Our-Ummah.org

One World One Ummah

Archive for March 2010

வதை முகாம்களில் சிதைக்கபட்ட பெண் Dr.ஆபியா சித்தீக்கி

leave a comment »

7 வருடங்கள் வதை முகாம்களில். Dr.ஆபியாவை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன் மீது நடக்கு மாறு வதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார்.

Dr.ஆபியா சித்தீக்கி மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார் இந்த அராஜகம் நடைபெற்று நேற்றுடன் 7 வருடங்கள் ஆகியுள்ளது Dr.ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் . இங்கு அமெரிக்க , பாகிஸ்தானிய ஏஜண்டுகளால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கு ஆளானார் இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். வெளி உலகம் அறிந்து விட்டதால் அமெரிகாவுக்கு கொண்டு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர் இந்த அமெரிக்க பயங்கரவாதிகள்,

இந்த 7 வது வருட பதிப்பு தினத்தில் நேற்று பாகிஸ்தானில் Dr.ஆபியா சிந்தீக்கியை உடனடியாக விடுதலை செய்யகோரி , அமைதியான ஆர்பாட்டங்கள் , விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்பனவும் பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது இந்த நிகழ்ச்சிகளில் Dr.ஆபியா சிந்தீக்கி வதை செயப்பட்ட விதம் விபரிக்க பட்டுள்ளது அவர் பெற்ற வதைகள் மிகவும் பயங்கரமானதும் மனிதாபிமானம் உள்ள எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுகொள்ள முடியாதா அராஜகங்கள் அவர் பெற்ற வதைகளில் சில Dr.ஆபியா சிந்தீக்கியின் தாய் இப்படி கூறுகின்றார் விரிவாக பார்க்க …

Advertisements

Written by poralikall

March 31, 2010 at 8:41 pm

கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் நிகாப் முகத்திரை அணியத் தடை

leave a comment »

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதற்காக அணியும் நிகாப் உடையை தடை விதிக்கும் மசோதாவை கனடாவின் க்யூபெக் மாகாண அரசு நிறை வேற்றியுள்ளது. என்பதுடன் விசாரணை ஒன்றில் பேரில் கைதான எந்த ஒரு பெண்னும் முகத்திரையை நீக்க மறுத்தால் குறித்த பெண்கலுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று கனடா பல்வேறு மாகாணங்களின் போலீஸ் கூறியுள்ளது என்பதுடன் க்யூபெக் மாகாண அரசு முகத்திரை அணியும் பெண்களுக்கு அரச சேவைகள் மற்றும் தனியார் துறை தொழில் போன்ற வற்றை பெற்று கொள்ள தடை செய்யும் சட்டம் ஒன்றையும் சட்டமாக அமுல் படுத்த தீர்மானித்துள்ளது பாலின பாகுபாட்டுக்கு எதிரான நடவடிக்கையாகவும், இரு பாலாருக்கும் சமநிலையை உறுதிபடுத்தும் நோக்கத்துடனும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கனடா கூறியுள்ளது . இந்த சட்டத்தின் படி, சுகாதாரம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சேவைகளை பெறுவதற்கும், வழங்குவதற்கும் வரும் மக்கள் முகத்தை மறைப்பது போன்ற எந்த வித அங்கிகளையும் அணிய முடியாது

அதேவேளை பிரான்ஸில் முகத்தை மூடுவதற்காக அணியும் நிகாப்பை தடை செய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது அதை மேலும் விரிவா அணைத்து பொது இடங்களிலும் அமுல் படுத்தும் சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகள் பிரான்ஸில் நடை பெறுவதாக பிரான்ஸ் அரச நிர்வாக துறை அறிவித்துள்ளது பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோழி பிரான்ஸில் முழுமையாக முகத்தை மூடும் நிகாப்பை தடை செய்வேன் என்று கூறியிருப்பது குறிபிட தக்கது-President Nicolas Sarkozy vowed to push for a total ban of the full-face veil as it was “contrary to the dignity of women.”,

Written by poralikall

March 31, 2010 at 12:41 pm

காஸா சிறுவர்களின் அவலம் பற்றி பேசும் ஒரு ஆவணம்

leave a comment »

மோசடி, சூழ்ச்சி, துரோகம், நயவஞ்சகம் இவற்றுக்குப் பெயர்போனவர்கள்  சியோனிஸ யூதர்கள் என்றால் மிகையாகாது. வரலாறு நெடுகிலும் இத்தகைய குணம் கொண்ட யூத சியோனிஸவாதிகள்  இன்று உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாத சக்திகளாக உருவெடுத்துள்ளனர் . “உங்களைக் கடுமையாக நோவினை செய்து, உங்கள் ஆண்மக்களை அறுத்துகொலை செய்து உங்கள் பெண்மக்களை மட்டும் வாழ விட்ட பிர்அவ்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றினானே அதை நினைத்துப் பாருங்கள்” (2:49) என்று அல்லாஹ் இந்த யூதர்களுக்குச் செய்த அருட்கொடையை நினைவூட்டிய போதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ்வின் உதவியையே மறந்து துரோகம் இழைத்தனர் யூத சியோனிஸவாதிகள் என்பது வரலாறு . இன்று அந்த பிர்அவ்ன் செய்ததையும் மீறி பலஸ்தீனில் ஆண்குழந்தை பெண்குழந்தை என்று பாராமல் மிகவும் நாசகார  குண்டுகளை ஏவி  பலஸ்தீன சிறுவர் சிறுமிகளை வகை தொகை இன்றி கொன்று குவித்து கொண்டிருகின்றது யூத சியோனிஸ பயங்கரவாதம்- ஆவணங்கள் பார்க்கவும்

