Our-Ummah.org

One World One Ummah

Archive for February 2010

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அல் அக்ஸா மஸ்ஜித்தினுள் நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது

leave a comment »

இன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஜெருசலம் அல் அக்ஸா மஸ்ஜித்தினுள் நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது . இந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் தாக்குதலில் குறைத்து 6 பேர் காயம் அடைந்துள்ளனர் இந்த தாக்குதலுக்கு துப்பாக்கி , கண்ணீர் புகை , குண்டான் தடி என்பனவும் பயன்படுத்த பட்டுள்ளது

அல் அக்ஸா மஸ்ஜித் வளாகத்தில் நுழைவாயிலில் இஸ்ரேல் பயங்கரவாதம் தனது கோவில் ஒன்றை தேடுவதாக கூறி அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அல் அக்ஸா மஸ்ஜித்தை இடிக்கும் வேலையை தொடர்ந்து செய்யது வருகின்றது இடிய போகும் நிலையில் இருக்கும் மஸ்ஜித்தின் ஒரு பகுதி பாதுகாக்க கோரி முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை காட்டிவருகின்றனர் இப்படியான ஒரு தொகுதி முஸ்லிம்கள் மீதுதான் இஸ்ரேல் தனது பயங்கரவா இராணுவத்தை எவி விட்டுள்ளது . முஸ்லிம் உலகின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இஸ்ரேல் தனது பயங்கரவாதம் தாண்டவத்தை தொடர்கின்றது இவைகளை எதிர்த்த பொது மக்கள் தான் இன்றும் சுட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த வார -ஞாயிற்றுக்கிழமையும் காஸாவுக்கு வடக்கேயுள்ள குடியிருப்புக்களை நோக்கி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஷெல் தாக்குதல் நடாத்தியதில் 5 பலஸ்தீன் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தமை குறிபிடதக்கது

அல் அக்ஸா மஸ்ஜித் வளாகத்தில் அல்மஹ்ரிபா நுழைவாயிலில் இஸ்ரேல் பயங்கரவாதம் தனது கோவில் ஒன்றை தேடுவதாக கூறி அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அல் அக்ஸா மஸ்ஜித்தை இடிக்கும் வேலையை பல தடவைகள் செய்யதுள்ளது . 2004 இல் ஆண்டில் அகழ்வு வேலையைத் செய்யத போது 11ஆம் நூற்றாண்டில் மேற்கின் சிலுவை யுத்தத்தை எதிர்த்து போரிட்ட முஸ்லிம் சாம்ராஜியத்தின் தளபதி சலாஹுத்தீன் ஐயூபி காலத்து தொழுகை அறையும் சிறிய மதரஸா ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது இது இஸ்ரேலிய பயங்கரவாத்தின் மீது பேர் இடியாய் இறங்கியது.

2004 இல் இஸ்ரேல் அல்மஹ்ரிபா நுழைவாயிலில் தோண்டும் போது சலாஹுத்தீன் ஐயூபி காலத்து தொழுகை அறையும் சிறிய மதரஸா ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரபல யூத அகழ்வாராய்ச்சி நிபுணர் யுவல்பரோச்சி தெரிவித்தது இஸ்ரேலிய பயங்கரவாத்தின் மீது விழுந்த இடி என்றுதான் கூற வேண்டும்

Advertisements

Written by poralikall

February 28, 2010 at 6:51 pm

பிரிட்டன் முஸ்லிம் மாணவர்களை சிறையில் தள்ளுகின்றது

leave a comment »

