எகிப்தின் இரண்டாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளை கைப்பற்றியுள்ளது
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது என்று உத்தியோக பூர்வமற்ற எகிப்தின் தேசிய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றது .முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மூன்றில் இரண்டு வாக்குகளுக்கும் அதிகமான 61 வீதமான வாக்குகளை பெற லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் சுற்று தேர்தலுக்கான வாக்கெடுப்பு கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி முடிவுற்றது அதில் இரண்டு பிரதான இஸ்லாமிய அரசியல் கட்சிகளான இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சிக்கும் ஸலபிகள் அமைப்பின் Read the rest of this entry »
இன்று ஈராக்கில் இருந்து வெளியேறுவது அமெரிக்காவின் கடைசி பேய்யா ?
OurUmmah: ஈராக்கை ஆக்கிரமித்து அங்கு அழிவு நாசவேளை செய்துகொண்டிருந்த அமெரிக்க தாக்குதல் பேய்களின் கடைசி அணி இன்று ஈராக்கில் இருந்து வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றுள்ளது. ஆனால் ஈராக்கில் இன்னும் பல ஆயிரம் இராணுவ பிசாசுகள் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது அந்த பேய்கள் இரண்டு முகாம்களில் சுமார் 4000 பேய்கள் உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஏகாதிபத்திய அமெரிக்கா கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது ஆக்கிரமிப்பு படையெடுத்து , ஈராக்கை அழித்து நாசம் செய்து சர்வாதிகாரி சதாம் ஹுசைன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய பொம்மை அரசு ஒன்றை அமைப்பதில் வெற்றி பெற்றது. Read the rest of this entry »
எகிப்தில் இரண்டாம் சுற்று தேர்தல் ஆரம்பம்
OurUmmah: எகிப்தில் புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான இரண்டாம் சுற்று தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளது.அத்தேர்தலில் மற்றும் நீதிக்கும் விடுதலைக்குமான கட்சி 36.6 சதவீத வாக்குகளையும் அன் நூர் 24.6 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. Read the rest of this entry »
அமெரிக்க உளவு விமானம் தவறி விழ வில்லை தரை இறக்கினோம் :Video
OurUmmah: அமெரிக்க உளவு விமானம் ஈரானிய வான் பரப்பில் பறந்த போது விமானத்திற்கும் அமெரிக்க தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான நுண்அலை இயக்க தொடர்பை துண்டித்ததோடு அல்லாமல் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை தம் வசப்படுத்தி தாம் நினைத்த இடத்தில் சிறப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வு அமெரிக்காவை மறைமுகமாக அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. தரையிறக்கும் கட்சிகளை ஈரான் வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி இப்படி கூறுகிறார் எமது US RQ-170 உளவு விமானம், ஈரானில் விழுந்து விட்டது. அதை, ஈரானியர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த விமானத்தை எம்மிடம் திருப்பித் தரவேண்டும் என்று தெரிவிக்கிறார். Read the rest of this entry »
உளவு விமானத்தை திருப்பித் தரமுடியாது:ஈரான்
OurUmmah: நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது’ என, ஈரானின் புரட்சிப் படை உறுதியாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி.மீ., தொலைவில் ஈரானுக்குள், அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததாகவும் அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது. அது தொடர்பான வீடியோ வையும் ஈரான் வெளியிட்டது Read the rest of this entry »
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலதிற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மாநாடு
OurUmmah: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித ஜெருசலதிற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. அரபு லீக் அனுசரனையுடன் கட்டார் தலைநகர் டோஹாவில் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலதிற்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் மஸ்ஜிதுல் குதுஸ், மீதான அத்துமீறல்கள், மற்றும் இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளால் புனித ஜெருசலம் நகரில் சுகாதார, கல்வி துறைகளில் ஏற்பட்டு வரும் தாக்கம் தொடர்பிலும் ஏனைய அத்துமீறல்கள் தொடர்பிலும் அங்கு ஆராயப்படவுள்ளது என்று ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிக்கின்றது.
