Our-Ummah.org

One World One Ummah

Archive for June 2010

அமெரிக்க ஆப்கான் யுத்தம் தோற்று வருகின்றது

leave a comment »

Year US UK Other Total
2001 12 0 0 12
2002 49 3 17 69
2003 48 0 9 57
2004 52 1 7 60
2005 99 1 31 131
2006 98 39 54 191
2007 117 42 73 232
2008 155 51 89 295
2009 317 108 96 521
2010 200 64 58 322
Total 1147 309 434 1890

அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர்  ஆப்கான்  போராளிகளிடம் மண்டியிட்டு வருகின்றது கடந்த பத்து  ஆண்டுகளாக நடந்துவரும் இந்த ஆக்கிரமிப்பு யுத்தம்  போராளிகளை தோற்கடிக்கவில்லை பொதுமக்களை கொன்று குவித்து வருவதுதான் இந்த யுத்தத்தில் அமெரிக்கா புரிந்துள்ள சாதனை.

இந்த யுத்தத்தில்  அமெரிக்க ஆக்கிரமிப்பு படையால்   எதையும்  சாதிக்க முடியவில்லை தனது ஆக்கிரமிப்பு பேய்களை தினமும்  பலிகொடுக்கும் நிலைக்கு இன்று  அமெரிக்கா  வந்துள்ளது கடந்த பத்து வருடங்களில் 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகள் அமெரிக்க மற்றும் நேட்டோ  படைகளுக்கு   அதிகரித்த இழப்புகளை ஏற்படுத்தி   வருகின்றது என்பதுடன் யுத்த செலவீனமும் அமெரிக்காவால் தாங்க முடியாத அளவு அதிகரித்து வருகின்றது இந்த தோல்வியை அமெரிக்க, நேட்டோ இராணுவ தலைமைகள் ஏற்றுகொள்கின்றது இன்று ஆப்கான்  போராளிகள் முப்பது நாட்டு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போராடிவருகின்றனர் என்பது குறிபிடதக்கதுVideo விரிவாக பார்க்க Read the rest of this entry »

Advertisements

Written by poralikall

June 30, 2010 at 7:54 pm

சரியும் அமெரிக்காவும் உயரும் ஆப்கானிஸ்தானும்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

ஆப்கானிஸ்தான் போர்  எதிர்பார்த்ததை விடவும் கடினமானதாகவும் மொதுவானதாகவும் நடைபெறுகின்றது என்று சி.ஐ.ஏ.யின் பணிப்பாளர் லியன் பெனிட்டா தெரிவித்துள்ளார், ஆப்கானில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் அரசாங்க ஊழல், போதைபொருள் கடத்தல், தலிபான் போராளிகளின் தாக்குதல் தொடர்ந்தும் பிரச்சினைக்குரியவை என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க பிரபல்யமான பொருளியல் பத்திரிகையான “வேல் இஸ்டீட்” -wall street journal-ஆப்கான கர்சாயி நிர்வாகம் மிக மோசமான ஊழல் நிறைந்த நிர்வாகம் என்றும் கடந்த மூன்று வருடங்களில் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை ஊழல் செய்து வெளிநாட்டிலுள்ள தமது வங்கி கணக்குகளில் வைப்பு செய்துள்ளதாக கூறியுள்ளது அமெரிக்க ஆப்கான் பொம்மை அதிபர் கர்சாயின் சகோதரரின் அனுசரணையுடன் ஆப்கானிஸ்தானில் போதைபொருட்கள் கடத்தபடுவதாகவும் குற்ற சாட்டுகள் எழுந்துள்ளன தாலிபான் போராளிகளின் கட்டுபாட்டு பகுதிகளில் போதை பொருள் விவசாயம் தடைசெய்யபடுள்ளது என்பது குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by poralikall

June 30, 2010 at 1:28 pm

அது அல்லாஹ்வின் அருட்கொடை . அவன் நாடியவருக்கு அதனை வழங்குகிறான் (அல் குர்ஆன் 5:54)

with one comment

M.ஷாமில் முஹம்மட்

ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் ஒரு பார்வை

உலகில் இன்று அதிகமாம ஆச்சரியமாக பார்க்கப்படும் விடையமாக ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் விடயம் கருதபடுகின்றது ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ள கனிமத் தாதுக்களின் மதிப்பு மட்டும் ஒன்று தொடக்கம் இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் என தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு ட்ரில்லியன் டொலர்கள் என வைத்து கொண்டாலும் 1 ட்ரில்லியன் டொலர் இதை பில்லியன் கணக்கில் -மில்லியன் கணக்கில் அல்ல – சொன்னால் 1000 பில்லியன் டொலர்கள் ஆகும் இவ்வளவு பெரிய கனிமத் தாதுக்களை ஆப்கானிஸ்தான் எப்படிப் பயன்படுத்தப் போகிறது இதை அமெரிக்காவும் மற்ற மேலாதிக்க நாடுகளும் எப்படி சுருட்டப் போகிறது என்பது தான் இன்றைய பொருளாதார உலகின் பிரதான வினா இந்த வினாக்களுக்கு அப்பால் சில விடையங்களை நாம் பார்போம்

லித்தியம் ,இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் இரத்தினம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான் கண்டுகொண்டது என்று அமெரிக்கா கூறியது ஆனால் முதல் முதலில் 1974ஆம் ஆண்டு தெற்கு காபூல் பகுதியில் பல மில்லியன் தொன் நாகம் இருப்பதாக அறியப்பட்டது இந்த தெற்கு காபூலின் நாகப் படிவு பற்றிய ஆய்வை 1974 ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசு ரஷ்யா உதவியுடன் மேற்கொண்டது தொடர்ந்து வந்த காலபகுதியில் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது 1979 தொடக்கம் 1989 வரையிலான 10 வருட ஆக்கிரமிப்புக்கு விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by poralikall

June 29, 2010 at 12:28 am

பாகிஸ்தானில் அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள் ஐவருக்கு பத்து வருட சிறை ! கேரி புரூக்ஸ்க்கு விடுதலை ?

leave a comment »

Gary Brooks Faulkner

S.M.அப்துல்லாஹ்

பாகிஸ்தானில் பயங்கரவாத  நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டார்கள் என்ற குற்றசாட்டில் அஹ்மத் அப்துல்லா , உமர் பாருக், அமன் ஹஸன் ,வாகர் ஹுஸைன் கான் மற்றும் ராமி சம்சம் என்ற ஐந்து அமெரிக்க முஸ்லிம் வாலிபர்கள் இந்த வருடம் ஜனவரிமாதம் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர் இந்த அமெரிக்க முஸ்லிம் வாலிபர்கள் ஐந்து பேரிடம், அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களான CIA , FBI மற்றும்  பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர் இவர்கள் மீதான விசாரணைகள் பல கட்டங்களாக நடைபெற்றது ஐந்து இளைஞர்கள் மீது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது .

அமெரிக்காவின் வாஷிங்டன், விர்ஜினியா மாகாணத்திலிருந்து பாகிஸ்தானுக்கு உறவினர் ஒருவரின் திருமணம் மற்றும் சுற்றுலா நோக்கம் கருதி தாம் வந்ததாகவும் பாகிஸ்தான் வரிய குடும்பங்களுக்கும் அகதிகளுக்கும் உதவும் நோக்குடன் இருந்ததாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர் இவற்றை கருத்தில் கொள்ளாத பாகிஸ்தான் நீதிமன்றம்  நேற்று வியாழகிழமை இவர்களுக்கு தலா பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது இந்த தீர்ப்புக்கு எதிராக இவர்கள் மேல்முறையீடு செய்யவுள்ளனர்

இதே வேளை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த கேரி புரூக்ஸ் புளக்னர் வயது 51  என்ற அமெரிக்க நபர்  கை துப்பாக்கி,  கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யபட்டார் இவர் தான் அஷ்ஷெய்க் உஸாமா பின் லாதினை கொலை செய்ய பாகிஸ்தான் வந்துள்ளதாக கூறியுள்ளார் இவர் தற்போது பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவரின் உறவினர்களின் தகவலின் படி விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by poralikall

June 25, 2010 at 5:36 pm

பிளக் வேட்டர் -Blackwater Worldwide- பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் நூல் ஆசிரியருமான Jeremy Scahill

leave a comment »

File:Blackwater Scahill.jpg

M.ரிஸ்னி முஹம்மட்

பிளக் வேட்டர் -Blackwater Worldwide- பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் -Blackwater: The Rise of the World’s Most Powerful Mercenary Army -என்ற மிகவும் பிரபல்யமான நூலை எழுதியவருமான ஜெர்மி இஸ்காஹில் -Jeremy Scahill- வழகியுள்ள பேட்டி

இவரின் பேட்டியை பார்பதற்கு முன்னர் இங்கு தரப்படும் Blackwater Worldwide சமந்தமான விபரங்களை படித்து விட்டு பார்க்கவும் விளங்குவதற்கு இலகுவாக அமையும்

