Our-Ummah.org

One World One Ummah

முஹம்மது (ஸல்); அவர்கள்: கவிதை

with one comment

OurUmmah: ஹாரூண் மூஸாவின் கவிதை: அன்புக்குரிய அடியார்களே! நேசத்துக்குரிய நெஞ்சங்களே! மதிப்புக்குரிய முஸ்லிம்களே! வாருங்கள்.. வள்ளல் நபி போல் வாழ்ந்து வல்லவனின் சுவனத்துக்குச் செல்வோம்; வாருங்கள். மிருக வாழ்வாய் இருந்த மனித வாழ்வை புனித வாழ்வாக்கிய புகழ்பூத்த நபியைப் பின்பற்றுவோம் வாருங்கள்.. பாசத்துக்குரிய குடும்பத்தை விட, நேசத்துக்குரிய உறவுகளை விட, விருப்பத்துக்குரிய செல்வங்களை விட..ஏன் விலைமதிப்பற்ற எமது உயிர்களை விட, வள்ளல் நபி மீது பிரியம் வைப்போம. அவர் போல் நடப்போம்… வாருங்கள்..

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காக்கின்றபுனிதப்போர்கள் பல வந்து போயின. அன்புத் தோழர்களின் உயிர்கள ;உரமாய் அமைய..இறைவனின் ‘கலிமா’ உயர்வாய் ஓங்கியது.  விரிவாக

ஹாரூன் மூஸா


முஹம்மது (ஸல்); அவர்கள்

வசந்த காலம் வந்து விட்டால்,
உலகெங்கும் பூப்பூக்கும்;;;;.
உள்ளங்கள் பூரிக்கும்.
யானை ஆண்டின்
‘ரபீஉல் அவ்வல்’
முதல் வசந்தம் வந்தது.
அரேபிய நாட்டின்
அமைதி நகர் மக்காவில்
அழகிய மகவொன்று பிறந்தது.
இந்தக் குழந்தை தான்,
இறுதித் தூதர் என்பதோ?
அகிலத்தாருக்கு அருட் கொடை என்பதோ?
அல்லாஹ்வின் அடியார்களுக்கு
அழகிய முன்மாதிரி என்பதோ?
அங்கிருந்த யாருக்கும் தெரியாது.

ஆனாலும்
அதிசயங்கள் நிகழ்வதை
அதிகப்பேர் அறிந்தார்கள். இது
அருள் நிறைந்த பிறப்பென்று
ஐயம் தீர உணர்ந்தார்கள்.

தூய கத்னாவோடும்
தூதின் முத்திரையோடும்
குழந்தையைப் பார்த்தோரின்
குதூகலம் குறையவே இல்லை.

மிகச்சிறப்பான பிறப்பென்று
வாய் நிறையப் பேசி
புகழ் பாடிக் களித்தனர்.
புகழப்பட்டவன் “’முஹம்மத்’ எனும்
பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

தாயின் வயிற்றிலேயே
தந்தை ‘அப்துல்லாஹ்’வையும்,
ஆறாம் வயதிலே
தாயார் ‘ஆமினா’வையும் இழந்தார்.
அனாதையாகி அன்புக்காய் ஏங்கினார்.

‘ஹலீமா’ நாயகியின் வளமான வளர்ப்பும்,
‘உம்மு அய்மனின்’ தொடரான அணைப்பும்,
பாட்டன் ‘அப்துல் முத்தலிபின்’ பிரியாத பாசமும்,
நண்பன் ‘அபுபக்ரின்’ நிலையான நேசமும்,
அருமை நபிகளாருக்கு ஆதரவாய் அமைந்தன.
அகத்திலும் முகத்திலும்
ஆனந்தம் அலை மோதியது.

வளரும் வயதிலேயே
வார்த்தையில் “’சாதிக்’ உண்மையாளர்,
நாணயத்தில் “’அமீன்’ நம்பிக்கையாளர், என
நல்ல நாமங்களைப் பெற்றார்.
நன் மதிப்போடு வளர்ந்தார்.