1

2

Written by poralikall

March 29, 2010 at 10:47 pm

பாபர் மசூதி இடிப்பை அத்வானி வேடிக்கை பார்த்தார் – ஐபிஸ் அதிகாரி சாட்சியம்

leave a comment »

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதை பாதுகாக்க எந்த விதமான முயற்சிகளையும் அத்வானி மேற்கொள்ளவில்லை என்று சிபிஐ நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரியும் அரசு தரப்பு சாட்சியுமான அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, அரசு தரப்பு சாட்சியாக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட சங்கப்பரிவார் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.​ இந்த வழக்கில் இதுவரை 8 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.இந்நிலையில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது குப்தா,​​ அத்வானியின் மெய்க்காவலராகப் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா இன்று ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். தற்போது டெல்லியில் ‘ரா’ பிரிவில் பணியாற்றி வரும் அஞ்சு குப்தா, பாபர் மசூதி இடிப்பு சம்பவ நாளுக்கு முன்பும் பின்பும் அத்வானியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் எங்கெல்லாம் சென்றார் யாரை எல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.’சர்ச்சைக்குரிய இடத்தில் சுமார் 100 பேர் (கர சேவகர்கள்) கூடியிருந்த நிலையில் அங்கு அத்வானி சென்றார். கூட்டத்தினர் மத்தியில் அவர் பேச ஆரம்பித்தார். ஆக்ரோஷமாகவும், உணர்ச்சி வசப்பட்டும் அவர் பேச பேச கூட்டத்தினர் மத்தியில் உணர்ச்சி வேகம் அதிகரித்து பதட்டமான நிலை உருவானதை உணர முடிந்தது’ என்று அஞ்சு குப்தா தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்வானியோடு, இதர பாஜக தலைவர்களான வினய் கட்டியார், பிரமோத் மகாஜன், உமா பாரதி, சாத்வி ரிதாம்பரா, கல்ராஜ் மிஸ்ரா, ஆச்சார்யா தர்மேந்திரா, விஷ்ணு ஹரி டால்மியா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் இருந்ததாக அஞ்சு குப்தா குறிப்பிட்டுள்ளார். பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தனது வாழ்நாளில் மிகவும் துயரமான சம்பவம் என்றும், பாபர் மசூதி இடிப்பு கட்டுப்படுத்த முடியாதபடி, இயல்பாக வெடித்த ஒரு கலவரம் என்றும் அத்வானி கூறி வந்தார்.

ஆனால் அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்த சாட்சியங்கள் அத்வானி தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் அஞ்சு மேலும் சாட்சியம் அளிக்கையில், ‘அத்வானி மற்றும் அவருடன் இருந்த தலைவர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தார்கள்.கரசேவகர்கள் மசூதியை இடிக்கும்போது அது இடிக்கப்படாமல் பாதுகாக்க அத்வானி உட்பட அவருடன் இருந்த தலைவர்கள் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக மசூதி இடிந்து விழுந்த போது மேலே குறிப்பிட்ட எட்டு தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்’ என்று கூறியுள்ளார். இந்திய செய்தி தளமான தட்ஸ்தமிழில் இருந்து

Written by poralikall

March 28, 2010 at 11:25 pm

பாலியல் வதைகள் கற்பழிப்பு போன்ற பெண்கள் மீதான பலாத்காரங்களுக்கு பெண்கள்தான் காரணம்: ஆய்வு

leave a comment »

கற்பழிப்பு சம்பவம் நடப்பதற்கு பெண்கள் பிரதான  காரணமாக அமைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டனில் சமீபத்தில் பாலியல் வதைகள் கற்பழிப்பு போன்ற குற்றங்கள்  குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரம் கற்பழிப்புக்கு  உள்ளான பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர்  ஆயிரம் பேரிடமும்  தாம் கற்பழிக்க பட்டமை  குறித்து வாக்கு மூலம் பதிய பட்டது.இவர்கள்  18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் தான் அதிக அளவில் கற்பழிக்கப்படுகின்றனர் என்றும் . இந்த சம்பவம் நடப்பதற்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக உள்ளனர் எனவும்  பெரும்பாலோர் கருத்து தெரிவித்தனர் இளம் பெண்கள் குட்டை கீழ் ஆடை  போன்ற தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சிகரமாக உடை அணிவதும், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவதும் ,மது அருந்துவதும் இவர்களே வம்பை விலைக்கு வாங்குவதாக உள்ளது என்றும்இன்னும் சிலர், ஆண் நண்பர்களின் வீட்டில் தங்குவதும், விருந்து நிகழ்ச்சிகளில் மேலாடை விலகுவது கூட தெரியாமல் நடனமாடுவதும் ஆண்களை சபலத்துக்குள்ளாகி விடுகிறது என்றும் கூறியுள்ளனர் .

