோகோ பாராளுமன்ற 325 ஆசனங்களில் 46 ஆசனங்களை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தகக்து. Read the rest of this entry »