வாலிபத்தில்…
வாலால் போரிடவும்,
குதிரையில் ஏறிடவும்,
வேகமாய் ஓடிடவும்
அறிந்தார்கள்.
உள்ளத்தைப் போன்றே உடலையும்
உறுதியாய் வைத்தார்கள்.
நாள் எல்லாம்
நல்லதைப் புரிந்தார்..
தீயதைத் தவிர்ந்தார்.
காரியத்தில் கண்ணாக,
கற்புக்கு அரனாக,
அழைப்புக்குப் பதிலாக,
தேவைக்கு உதவியாக,
இழப்புக்கு ஈடாக,
இணைவோர்க்கு இன்பமாக,
அனைவருக்கும் அருளாக,
நிகரில்லாத முன்மாதியாக,
வாழ்ந்தார்கள்.

இருபத்தி ஐந்தில் இல்லறத்தில் இணைந்தார்.
செல்வச்சீமாட்டி ‘கதீஜாவை’ மணந்தார்;.
‘பாத்திமா’’ஸைனப்’’றுகையா’’உம்மு குல்சும்’ என
பார் போற்றும் பெண்களைத் தந்தார்கள்.

மனைவி போற்றும் கணவனாக,
மக்கள் மகிழும் தந்தையாக,
மருமக்கள் வியந்த மாமனாக,
பேரர்கள் விளையாடிய பாட்டனாக,
முழுக்குடும்பமும் குதூகளித்த குடும்பஸ்தனாக,
சுற்றங்கள் சூழ்ந்து கொள்ளும் உறவினராக,
அனைவரும் விரும்புகின்ற நண்பனாக,
அன்னியனும் நேசிக்கின்ற அண்டைவீட்டனாக,
எதிரியும் ஏற்கின்ற நீதியளானாக,
அகிலமெல்லாம் அடிபணிகின்ற அரசனாக,
தூதர்களும் துயருகின்ற தலைவராக,
தூய நபி நாதர் திகழ்ந்தார்கள்,

அன்பால்… மரியானாவை விட ஆழமானவர்.
பன்பால்… எவரெஸ்டை விட உயரமானவர்.
பாசத்தில்… பெற்ற தாயிலும் மேலானவர்.
வார்த்தைகள்… அமுதத்தை விட இனிமையானவை.
அம்பை விட நேரானவை.
எண்ணங்கள்… சிறு குழந்தையை போரல் மாசில்லாதவை.
பசுப்பாலை விட தூய்மையானவை.
நடத்தைகள்… ஒப்பிட்டுச்சொல்வதற்கு
நிகரேதும் இல்லாதவை.
ஒப்பற்ற சுவனத்தின்
உச்சத்தில் சேர்ப்பவை.

இப்படியெல்லாம்
அழகான அகத்துக்கும்..
மிக அழகான முகத்துக்கும் சொந்தக்காரராக.
அழகான சொல்லுக்கும்..
மிக அழகான செயலுக்கும் உரிமையாளராக
வாழ்ந்தார்கள்.

அழகிய வாழ்வோடு அன்னல் நபி இருந்தாலும்
அதள பாதாளத்தில் அரேபியா கிடந்தது.

நன்மை தீமையை, நல்லது கெட்டதை,
வகுக்கத் தெரியாத மார்க்கங்களோடும்;;..
நீதி நியாயமோ, ஈன இரக்கமோ,
இல்லாமல் போன சமூகங்களோடும்..
மது மாதுவாலும், சூது வாதாலும்,
மரித்துப் போன குடும்பங்களோடும்..
வாழும் நிலை எண்ணி
கல்பு கனத்தது,தூக்கம் மறுத்தது.

