காஸா மீதான முற்றுகை முடிவுக்கு வரப்போகின்றதா ?
OurUmmah: எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாக தெரிவித்துள்ளார் நேற்று வியாழகிழமை அவர் தெரிவித்துள்ள தகவலில் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் வரவேற்றுள்ளனர் இஸ்ரேலின் 5 ஆண்டுகள நீடிக்கும் காஸா மீதான முற்றுகை சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் அரசு இஸ்ரேலுடன் இணைந்து பல ஆண்டுகளாக அமுல்படுத்தி வந்துள்ளது .
எகிப்தில் இடைக்கால இராணுவ நிர்வாகத்தால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி காஸா மீதான இஸ்ரேலின் 5 ஆண்டுகள நீடிக்கும் முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்ற அவர் அமைச்சராக பதவிக்கு வரமுன்னர் கொண்டிருந்த நிலைப்பாட்டை அன்று ஹமாஸ் பாராட்டி இருந்தது விரிவாக அவரின் பலஸ்தீன் தொடர்பான நிலைபாடுகள் அவரின் புதிய வெளிநாட்டு அமைச்சு பதவிவகிக்கும் காலத்தில் நடவடிக்கைகளாக இருக்கும் என்று ஹமாஸ் நம்பிக்கை வெளியிட்டிருந்தது என்பது குறிபிடத்தக்கது
இது தொடர்பாக ஹமாஸ் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் எகிப்து புதிய வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபியின் காஸா மீதான முற்றுகை தொடர்பாக அவரின் நிலைப்பாடுகளை மற்றும் அதன் நீதியற்ற கொள்கைகளை அவர் நிராகரித்துள்ளமையையும் பாராட்டுகின்றோம் ஆதேபோன்று கேம் டேவிட் – Camp David Accords- உடன்படிக்கை சிதைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்ற அவரின் நிலைபாட்டையும் பாராட்டுகின்றோம் என்றும் அவரின் இந்த நிலைப்பாடுகள் அவரின் புதிய பதவிகாலத்தில் வெளிப்படும் என்று நாம் நம்புகின்றோம் என்றும் தெரிவித்திருந்தது
தற்போது வெளிநாடு அமைச்சராக நியமனம் பெற்றுள்ள நபீல் அல் அரபி தனது புதிய பதவியை பெற்றுக்கொள்ள முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி அல் ஷுரூக் என்ற எகிப்திய அரபு பத்திரிகைக்கு எழுதியிருந்த கட்டுரை ஒன்றில் எகிப்தின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் அபூல் -ஹீத் காலத்தில் எகிப்தின் வெளிநாட்டு கொள்கை தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன் காஸா மீதான முற்றுகையையும் கடுமையாக சாடியிருந்தார் .
இவர் எழுதிய கட்டுரைக்கு பின்னர் இவர் வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது பலரின் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது இந்த நிலையில் இவரின் இந்த புதிய அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது
al-hamthulillah
mohamed ribnas`
April 30, 2011 at 4:13 pm