பிளக் வேட்டர் 1997 இல் எரிக் பிரின்ஸ் – Erik Prince- என்பவனால் உருவாக்கபட்ட அமெரிக்க தனியார் இராணுவ கம்பனி. இது Xe Services LLC என்றும் அழைக்கபட்டது இந்த நிறுவனம் 2007 இல் Blackwater Worldwide என்று பெயர்மாற்றம் பெற்றது இந்த தனியார் இராணுவ அமைப்பு ஒரு வருடத்துக்கு 400,00 உறுபினர்களை பயிற்சி வித்து வருகின்றது. இது இரண்டு பிரதான பிரிவாக இயங்கி வருகின்றது ஒன்று அமெரிக்க தேசிய பாதுகாப்புகான வெளிப்பாட்டையான நடவடிக்கை பிரிவு இரண்டாவாது அமெரிக்க தேசிய பாதுகாப்புகான இருண்ட அல்லது இரகசிய பிரிவு இந்த அமைப்பின் வெளிப்பாட்டையான நடவடிக்கை பிரிவு பொதுவாக அமெரிக்காவிலும் அமெரிக்கா தளம் அமைத்துள்ள 75 நாடுகளிலும் செயல் படுகின்றது இருண்ட அல்லது இரகசிய பிரிவு குறிப்பாக ஈராக் , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , யமன் போன்ற நாடுகளில் இயங்கு கின்றது இந்த இருண்ட அல்லது இரகசிய பிரிவு அமெரிக்க CIA உளவு அமைப்புடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டுள்ளது ,இந்த பிரிவு கொலை , கடத்தல் , அழிவு நாசவேலை போன்றவற்றை செய்து வருகின்றது இதை செய்வதற்கு அமெரிக்க ஒபாமா நிர்வாகம் முழு அனுமதி வழங்கிவருகின்றது என்று குற்ற சாட்டுகள் உள்ளன.விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by poralikall

June 20, 2010 at 12:01 am

Posted in ஈராக்

துருக்கி இஸ்ரேலுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க ஒரு ரோட்மெப்- Road Map தயாரித்துள்ளது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

காஸாவுக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது இஸ்ரேலிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் இதை தொடர்ந்து துருக்கிய பாராளுமன்றம் இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது இதில் . துருக்கியை ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக்குமான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள கோரினர் துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 16 வகையான இராணுவ , ஒப்ந்தங்கள் நடைமுறையில் உள்ளது . இந்த உறவுகளை உறைநிலையில் வைக்க வேண்டும் துருக்கி தீர்மானித்தது

இதை தொடர்ந்து துருக்கி இஸ்ரேல் இந்த தனது இராணுவ தாக்குதல் தொடர்பாக சர்வதேச சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் . இஸ்ரேல் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் , கொல்லப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று துருக்கி கோரியது ஆனால் இவற்றை இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசு புறகணித்து வருகின்றது இதை தொடர்ந்து துருக்கிய கடந்த வியாழகிழமை துருக்கிய பிரதமர் தலைமையில் கூடிய துருக்கி உயர் பாதுகாப்பு சபை இஸ்ரேலுடன் உள்ள அணைத்து இராணுவ உறவுகள் , உடன்படிக்கைகள் என்பன வற்றை முழுமையாக துண்டிக்கும் முகமாக பல படித்தரங்களை கொண்ட ரோட் மெப் ஒன்றை தயாரித்துள்ளது.விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by poralikall

June 19, 2010 at 12:13 pm

இஸ்ரேல் என்ற நாடு யூத மத அடிப்டை கோட்பாடுகளுக்கு மாறானது என்று கூறும் யூதர்கள்

leave a comment »


1948ல் ஐ.நாவின்  தலைமையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான அநியாயம்
விதைக்கப்படுகிறது. யூதர்களுக்கு என்று ஒரு சட்ட விரோத நாடு உருவாக்க படுகின்றது .  கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருந்தும்  ஆக்கிரமிப்பு சட்ட அந்தஸ்தை பெறுகின்றது. யூதர்களின் “ஊடுருவல்” 1948க்கு நெடுங்காலம் முன்பே தொடங்கியது. 1880களிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கிவிட்டார்கள் .

எப்படி இந்தியாவில் பாபர் மஸ்ஜிதை இடிபதற்கு ஆதாரம் அற்ற புராண-இதிகாச கதைகள் காராணமாக அமைந்ததோ அதேபோன்று இஸ்ரேல் உருவாக புராண-இதிகாச கதைகள் ஆதாரமாக அமைந்தது சியோனிஸ்டுகள். பைபிளின் பழைய ஏற்பாட்டின்படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக கூறினார்.  சியோனிஸ்டுகள் தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக பைபிளின் பழைய ஏற்பாட்டினை எடுத்துகொன்டனர் இஸ்ரேல என்ற யூத சியோனிச கற்பனை நாட்டை பலஸ்தீன் என்ற முஸ்லிம் தேசத்தில் இருப்தாக தெரிவித்து 1948ல் ஐ.நா சபையின் தலைமயில் அமெரிக்க , பிரிட்டன் உதவியுடன் இஸ்ரேல என்ற கற்பனை நிஜ உருவம் பெற்றது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by poralikall

June 15, 2010 at 8:40 pm