ஏகத்துவம் எதிரொலித்த கஃபாவின் சுவரிலே
ஏகப்பட்ட சிலைகள் தொங்குவதை ஏற்பாரா?
ஏதுமறியா சிறுமிகளை உயிரோடு புதைக்கின்ற
கொடுமையைக் கண்டும் காணாதிருப்பாரா?
கோத்திர வெறியால் தலைகள் உருளும்
கோடூரம் பார்த்து கொதிக்காமல் இருப்பாரா?

‘ஜாஹிலிய்ய’ இருளகற்ற துடியாய்த் துடித்தார்கள்.
அழகிய தீர்வுக்காய் தவியாய்த் தவித்தார்கள்.

இப்போதெல்லாம்
மழை தரும் மேகங்கள்
மாநபிக்கு நிழல் தருவதும்,
நிழல் தரும் மரங்கள்
ஸலாம் கூறுவதும்;,
சாந்தி நபியின் உள்ளத்துக்கு;
தேனாய் இனித்ததது.
தென்றலாய் சுகந்தது.

படைத்தவனின் தொடர்பை பலமாகத் தேடினார்கள்.
‘ஹிரா’க் குகையில் பல இரவுகளைக் கழித்தார்கள்.

நாற்பதாம் வயதில் “’லைலதுல் கத்ர்’ இரவில்
வானவர் ‘ஜிப்ரீல்’ வருகை தந்தார்கள்.
அன்னல் நபியை அனைத்துக் கொண்டு
அருள் மறை குர்ஆனை ஓதிக்கொடுத்தார்கள்.

நெஞ்சு படபடக்க உடல் நடுநடுங்க..
துணைவி ‘கதீஜா’விடம் ஓடோடி வந்தார்கள்.

போர்த்துங்கள்! போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்!
என்றார்கள.;
போர்த்தப்பட்டதும் நடந்ததைச் சொன்னார்கள்.

‘நீங்கள் நல்லவர், நல்லதையே நாடுபவர்,
நாயன் அல்லாஹ் உங்களைக் காத்திடுவான்’ என்று
தேனிலும் இனிய வார்த்தைகளாலும்..
பாசம் மிகுந்த பார்வைமயாலும்;..
பயத்தைக் கலைத்து தைரியத்தை வளர்த்தார்,
பன்பு மிகு மனைவி கதீஜா அவர்கள்.

தீராத பிரச்சினைக்கு தீர்வும்
பாரிய வினாவுக்கு பதிலும்
கிடைத்த மகிழ்ச்சியோடு
வளம் வந்தார் வள்ளல் நபி நாதர்.
‘கதீஜாவே தூங்கிய காலம் கடந்து விட்டது’
என்று கூறி
அறிமுகமற்ற இஸ்லாத்தைச்
அனைவருக்கும் அறிமுகப்படுத்த
அல்லும் பகலும் பாடுபட்டார்கள்.

அருமை மனைவி ‘கதீஜாவும்,’
ஆருயிர் நண்பன் ‘அபூபக்ரும்,’
அறிவிற் சிறந்த ‘அலியாரும்,’
அருகிலிருந்த உறவினரும்
அடிமையாயிருந்த ‘பிலாலும்’
முழுக் குடும்பமாக ‘யாஸிரும்’
மற்றும் பல மனிதர்களும்
தூய இஸ்லாத்தை ஏற்றார்கள்
தூதருக்குத் துணையாய் நின்றார்கள்

‘படைப்புகளை வணங்கும் நிலை நீக்கி
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்;.
அநீதி மிகு மார்க்கங்களைத் ஒதுக்கி விட்டு
நீதி மிகு இஸ்லாத்தில் இணையுங்கள்;.
குறுகிய உலகத்தை விட்டு விட்டு
பரந்த மறுமை நோக்கி நகருங்கள்’ என
அழைப்புப் பணி தொடர்ந்தது.
அப்பாவி முஸ்லிம்களின் அணி வளர்ந்தது போல்
அதிகார முஷ்ரிக்குகளின் கோபமும் வளர்ந்;தது.
இல்லாததை பொல்லாததைச் சொன்னார்கள்.
கல்லாலும் சொல்லாலும் அடித்தார்கள்.
கட்டிப் போட்டு நையப் புடைத்தார்கள.;
அழுகிய குடலை அணிவித்தார்கள்.
கொடுக்கல் வாங்களைத் துண்டித்தார்கள்.
திருமணம் செய்வதற்கு மறுத்தார்கள்.
இப்படி இஸ்லாமிய ஜோதியை அணைத்திட
இன்னோரன்ன கொடுமைகளைப் புரிந்தார்கள்