தொடரும் கடும்போக்காளர் பூட்டினுக்கு எதிரான ஆர்பாட்டங்கள்
OurUmmah: கடந்த 20 ஆண்டுகளில், ரஷ்யா வரலாறு காணாத அளவிற்கு, தேர்தல் முறைகேடுகளை கண்டித்து, நேற்று சனிக்கிழமை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பல்லாயிர கணக்கான மக்கள கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றுள்ளது. ரஷ்யாவில் கடந்த 4ம் தேதி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள், மோசடிகள் நிகழ்ந்துள்ளது இது நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் இல்லை. இந்த தேர்தல் முழுமையாக பிரதமர் விளாடிமிர் பூட்னின் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு ஆதரவாக நடத்தப்பட்டது என்று பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்தவன்னமுள்ளது. Read the rest of this entry »
எதிர்பார்க்கப்பட்ட எகிப்திய ஜனநாயக சக்திகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான முறுகல்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் ஜனநாயக சக்திகளுக்கும் இராணுவ நிர்வாகத்திற்கும் இடையில் முறுகல் நிலை மேலும் அதிகரித்து வருகின்றது. தற்போது இராணுவ நிர்வாகம் வெளிப்படுத்தி வரும் கருத்துக்கள் இராணுவ நிர்வாகத்தின் எதார்த்தத்தை காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை எகிப்தின் இடைக்கால இராணு நிர்வாக உறுப்பினர் மேஜர் ஜெனரல் முக்தார் அல் முல்லா வெளியிட்ட கருத்துக்கள் மேலுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ”புதிதாக அமையப்போகும் எகிப்தின் பாராளுமன்றம் பறந்த அளவில் எகிப்தியர்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப் படுத்தபோவதில்லை” என்று தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
ரஷ்யாவில் பூடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
OurUmmah: ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக, ஐரோப்பிய கண்காணிப்பு அமைப்பு கூறியதையடுத்து, நேற்று, தலைநகர் மாஸ்கோவில், ஆயிரக்கணக்கானோர் பிரதமர் விளாடிமிர் பூடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் . ஐரோப்பிய அமைப்பைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும், ரஷ்ய தேர்தலைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.ரஷ்யாவில், கடந்த 4ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. Read the rest of this entry »
எகிப்தில் இஸ்லாமிய கூட்டமைப்புகள் பெற்ற இஸ்லாமிய வாக்குகள் எத்தனை வீதம் ?
அஹ்மத்ஷா அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளது அந்த முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அதி கூடிய வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றது .எகிப்து தேர்தல் சம்மந்தமாக சரியான புரிதலுக்கு செல்வதற்கு முன்னர் சுருக்கமாக எகிப்து தேர்தல் களத்தில் உள்ள சில கட்சிகளை பற்றிய அறிமுகத்தை தந்து அதன் பின் தேர்தல் முடிவுகள் பற்றி பார்க்கலாம். Read the rest of this entry »
“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 ஆண்டுகள்
OurUmmah: பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 ஆண்டுகள் இந்த டிசம்பர் 6 ஆம் திகதியுடன் பூர்தியடைகின்றது. பாபர் மஸ்ஜித் டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்டது. இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற பயங்கரவாத அமைப்பு “டிசம்பர் 6“ பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளை வெற்றியின் நாளாக பிரகடனப்படுத்தி பல விழாக்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது. Read the rest of this entry »
எகிப்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்: இஸ்லாமிய கட்சிகள் அதிகூடிய செல்வாக்குடன்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளது அந்த முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் 61 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றது .
பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்று சுற்றுகளில் முதல் சுற்றின் முடிவுகளின் படி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி 36.6 வீத வாக்குகளையும் , ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான அன் நூர் 24.4 வீத வாக்குகளையும் விபரல்வாத அரசியல் கட்சி மூன்றாவது இடத்தில் 13.4 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் Read the rest of this entry »
எகிப்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிகளுக்கு 60 வீதமான வாக்குகள்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த திங்கற் கிழமை இடம்பெற்று முடிவுகள் இன்னும் உத்தியோக பூர்வமாக வெளிவராத நிலையில் எகிப்தின் முன்னணி ஊடகங்களும், தேர்தலில் களமிறங்கியுள்ள கட்சிகளும் தேர்தல் முடிவுகளை வெயிட்டு வருகின்றது. அவ்வாறு வெளிவந்துள்ள தகவல்களின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் 60 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 15 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி Freedom and Justice Party (FJP) 40 வீதமான வாக்குகளை பெற்றுள்ளது என்றும் ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான அன் நூர் the Salafist party al-Nour 20 வீதமான வாக்குகளை பெற்றுள்ளது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »
எகிப்து பாராளுமன்ற தேர்தல் முறை ஒரு சிறு பார்வை
அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம் (இஸ்லாஹி)
OurUmmah: எகிப்தில் பாராளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது வெற்றி யாருக்கு ? எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் சர்வாதிகார ஆட்சி மக்கள் எழுச்சி மூலம் அகற்றப்பட்டது. தற்போது இராணுவ அதிகாரத்தின் கீழ் இடைக்கால நிர்வாகம் நிர்வாகத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் 50 க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் ஆயிரத்துக்கும் அதிகமான தமது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளனர்.
அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சிக்கு பின்னர் பிராந்தியம் காணும் மூன்றாவது தேர்தல் இதுவாகும். துனூசியாவிலும் , மொரோகோவிலும் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »
யெமனில் இடைக்கால நிர்வாகத்தின் பிரதமர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது
OurUmmah: யெமனில் இடைக்கால நிர்வாகத்தின் பிரதமராக முஹம்மத் பசிண்ட்வா என்ற முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி உறுப்பினருமான ஒருவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை 33 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி புரிந்த வந்த இவர் . துனிசியா, எகிப்து, லிபியா சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட அழிவுகளை தொடர்ந்து கடந்த புதன் கிழமை பதவி விலகக் தீர்மானித்தார்.
கடந்த பத்து மாதங்களாக யெமனிலும் அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சிப்போராட்டம் நடந்து வருகின்றது . அல்-கைதா போராளிகள் அதிகமாக யெமனில் இருப்பதாக கூறும் அமெரிக்கா வழமை போன்று இந்த சர்வாதிகரிக்கும் தனது பூரண ஆதரவை வழகிவருகின்றது ஆனால் துனிசியா, எகிப்து, லிபியா நாடுகள் போன்று தொடரான மக்கள் எழுச்சிக்கு முன்னால் யாருடைய ஆதரவு இருந்தாலும் பயனற்று போயுள்ளது. Read the rest of this entry »
மொரோகோவிலும் இஸ்லாமிய அரசியல் கட்சி வெற்றி
இணைப்பு-3: OurUmmah: மொரோகோவில் நேற்று பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. இந்த தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி The Justice and Development Party -PJD- என்ற இஸ்லாமிய கட்சி கூடிய ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. என்றாலும் முறிவுகள் உத்தியோக பூர்வமாக வெளியாகவில்லை. இந்த தேர்தலில் 45 வீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 37 வீதமான வாக்காளர்கள் மேட்டுமே தமது வாக்குகளை பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .
எதிர்பார்க்கப் பட்டதைப் போன்று கடந்த 2007ஆம் ஆண்டு தேர்தலைவிடவும் கூறிய மக்கள் வாக்களித்த தேர்தலாக இது பார்க்கப்படுகின்றது. Read the rest of this entry »
மொரோகோவில் இன்று பாராளுமன்ற தேர்தல்
OurUmmah: மொரோகோவில் இன்று பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது .மொரோகோவில் அரசியல் கட்சிகளுக்கும் ஆளும் மன்னர் தரப்புக்கும் இடையிலான உடன்பாட்டை அடுத்து ஏற்பட்ட முடிவுகளின் படி நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெரும் என்று முன்னர் இணக்கம் காணப்பட்டது.
அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் பின்னர் அந்த பிராந்தியம் சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இதுவாகும் , முதலாவது தேர்தல் முதல் மக்கள் எழுச்சி கண்ட நாடான தூனிஸியாவில் இடம்பெற்றது அந்த தேர்தலில் எதிர்பார்த்ததையும் விடவும் கூடிய ஆதரவை அந்நஹ்ழா என்ற இஸ்லாமிய அரசியல் கட்சி பெற்றுள்ளது. 217 ஆசனங்களை கொண்ட சட்டவாக்க சபையில் 90 ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கத. Read the rest of this entry »
எகிப்தில் மீண்டும் ‘ மில்லியன் பேர் ஆர்ப்பாட்டம்’
OurUmmah: எகிப்தில் எதிர் வரும் 28 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , எகிப்தின் இராணுவம் கட்டுப்பாட்டிலான இடைக்கால நிர்வாகத்தையும் இராணுவ நிர்வாகத்தையும் எதிரித்து மக்கள ஆர்ப்பாட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது, படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதன்போது குறைந்தது 33 பேர் உயிரிழந்ததுடன் 1500பேர் காயம் அடைந்துள்ளனர். மக்கள் ஆர்ப்பாட்டம் தொடராக இடம்பெற்று வருகின்றது. இன்று ‘ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டம்’ ஒன்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எகிப்து செய்திகள தெரிவிக்கின்றது. Read the rest of this entry »
இறை நிராகரிப்புகள் மலிந்து விட்டன, அபூபக்கர்கள் தான் இல்லை.’
அபூ அய்யூப் முஹம்மது
OurUmmah: முஸ்லிம்களில் அதிகமானோர் ஈமானோடும் அமலோடும் வாழ்ந்து மரணிப்பதை விரும்புகின்றனர். இந்த விருப்பத்தோடு வாழ்பவன் இஸ்லாத்தின் தூய தன்மை மாசுபடுவதை ஒரு கணமும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவன் தன்னால் முடிந்த அளவு இஸ்லாத்தின் தூய்மையைக் காப்பதற்கு முயற்சிப்பான்.
இஸ்லாத்தின் தூய்மையைப் பாதுகாக்க விரும்புகின்ற ஒவ்வொருவரும் அமைப்புக்களும் இயக்கங்களும் சில உண்மைகளைப் புரிந்து செயற்படுவது கட்டாயக் கடமையாகும். Read the rest of this entry »
நிர்வாணப்படம் வெளியிட்ட ஆலியா
OurUmmah: எகிப்தில் ஆலியா எல்மெஹ்தி எனும் 20 வயது பெண்ணொருவர் தனது வலைப்பக்கத்தில் நிர்வாணப்படம் வெளியிட்டதை தொடர்ந்து ஹுஸ்னி முபாரக் அரசை வீழ்த்திய ஏப்ரல் 6 இயக்கத்தைச் சேர்ந்தவள் தான் இந்த பெண் அவளின் சுத்திர முழக்கம்தான் இது என சில ஊடங்கள் செய்தி வெளியிட்டதனை ஏப்ரல் 6 இயக்கம் கடுமையாக மறுத்துள்ளது.
அந்த இயக்கம் வெளியிட்ட செய்தியில் நாங்கள் பண்பாட்டை மதிப்பவர்கள். அப்படி இருக்கையில் இப்படி நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ள பெண் எப்படி எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியும் என்று அது கேள்வி எழுப்பியுள்ளதுடன். அது தொடர்பான வெளியான செய்திகள் போலியானவை என்று தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
டியுனீஸிய புதிய அரசாங்கம் ஒரு விமர்சனப் பார்வை
அபூ அய்யூப் முஹம்மது
OurUmmah: டியுனீஸிய அரசாங்கம் மதுபானத்தையோ, நாஸ்த்திகத்தையோ, ஓரினச் சேர்க்கையையோ தடை செய்யாது. இவற்றில் ஈடுபடுபவருக்கு தண்டனையும் வழங்காது: முஸலிம்களாகிய நாம் மார்க்கத்தை அலட்டிக் கொள்ளாத வர்களிடம் எதிர் பார்ப்பதை விட இஸ்லாமிய இயக்கம், இஸ்லாமியக் கட்சி, இஸ்லாமிய அரசாங்கம் என்ற பெயரோடு வருபவர்களிடம் பலவற்றை எதிர் பார்த்திருப்பது பழகிப் போன விடயம்.