இதுதான்  கற்பழிப்பு குற்றதிற்கான் பிரதான காரணமாக கூறப்பட்டது      .கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடும் மூன்றில் ஒரு ஆண், தான் கற்பழித்ததை ஒப்பு கொள்வதில்லை. இதே போல கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் இந்த சம்பவத்தை போலீசில் சொல்ல முன்வருவதில்லை. இந்த விஷயம் கோர்ட் வரை செல்வதற்கு தயங்குகின்றனர். 42 சதவீத பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டதை போலீசில் புகார் செய்கின்றனர். என்று அந்த  சமீபத்திய  ஆய்வு தெரிவிக்கிறது

Written by poralikall

March 27, 2010 at 10:13 pm

விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் திருமாவளவன்

leave a comment »

நேற்று (21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல – தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர். அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது – அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.

மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி சிறப்பாக இருந்தது. பேரா. அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்கா விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தோழர் திருமா அவர்கள் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது. கூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ‘மக்கா மஸ்ஜித்’ இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் – பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து – ’இஸ்லாத்தை’ விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார் என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ’நாரே தக்பீர்’ முழக்கம் ஒலித்தது.. விரிவாக பார்க்க….

Written by poralikall

March 26, 2010 at 11:00 pm

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம்

leave a comment »

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு  அரசின் வதை முகாம்களில்  வதைக்க படும் மனிதம்

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஷ்டிக்க உலகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்களை ,பலஸ்தீன பொது அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது தமது அறிக்கையில் 34 வது பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் முக்கியமான கால கட்டத்தில் வர இருப்பதாகவும் இந்த தினத்தை இஸ்ரேல சிறைகளில் வதைக்க படும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் பற்றிய விழிபுனர்வுகான வாரமாக கருதி வாரம் முழுவதும் கைதிகள் பற்றிய விழிபுணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யுமாறும் ஏப்ரல் மாதம் 17 திகதி அன்று பலஸ்தீன் அரசியல் கைதிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக பட்டங்களை ஏற்றுமாறும் கூறியுள்ளது

இஸ்ரேலிய சிறைகளில் 7300 கும் அதிகமான் அரசியல் கைதிகள் வதைக்க படுகின்றார்கள் இவர்களில் 33 பேர் பெண்கள் , 300 பேர் சிறுவர்கள் , இவர்களில் 400 பேர் ஜெருசலத்தில் இருந்தும் , 745 பேர் காஸ பகுதியில் இருந்தும் , 6155 பேர் மேற்கு கறை பிரதேசத்தில் இருந்தும் இஸ்ரேலிய வதை முகாம்களில்   வதையுருகின்றனர்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடனேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மிகப் பெரும்பாலான பலஸ்தீன் கைதிகள், கைதிகளைப் பாதுகாக்கும் மனித உரிமைப் பாதுகாப்புக் குழுக்களின் எந்தத் தலையீடுகளுமற்ற நிலையில் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமை அறிக்கைகள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டுகின்றன .

கைதிகள் பற்றி குறிபிடும் மனித உரிமை அமைப்புகள் 98 சதவீதமான பலஸ்தீனர்கள் சுமார் 30 சிறைக்கூடங்களிலும் தடுப்பு முகாம்களிலும் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாகவும், 88 சதவீதமான கைதிகள் கைகள் கட்டித்தூக்கப்பட்ட நிலையில் பலமணிநேரம் நிர்வாணமாகத் தொங்கவிடப்படுவதாகவும் குறிப்பிடுகின்றது.

இதுவரை சுமார் 199 பலஸ்தீன் கைதிகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளின் காரணமாக தடுத்துவைக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளதாக மனித உரிமை அறிக்கைகள் கூறுகின்றது. சரியான மருத்துவ சிகிச்சை வழங்கப்படாத நிலையில் நோயாளிகளான சுமார் 1600 கைதிகள் இஸ்ரேலிய வதை முகாம்களில்  தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக  அறிக்கைகள் குற்றஞ்சாட்டுகின்றது

அனேகமான நோய் பாதிப்புக்கு உள்ளான கைதிகள் இஸ்ரேலிய தடுப்புக் காவலின்போது தொடர்ச்சியான கொடூரமான சித்திரவதைகளின் காரணமாகவே நோய் பாதிப்புக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கபடுகின்றது

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு கைதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கைதிகளின் நலன்களைப் பாதுகாக்க முன்வருமாறு உலகில் உள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புக்களையும் நிறுவனங்களையும் , பலஸ்தீன ஆதரவாளர்களையும் நோக்கி கைதிகள் பாதுகாப்புக்கான பலஸ்தீன் அமைப்புகள் the Free Palestine Alliance (FPA) and Addameer: Prisoners’ Support and Human Rights Association in Palestine அழைப்புவிடுத்துள்ளது.

Written by poralikall

March 24, 2010 at 8:32 pm