முஹம்மது நபிகளோ
முஸ்லிம்களைக் காத்திடவும்
இஸ்லாத்தை; நிலைநாட்டிடவும்
அதிகார வர்க்கத்தின் ஆதரவைத் தேடினார்.

மக்காவிலும் சூழவும்
பல கோத்திரங்களை ‘அனுகினார்கள்.
‘தாயிப்’ நகரின் துயர அனுபவமும்..
‘மதீனத்து’ ஹாஜிகளின் சந்திப்பும்..
இரு ‘அகபா’ உடண்படிக்கைகளும்..
மதீனாவில் முஸ்அபின்ஆரம்பப் பணிகளும்..
அபீஸீனியாவுககான முதல் ஹிஜரத்;;;;தும்..
முஸ்லிம்களைக் காப்பதற்கும்;
இஸ்லாத்தை; நிலைநாட்;டுவதற்கும்
நடைமுறைப்படுத்திய திடடங்கள்.தானே.
நாடிச் செய்த பணிகள் தான்.

விதம் விதமான வதைகள் தொடர்ந்தாலும்
கட்டம் கட்டமாக இஸ்லாம் வளர்ந்தது.

‘குறைஷி’க் ‘காபிர்’களால் தாங்க முடியவில்லை
எப்படியாவது இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும்
என்பதில் ஒன்றுபட்டார்கள்;.
திட்டங்கள் போட்டார்கள்..
‘அப்துல்லாஹ்’வின் மகன் முஹம்மதை
அனைவருமாகக் கொன்றிடுவோம்..என்ற
முடிவோடு நபி வீட்டைமுற்றுகையிட்டார்கள்.
அல்லாஹ்வின் அழகிய திட்டமோ
அமைதியாக அமுலானது..
அகிலத்தின்; அருளை ஒழிப்பதால்;..
மனிதருள் மாணிக்கத்தைப் புதைப்பதால்;..
இஸ்லாமிய ஜோதியை அணைக்கலாம்..என
மனப்பால் குடித்த
மக்கத்து மடையர்களின்
திட்மோ தவிடு பொடியானது..

குறைஷிகளின் கோபம் தனியவில்லை
முஹம்மதின் தலையின் விலை
நூறு சிவப்பு ஒட்டகைகள் என
அறைகூவப்பட்டது.

பெயர் போன வீரர்கள்
நாற் திக்கிலும நபியைத் தேடி,
மின்னலைப் போல விரைந்தார்கள்.
நிகரற்ற பரிசைத் கவர்ந்து செல்வதில்..
முழுக்கவனத்துடன் இருந்தார்கள்.

இறைவனின் நாட்டமோ
குறைஷிக் கும்பலால்
தூதரின் உயிரை என்ன?
மயிரையேனும் பெற முடியவில்லை.

ஆருயிர் நண்பன் ‘அபூபக்ரோடு’
அமைதியாக ‘மதீனா’வுள் நுழைந்தார்கள்

பௌர்னமியைக் கண்ட தாமரையாய்..
மதீனத்து மக்களின்
அகமும் முகமும் மலர்ந்தன.