அந்த வரிசையில் அன்மையில் ‘டியுனீஸியா’வில் ‘அன்னஹ்தா’ மறுமலர்ச்சி கட்சி அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து ‘இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக பல விடயங்கள் நடக்கப் போகிறன’ Read the rest of this entry »
மொரோகோவிழும் இஸ்லாமிய அரசியல் கட்சி வெற்றிபெரும் சாத்தியம்
OurUmmah: மொரோகோவில் அரசியல் கட்சிகளுக்கும் ஆளும் மன்னர் தரப்புக்கும் இடையிலான உடன்பாட்டை அடுத்து ஏற்பட்ட முடிவுகளின் படி நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அதிகாரபூர்வமாக கடந்த 12 ஆம் திகதி ஆரம்பித்துள்ளன. இந்த தேர்தலில் The Justice and Development Party -PJD- நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி என்ற இஸ்லாமிய கட்சி போட்டியிடுகின்றது. இந்த கட்சி நடைபெறப்போகும் தேர்தலில் கூடிய ஆசனங்களைப் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்சி கடந்த 2007 ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அது போட்டியிட அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று. மொரோகோ பாராளுமன்ற 325 ஆசனங்களில் 46 ஆசனங்களை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தகக்து. Read the rest of this entry »
ஆன்மீக வறுமைக்கோட்டின் கீழ் கிலாபத் கோட்பாட்டுச் சிந்தனை
அஹ்மத்ஷா அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)
OurUmmah: முஸ்லிம்களின் கிலாபத் கோட்டையை வீழ்த்த நினைப்பவன் நிச்சயமாக இஸ்லாமிய எதிரியாகத்தான் இருக்க முடியும். ஆனால் நாம் ஏன் வீழ்ந்தோம் என்று சுய விசாரணை செய்யவும் அதன் பாரதூரத்தை மதிப்பீடு செய்யவும் நமது சமூதாயம் மறந்துவிட்டதோ என்று சொல்லுமளவுக்கு எம் நிலைப்பாடு உள்ளது.
கிலாபத்தின் வீழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல எழுவதற்கான பயிற்சியே. இஸ்லாத்தின் எதிரிகளின் பலம் பலவீனம் இவற்றை கண்டறிய வரலாறு போதும். ஆனால் முஸ்லிம்களின் பலம் பலவீனத்தை அறிய ஈமானும் ,அல் குர்ஆன் சுன்னாவின் நிழலில் ஏற்படும் ஒற்றுமை எனும் சங்கமம்தான் தேவையாக உள்ளது. Read the rest of this entry »
ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்
OurUmmah: நாளை ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடபோகும் சர்வதேச உறவுகளை OurUmmah.org வாழ்த்துகிறது. ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் இறைத் தூதர்களான இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் நாளாகும். அதேவேளை ஹஜ் கடமையானது ஒரு சர்வதேச மாநாடாகவும் அமைந்திருக்கின்றது. Read the rest of this entry »
எப்போது எழுவது? இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு முடிவே கிடையாதா?
அபூ அய்யூப் முஹம்மது
OurUmmah: இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்துக்கு புதிய விடயமல்ல.ஏனெனில் சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போராட்டங்கள் மறுமை நாள் வரையும் இருக்கும் என்பது இறைவன் வகுத்துள்ள வழி முறையாகும். இந்த எதிர்ப்புகளுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்பதையும், இந்த வழிகாட்டலின் படி பதில் கொடுத்த முன்னோர்களின் வரலாறு என்ன என்பதையும் மீட்டிப் பார்ப்பது இன்றைய முஸ்லிம்கள் மீதுள்ள கடமையாகும்.
இஸ்லாத்தின் எதிரிகள் குறிப்பாக மேற்குலகம் இஸ்லாமிய சட்ட திட்டங்களையும் எமது நேசத்துக்குரிய தூதர் முஹம்மது (ஸல்)அவர்களையும் திட்டமிட்ட ரீதியில் காலத்துக்குக் காலம் அவமதித்து வருவது உலகறிந்த உண்மையாகும். Read the rest of this entry »
மேற்கு ஏகாதிபத்தியம் ஈரானை தாக்க தயாராகின்றது
OurUmmah: முஸ்லிம் நாடுகளில் மேற்கின் ஏகாதிபத்திற்கு கட்டுப்படாத முதுகெலும்புள்ள நாடாக ஈரான் பல துறைகளில் மேற்கின் பொருளாதார தடைகளையும் மீறி வளர்ந்து வருகின்றது. இஸ்ரேல் என்ற நாடு சட்டவிரோதமானது என்ற நிலைபாட்டில் மிகவும் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது. இதனால் மேற்கின் அடுத்த இலக்கு ஈரான் என்று பல ஆய்வளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில். ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது பிரிட்டன் , அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »
மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்
அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம் (இஸ்லாஹி)
OurUmmah: பிரான்ஸில் கிண்டல், நையாண்டி ஆகியவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் சஞ்சிகையான ‘ஷார்லி எப்தோ’ Charlie Hebdo என்ற பிரான்ஸ் மொழி பத்திரிகை மனிதர்களுக்கான இறுதித் தூதர் முஹமத் (ஸல்) அவர்களை மீண்டும் நையாண்டி செய்து தனது சஞ்சிகையின் முகப்பு பக்கதில் காட்டூன் மற்றும் செய்திகளை வெளியிட்டு வன்முறையை தூண்டியுள்ளது. இதனால் கோபம் கொண்ட இனம் தெரியாதவர்களினால் அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் விதமாக செய்திகளையும் படங்களையும் வெளிட்ட பத்திரிகையை வழமைபோன்று கண்டிக்காத பிரான்ஸ் அரசாங்கம். அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்தை வன்மையாக கண்டித்துள்ளது. Read the rest of this entry »
அமெரிக்காவிடமிருந்து நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்த்தவர்கள் உணர்ந்துகொள்ளட்டும்
OurUmmah: யுனெஸ்கோ அமைப்பு பலஸ்தீனை தனது அமைப்பின் முழு உறுப்பு நாடாக அங்கீகரித்தமையால் அமெரிக்கா யுனெஸ்கோவுக்கு வழங்கி வரும் வருடாந்த நீதியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதை பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் துணைத் தலைவர் பேராசிரியர் குர்சித் அஹமட் கடுமையான முறையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரின் அறிக்கையில், பலஸ்தீன் விடயத்தில் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் நிலை முழுமையாக வெளிப்பட்டுள்ளது. யார் அமெரிக்காவிடமிருந்து நீதியையும் , நியாயத்தையும் எதிர்பார்த்தார்களோ அவர்கள் எவ்வளவு Read the rest of this entry »
இஸ்லாமிய குடியரசை ஏற்படுத்த யூஸுப் அல் கர்ளாவி அழைப்பு
இணைப்பு-2 OurUmmah: கடந்த வெள்ளிக்கிழமை -21-10-2011- கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி நிகழ்த்திய குத்பா உரையில் ‘இஸ்லாமிய ஜனநாயக குடியரசொன்றை எகிப்து, லிபியா, தூனிஸியா உள்ளிட்ட நாடுகளின் புரட்சியாளர்கள் நிறுவ வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார். அரபு முஸ்லிம் நாடுகளில் முதல் மக்கள் எழுச்சி கண்ட நாடான தூனிஸியாவில் முதல் தேர்தல் இடம்பெற்றுள்ளது அந்த தேர்தலில் அதில் எதிர்பார்த்ததையும் விடவும் கூடிய ஆதரவை அந்நஹ்ழா என்ற இஸ்லாமிய அரசியல் கட்சி பெற்றுள்ளது.
217 ஆசனங்களை கொண்ட சட்டவாக்க சபையில் 90 ஆசனங்களை அந்நஹ்ழா கைப்பற்றியுள்ளது, இதேவேளை லிபியாவின் இடைக்கால நிர்வாகம் லிபியா ஒரு இஸ்லாமிய நாடாக விளங்கும் என்று அறிவித்துள்ளது. Read the rest of this entry »
தூனிஸிய தேர்தலில் அந்நஹ்ழா முன்னணியில்
ஜெஸ்மினா பாறூக்
இணைப்பு-2: OurUmmah: நேற்று தூனிஸியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அந்நஹ்ழா இஸ்லாமிய அரசியல் கட்சி முன்னணியில் உள்ளதாக அந்நஹ்ழா தெரிவித்துள்ளது. உத்தியோக பூர்வ முடிவுகள் இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டாலும் எதிர்பார்த்ததை விடவும் பெரும்தொகை மக்கள் வாக்களித்தமையாலும் தொடர்ந்தும் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாலும் நாளை உத்தியோக பூர்வ முடிவுகள் அறிவிக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற மக்கள் கணிப்பீடுகள் அந்நஹ்ழா 25 தொடக்கம் 30 வீதமான இடம்களை கைப்பற்றும் என்று தெரிவித்த நிலையில் அதைவிடவும் அதிகமாக அந்த இஸ்லாமிய அரசியல் கட்சி பெற்றுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தூனிஸியா புலம் பெயர் வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள் அந்நஹ்ழா Read the rest of this entry »