https://i1.wp.com/www.menassat.com/files/images/london%20gaza%20protest.jpg

இன்று பிரிட்டன் நீதிமன்றம் 5  பிரிட்டன் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக தீர்ப்பு கூறி  சிறை தண்டனை வழங்கியுள்ளது   கடந்த வருட ஜனவரி மாதம் இஸ்ரேலின் காஸா மீதான ஆக்கிரமிப்பு தாக்குதல்களை எதிர்த்து இஸ்ரேலின் தூதரகத்துக்கு முன்பாக ஆர்பாட்டம் செய்யத 78 முஸ்லிம் மாணவர்கள்  சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்     இவர்களுக்கு எதிராக பொது சொத்துகளை நாசப் படுத்தினார்கள் என்று போலீஸ் குற்றம் சாட்டி இருந்தது     கைது செய்யப்பட்ட 78 பேரில் 20 பேருக்கு  சிறை தீர்ப்பு இதற்கு முன்னர் வழங்கப்பட்டு விட்டது ஏனையவர்களுக்கான விசாரணை தொடர்கின்றது இரு வாரங்களுக்கு முன்னர் இந்த கோட் 6 முஸ்லிம் வாலிபர்களுக்கு  ஒரு  வருடம் தொடக்கம் 2 வருடங்கள் வரை சிறை தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிபிடதக்கது

இந்த வாலிபர்களுக்கான  வழக்கு விசாரணை சில நிமிடங்கள்தான் நடை பெற்றதாகவும் மிகவும் வேகமாக தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டதாகவும் விமர்சிக்க படுவதுடன் , போலீஸ் -Metropolitan police force- அராஜகங்களுக்கு எதிராக 30 முறைபாடுகள்  போலீஸ் விசாரிக்க தவறி வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன

Written by poralikall

February 27, 2010 at 10:29 pm

தென் அமெரிக்க நாடான சிலியில் பெரும் நிலநடுக்கம்

leave a comment »

தென் அமெரிக்க நாடான சிலியின் மத்திய குதியில் இன்று 8.8 அளவு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 122 பேர் கொல்லப்பட்டுள்ளதாக  கவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் சண்டியாகோவில் இருந்து 325 கிமீ தென்மேற்கே, கொன்செப்சியன் நகரில் இருந்து 115 கிமீ வட-கிழக்கே இன்று அதிகாலை 0634 GMT நேரத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. பரல் என்ற நகரமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக் கபடுகின்றது

ஹவாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் பசிபிக் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னராக அண்டார்க்டிக்கா, மத்திய அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன டைசியாக சிலியில் 1960 ஆம் ஆண்டில் 9.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது அங்கு 1,655 பேர் கொல்லப்பட்டனர்

Written by poralikall

February 27, 2010 at 9:18 pm

துருக்கி அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது

leave a comment »

முஸ்தபா கமால் அதா துர்க்

அரசியல் களஆய்வு:

துருக்கி அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முறுகல், இராணுவ சதி ஒன்றுக்கு   தயார் ஆவதாக கூறி   துருக்கிய இராணுவம்  40 இராணுவ உயர் அதிகாரிகளை கைது செய்ததை தொடர்ந்து  பிரதமர் தையிப் அர்பகான்-Recep Tayyip Erdogan- அரசுக்கும்  துருக்கி இராணுவத்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது  கைதானவர்களில் முன்னால் துருக்கிய  இராணுவ, ஆகாய படை தளபதிகளும் அடங்கும்

துருக்கியில் தான் 1924 மார்ச் 3 இம் திகதி  திங்கள் கிழமை  கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது இறுதியாக துருக்கியில் இஸ்லாமிய சாம்ராஜியதின் கிலாபத்தின் கொடி  இறக்கப்பட்டது    இந்த சாம்ராஜிய அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி,  கிலாபத் அழிக்கபட்டு அடுத்த மாதத்துடன்   86 வருடங்களை முஸ்லிம் உம்மாஹ் எட்ட போகின்றது

இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மனித இனத்திற்கு அருளாய் இருந்த பிரமாண்டமான சாம்ராஜ்யம் மேற்கின் சதியால் அழிக்கப்பட்டது

துருக்கி நாட்டை ஆண்டு வந்த ஒஸ்மானிய  பேரரசு தனது இறுதிக் காலத்தில் வலிமை குன்றியது .  ஒஸ்மானிய பேரரசு தனது 623 ஆண்டுகால வரலாற்றில், கிழக்கு நாடுகளோடும், மேற்கு நாடுகளோடும் தொடர்புகளை வைத்திருந்தது. 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் இது உலகின் மிகவும்  பலம் வாய்ந்த வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.