‘தலஅல் பத்ரு அலைனா
மின் ஸனிய்யாத்தில் வதா’ என..
கவி பாடி வரவேற்றார்கள்
கட்டுப்பட்டு ‘பைஅத்’ செய்;தார்கள்.
‘பைஅத்’ செய்து கட்டப்பட்டார்கள.;

இப்படியாக,
மக்காவில் மொட்டு விட்ட இஸ்லாம்..
மதீனாவில் ஆட்சியாக மலர்ந்தது.
‘ஷரீஆ’ சட்டங்கள் அமுலாயின….
தனிமனிதர்களும், குடும்கங்களும்,
கிராமங்களும் ,நகரங்களும்,
சமூகங்களும், ஆட்சி அதிகாரங்களும்
அழகாயின
மக்களின் நிலைமைகள் சீராயின.

உடலும் அறிவும் ஏற்கின்ற,
உள்ளம் சாந்தி பெறுகின்ற,
சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின்
மாதிரியாய் ‘மதீனா’ மாறியது.

முஸ்லிம்களின் அணியைப் போன்றே
குறைஷிகளின் காழ்ப்புணர்ச்சியும் வேகமாய் வளர்ந்தது.

‘யூத’ எதிர்ப்புகள் பலி தீர்க்கும் தருணத்துக்காய்
தவியாயத் தவித்தன.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காக்கின்ற
புனிதப்போர்கள் பல வந்து போயின.
அன்புத் தோழர்களின் உயிர்கள ;உரமாய் அமைய..
இறைவனின் ‘கலிமா’ உயர்வாய் ஓங்கியது.

வெற்றி மேல் வெற்றி வந்தது.
இஸ்லாத்தின் மீது பலருக்கும் பற்று வந்தது.
அலை அலையாக மக்கள் வந்தனர்.
அந்நியமாக ஆரம்பித்த இஸ்லாம்,
அரேபியா எங்கும் அறிமுகமானது.
இருபத்து மூன்றாண்டுகளாக தொடர்ந்த இறைபணி
‘ஈமானில்’ ஆரம்பித்து ‘இமாரத்தில’; முடிவுற்றது.
அறுபத்து மூன்றாடுகளோடு மனிதப்புனிதரின்
மகத்தான வாழ்வு முற்றுப்பெற்றது.

அன்புக்குரிய அடியார்களே!
நேசத்துக்குரிய நெஞ்சங்களே!
மதிப்புக்குரிய முஸ்லிம்களே! வாருங்கள்….
வள்ளல் நபி போல் வாழ்ந்து
வல்லவனின் சுவனத்துக்குச் செல்வோம்; வாருங்கள்.
மிருக வாழ்வாய் இருந்த மனித வாழ்வை
புனித வாழ்வாக்கிய புகழ்பூத்த நபியைப்
பின்பற்றுவோம் வாருங்கள்..

இருளில் தடுமாறிய உலகத்துக்கு
அருள் மிகு ஜோதியாய் வந்தவரைத்
துயர்வோம் வாருங்கள்..

வழி கேட்டின் உச்சத்தில்
வாழ்ந்தோரை
வரலாற்றின் மாதிரியாய்
வார்த்தவரின் ;
வழி நடப்போம் வாருங்கள்

முகக் கண்ணாடி பார்த்து
அழகு பார்ப்போம்..
அழுக்ககற்றுவோம்
இது போல்
நபியைப் ;;பார்த்து
நல் வழி நடப்போம்
நபி வழியில் அழைப்போம்! வாருங்கள்…

நடமாடும் குர்ஆனாய் வாழ்ந்த
நபிகள் நாயகத்தை
சொல்லிலும் செயலிலும் வைப்போம் வாருங்கள்..

பொழிகின்ற மழையைத் தாங்கும் பூமி போல
நபி மொழியை உள் வாங்குவோம் வாருங்கள்..