முதலாம் உலக யுத்தத்தில் தோல்வியை தழுவிய, அன்றைய ஒஸ்மானிய சாம்ராஜ்யத்தை ஆண்ட கலிபா  பதவியில் இருந்து நீக்கபட்டு , மேற்கின் பொம்மையாக செயல்பட்ட    முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய பிறகு . மேற்கு  பாணியில் கல்வி,  கலாச்சாரம் என்ற இஸ்லாமிய அழிப்பு புரட்சியை உருவாக்கினான் . இஸ்லாத்தை  ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  நாடு  பாசிச மயமாகி அரபு மொழி பேசினால் சிறை என்ற நிலை உருவாக்கபட்டது  சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழி திணிப்பு இடம்பெற்றது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்த பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள்படுகொலை செய்யப் பட்டு, மிகுதிபேர் தமது குடியுருப்புகளை விட்டு விரட்டப்பட்டனர். இதனால் இஸ்லாத்தை விட்டுகொடுக்க தயார் இல்லாத ஆர்மேனியர  இலட்ச கணக்கில் கொலை செய்யப்பட்டனர்  அந்த இனப்படுகொலைக்கு பிறகு எஞ்சியிருந்தோறும், பிற இனத்தவர்களும், துருக்கி மொழி மட்டுமே பேச வேண்டுமென கட்டாய படுத்தப் பட்டனர்.

இவன் ஏற்படுத்திய மாற்றங்கள் மேற்கின் முழு அங்கீகாரம் பெற்றது நாட்டின் சட்ட யாப்பானது இந்த யாப்பை பாதுகாக்கும் பொறுப்பு துருக்கி இராணுவத்திடம் யாப்பு மூலம் வழங்க பட்டது இதன் முழு நோக்கமும் இஸ்லாம் மீண்டும் தலை தூக்காது இராணுவத்தின் ஊடாக  துருக்கியை பாதுகாபதாகும்  1960 தொடக்கம் இன்று வரை 4 தடவைகள் இராணுவம் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது

3.3.1924 அன்று மேற்கின் சதி நாச வேலைகளால் கிலாபத் அழிக்கப்பட்ட பின்னர் அன்றைய பிரிட்டிஷ் வெளிநாட்டு செயலாளர்   லோர்ட்   குர்சொன் – Lord Curzon- பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் இப்படி கூரினான் “இந்த விவகாரத்தில் முக்கிய விடையம் என்னவென்றால் துருக்கி அழிக்கபட்டுகொண்டிருகின்றது அது மீண்டும் ஒரு போதும் எழுச்சி பெறாது காரணம்  துருக்கியின் ஆத்மாத்த  பலமான கிலாபத்தையும் , இஸ்லாத்தையும் நாம் அழித்து விட்டோம்”

The British Foreign Secretary at the time, Lord Curzon, boasted in the British Parliament, “The point at issue is that Turkey has been destroyed and shall never rise again, because we have destroyed her spiritual power: the Caliphate (Khilafah) and Islam.”

ஆனாலும் துருக்கி மீண்டும் இஸ்லாமிய அரசியல் நோக்கி நகர முற்படுகின்றது இதைதான் 340  கும் அதிகமான ஆசனங்களை வென்ற இஸ்லாமிய கட்சியின்- Justice and Development Party-வெற்றி கோடிட்டு காட்டுகின்றது

இபோது  துருக்கியில் ஆட்சியில்  இருக்கும் கட்சி இஸ்லாமிய கட்சியாகும் சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் அர்பகானின் மனைவி இஸ்லாமிய உடையில் இராணுவ வைத்தியசாலை ஒன்றுக்கு ஒரு நோயாளியை பார்வையிட செல்ல முற்படும் போது இராணுவத்தால் தடுத்து நிறுத்தபட்டதுடன் இஸ்லாமிய உடையை கழட்டிவிட்டு உள்ளே போகுமாறு அறிவுறுத்தபட்டார்  ஹிஜாபை கழட்ட  மறுத்த பிரதமர் அர்பகானின் மனைவி திரும்பி சென்றார் என்பது குறிபிடதக்கது

கடைசியாக வந்த தகவலின் படி இந்த முறுகல் நிலையை பேசி தீர்வு காண்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காண பட்டுள்ளதாக அறிவிக்கபடுகின்றது.

Written by poralikall

February 25, 2010 at 8:37 pm

12 டாவது நாளாக தொடரும் அமெரிக்க படை தலைமையிலான நேட்டோ தாக்குதல்கள்

leave a comment »

நிலக்கண்ணி வெடிகளால் மட்டும் கொல்லபட்ட நேடோ படை விபரம்

12 டாவது நாளாக தொடரும் அமெரிக்க படை தலைமையிலான நேட்டோ படையினர் மர்ஜாஹின் பல  பகுதிகளை நெருங்குவது மிகவு கடினமானதாக கருதுகின்றனர் , நேட்டோ படையினர் நடத்தும் ஆபரேசன் முஷ்தரக்கிற்கு Moshtarak- எதிராக தலிபான்கள் தங்களது தற்காப்புப் போராட்டத்தை மீண்டும் வலுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் குறிபிடுகின்றன.

கடந்த 21 இம் திகதி இரு  பெரும் எடுப்பிலான அமெரிக்க இராணுவ வான் வழி தரை இறக்கம் படுதோல்வி அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன இரண்டு பகுதிகளில்  தரை இறக்கப்பட்ட இராணுவம் கடும் இழப்புடன் முடக்கப்பட்டதுடன்  திரும்பி அழைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிகின்றன கடந்த நாட்களில் மட்டும் 54 இராணுவ கவச வாகனங்களை நேடோ படை இழந்து விட்டதாகவும் , இரண்டு ட்ரோன் உளவு விமானங்கள் சுட்டு விழுத்த பட்டுள்ளதாகவும் 100 வரை நேட்டோ படை கொல்லபட்டுளளதாகவும்  போராளிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  இந்த ஆண்டு 40 தினங்களுக்குள் 54 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அமெரிக்க  ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆபரேசன் முஷ்தரக்கில்  கொல்லப்படும்  அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையின் நாடுகள் பற்றிய விபரங்கள் இரகசியமாக வைக்கப்படுவதாக நேட்டோ அதிகார் தெரிவித்தமை குறிபிடதக்கது

இது வரை நடந்த போரில் 50  கும் அதிகமான பொது மக்கள்  கொல்ல பட்டுள்ளதாக வேறு  செய்திகள் தெரிவிகின்றன

Written by poralikall

February 24, 2010 at 8:37 pm

இறை சிந்தனை + இஸ்லாமிய எழுச்சி = இஸ்லாமிய இயக்கங்கள் பாகம்- 4

with one comment

M.ஷாமில் முஹம்மட்


அதே போன்று துருக்கியில் பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகானினால் ஆரம்பிக்கப்பட்ட ரபாஹ் இயக்கம் அதன் சிந்தனை களத்தில் வளர்ந்த நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development Party- 2007 ஆண்டு நடந்த தேர்தலில் 341 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது இவ்வாறான ஜனநாயக வழிகளின் ஊடாக ஒரு தேசிய அரசியல் மாற்றதிற்கு முழு நாட்டு மக்களையும் இட்டு செல்லுதல் இவ்வாறு ஏற்படும் மாற்றம் சர்வதேச மாற்றங்களாக பரிமாணம் பெரும் என இவர்கள் நம்புகிறார்கள்

இந்த முதல் வகுப்பார் சம்மந்தமாக முன்வைக்கப்படும் விமர்சனங்களில் பிரதானமாக சில வற்றை பார்க்கமுடியும் ஒன்று இந்த முதல் வகுப்பாரின் அரசியல் கொள்கையும், மற்றும் அரசியல் நடத்தையும் முதல் வகுப்பில் இஹ்வானுல் முஸ்லிமூன், ஜமாஅத்தே இஸ்லாமி ஆகிய இரண்டு இயக்கங்களையும் பார்தோம் எகிப்தில் 1928 இல் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களால் கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமூன், அதே போன்று இந்திய துணைக்கண்டத்தில் 1940 இல் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்காளால் கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி, என்று பார்தோம் இவர்கள் பெரும்பாலும் நடைமுறை அரசியலில் பங்குகொள்வதையும் நவீன கால அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு இஸ்லாத்தை ஒரு தீர்வுத் திட்டமாக முன்வைக்க முயல்வதையும் நடைமுறையில் காண்கின்றோம் இவர்கள் நடைமுறை அரசியல் செய்ய முற்படும்போது பல குறை பாடுகளை கண்டுகொள்ளமுடியும் ஒன்று இவர்கள் கிலாபத்தை ஏற்படுத்துவற்கான நேரடி அரசியல் செயல்திட்டங்களை கொண்டிருப்பதை காணமுடியாது இருக்கிறது , மாற்றமாக நடைமுறை அரசியல் செய்ய முற்படுகின்றனர் . விரிவாக பார்க்க … அல்லது இங்கு கிளிக் செய்யவும் …

Written by poralikall

February 24, 2010 at 11:10 am

உயிருக்குப் போராடும் பலஸ்தீன் பேராசிரியரை விடுதலைசெய்யுமாறு அஹ்ரார் அமைப்பு கோரிக்கை

leave a comment »

ரமல்லா – சிறைக்கைதிகள் தொடர்பான கற்கைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான அஹ்ரார் அமைப்பு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் இஸாம் அல் அஷ்கரை உடனடியாக விடுவிக்கக்கோரி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச ஸ்தாபனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (19.02.2010) அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் ஃபுவாத் அல் ஹஃப்ஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் பௌதீகவியல் பேராசிரியர் அஷ்கர், தொடர்ச்சியான உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு என்பவற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டுக்குச் சேவையாற்றி அதனைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட விடாமல் பலஸ்தீன் விஞ்ஞானிகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை தடுத்துவைத்துள்ளது என ஹஃப்ஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுவரை காலமும் எத்தகைய குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அஷ்கரின் தடுப்புக்காவலை தொடர்ந்தும் நீடிக்குமுகமாக இஸ்ரேலிய வழக்குமன்றத் தலைவரை (நீதிபதி?!!) மருத்துவமனைக் கட்டிலுக்கே அழைத்துவந்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலை அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

பேராசிரியர் அஷ்கரை மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்ட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வழக்குமன்றத் தலைவர் (நீதிபதி?!!), ‘இங்கு பெறப்பட்டுள்ள பல்வேறு மருத்துவச் சான்றிதழ்களின் மூலம் உங்கள் தற்போதைய உடல்நிலை குறித்தும், பல்வேறுபட்ட நோய்கள் மற்றும் உடல் உபாதைகளால் நீங்கள் துன்புற்றுவருவது குறித்தும் நான் நன்கறிவேன். என்றாலும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்யுமுகமாக உங்களை நான் சிறையிலடைத்துத்தான் ஆகவேண்டும்’ என்று தெரிவித்திருப்பதாக ஃபுவாத் அல் ஹஃபஃஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தகவல் Freepalastine

Written by poralikall

February 23, 2010 at 1:21 pm