வாருங்கள் நண்பர்களே வாருங்கள்..
மனித வாழ்வுக்கு
புனிதம் சேர்த்தவரைப்;
பின்பற்றுவோம் வாருங்கள்..
வெற்றி பெற வாருங்கள்

கிணற்றில் விழ்ந்தவனை என்ன செய்வோம?
தாமதமின்றி காப்பாற்றுவோம்.
இது போல்
தவறிய பாதையில்
தொலை தூரம் சென்று விட்ட சமூகத்தை
நபிபால் அழைப்போம்
நபி வழியில் அழைப்போம்! வாருங்கள்; பாசத்துக்குரிய குடும்பத்தை விட,
நேசத்துக்குரிய உறவுகளை விட,
விருப்பத்துக்குரிய செல்வங்களை விட..ஏன்
விலைமதிப்பற்ற எமது உயிர்களை விட,
வள்ளல் நபி மீது பிரியம் வைப்போம.;
அவர் போல் நடப்போம்… வாருங்கள்..
…………….முற்றும்……

…………

Advertisements

Written by poralikall

May 4, 2011 at 9:10 am

One Response

Subscribe to comments with RSS.

 1. மனிதனே!
  ஒரு காசு தந்தவனையும்,
  ஒரு போதும் மறக்காத நீ..
  எண்ணிலா அருள் தந்தவனை
  எங்ஙனம் மறக்கின்றாய்.

  அழுகின்ற பிள்ளையை
  அணைக்கின்ற நீ,
  அல்லல் படுவோரை
  அழிப்பது சரிதானா?

  பயிர்ச்செய்கையில்
  களையகற்றும் நீ,
  நன்மையை ஏவிக் கொண்டே
  தீமையைப் புரியலாமா?

  தடுக்கி விழுந்தவனைத்
  தூக்கி விடும் நீ,
  வீழ்ந்த சமூகத்தை
  மிதிப்பது சரி தானா?

  இறைவன் தந்த வாழ்வை
  இயற்கை மறுப்பதில்லை.
  இலக்கு இல்லாத வாழ்வை
  இறைவன் ஏற்பதில்லை.

  முஸ்லிமே!
  சொல்லிலும் செயலிலும்
  இஸ்லாத்தைக் கலப்போமே.
  சமூக உறவிலே,
  சகோதரத்துவத்தை வளர்ப்போமே
  .
  மனித சட்டங்களின் இடத்திலே,
  இறை சட்டங்களை வைப்போமே..
  இஸம்களின் ஆட்சியை விட்டு விட்டு
  இஸ்லாமிய கிலாபத்தை நட்டுவோமே.

  மக்களே!
  நீங்;கள் கட்டுப்படும் சட்டங்கள்
  இஸ்லாமான பின் பாருங்கள்..
  இருள்கள் நீங்கி, ஒளி பரவியதை..
  தீமைகள் மங்கி , நன்மைகள் ஓங்கியதை..
  குழப்பங்கள் குறைந்து,அமைதி கூடியதை..
  தீய சமூகம் மறைந்து,
  தூய சமூகம் உதிப்பதைக் காண்பீர்கள்.

  நீரில்லாமல் உயிர் வளருமா?
  காற்றில்லாமல் உயிர் வாழுமா?
  அழைப்பில்லாமல் சமூகம் மாறுமா?..
  ஆட்சியில்லாமல் இஸ்லாம் பூரணமாகுமா?.

  இருள்கள் நீங்க.. ஓளி வேண்டுமே!
  இஸம்கள் ஒழிய.. கிலாபத் வேண்டுமே!

  வாருங்கள் நண்பர்களே வாருங்கள்..
  வல்லவன் அல்லாஹ்வின் பால்
  அழைப்போம் வாருங்கள்..
  வள்ளல் நபியின் வழியில்
  அழைப்போம் வாருங்கள்..

  மயிலாடக் கண்டு
  மகிழ்வதைப் போல்..
  சமூகத்தைப் பார்த்து
  சந்தோஷப்படும் நாளை..
  .
  குயில் பாடக் கேட்டு
  குதூகளிப்பதைப் போல்..
  தினச் செய்தியால்
  சந்தோஷப்படும் நாளை,

  நம் வாழ்விலேயே
  நஸீபாக்கு நாயனே!

  யஹ்யா,ஹொரோவபதான

  February 29, 2012 at 3:47 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: